Ajith Kumar : அஜித் குமார் – ஷாலினியுடன் நடிகர் சதீஷ்… ரசிகர்கள் மத்தியில் வைரலாகும் புகைப்படம்!
Ajith Kumar And Sathish : தமிழ் சினிமாவில் பிரபல நாயகனாக இருப்பவர் அஜித் குமார். இவரின் நடிப்பில் இந்த 2025 ஆண்டு மட்டும் 2 படங்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்நிலையில். சமீபத்தில் நடிகர் சதீஷ், அஜித் குமாரை நேரில் சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் அஜித் குமார் (Ajith Kumar) என்றாலே ஒட்டுமொத்த இந்தியா அளவிற்கு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. இவரின் நடிப்பில் வெளியான பல படங்கள் சூப்பர் ஹிட் வெற்றியடைந்திருக்கிறது. மேலும் சினிமாவையும் கடந்து, இந்தியா சார்பாக வெளிநாடுகளில் நடைபெறும் கார் ரேஸ் (Car race) போட்டிகளில் பங்கு பெற்று வருகிறார். இவரின் நடிப்பில் இந்த 2025ம் ஆண்டு மட்டும் 2 படங்கள் வெளியாகியிருக்கிறது. அதில் முதலில் வெளியான படம் விடாமுயற்சி (Vidaamuyarchi) . இயக்குநர் மகிழ் திருமேனியின் (Magizh Thirumeni) இயக்கத்தில் வெளியான இப்படத்தை லைகா ப்ரொடக்ஷ்ன் நிறுவனமானது தயாரித்திருந்தது. இந்த படமானது கடந்த 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வெளியாகி சினிமாவில் ஓரளவு வரவேற்பை பெற்றது. இப்படம் வெளியான ஒரு மாத இடைவெளியில் வெளியான படம் குட் பேட் அக்லி (Good Bad Ugly).
இந்த படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் (Adhik Ravichandran) இயக்கியிருந்தார். கடந்த 2025, ஏப்ரல் மாதத்தில் வெளியான இப்படமானது அதிக வசூல் செய்து நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படத்தை தொடர்ந்து கார் ரேஸ் பயிற்சியில் அஜித் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் நடிகர் அஜித் சமீபத்தில் சென்னைக்கு வந்துள்ளார். இந்நிலையில் நடிகர் அஜித் குமார் மற்றும் அவரது மனைவி ஷாலினி ஆகியோரை நடிகர் சதிஷ் சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சதீஷ் (Sathish) பகிர்ந்துள்ளார். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.




நடிகர் சதீஷ் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு :
View this post on Instagram
நடிகர் சதீஷ் தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராக இருந்து ஹீரோவாக களமிறங்கியிருக்கிறார். ஆரம்பத்தில் படங்களில் துணை நடிகர் போன்ற கதாபாத்திரங்களில் நடித்துவந்த இவர், தற்போது படங்களில் முன்னணி கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாகச் சட்டம் என் கையில் மற்றும் சுமோ போன்ற படங்கள் வெளியாகியிருந்தது. மேலும் படங்களில் நடித்தது வரும் இவர் சமீபத்தில் நடிகர் அஜித் குமாரை நேரில் சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
நடிகர் அஜித் குமாரின் புதிய படம் :
நடிகர் அஜித் குமார் குட் பேட் அக்லி படத்தை தொடர்ந்து, தனது 64வது படத்திலும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணையவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனமானது தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இப்படமானது சுமார் ரூ 250 கோடி பட்ஜெட்டில் உருவாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த அஜித்64 படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கவுள்ளார் என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி ஏற்கனவே தமிழில் நடிகர் விக்ரமின் கோப்ரா படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் ஷூட்டிங் வரும் 2025, நவம்பர் மாதத்தில் தொடங்கவிருக்கும் நிலையில், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.