சசிகுமாரின் ஃப்ரீடம் படத்திலிருந்து வெளியானது ஃப்ரீடம் படத்தின் 2-வது ஸ்னீக் பீக் வீடியோ!
Freedom Movie Sneak Peek 02 | நடிகர் சசிகுமார் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ஃப்ரீடம். இந்தப் படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் படத்தில் இருந்து அடுத்த அடுத்த அப்டேட்களை படக்குழு வெளியிட்டு வருகின்றது.

நடிகர் சசிகுமார் (Actor Sasikumar) தொடர்ந்து இரண்டாவது முறையாக ஈழ தமிழராக நடித்துள்ள படம் ஃப்ரீடம். இந்தப் படத்தை இயக்குநர் சத்ய சிவா இயக்கியுள்ளார். முன்னதாக நடிகர் சசிகுமார் ஈழ தமிழராக நடித்து கடந்த மே மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் டூரிஸ்ட் ஃபேமிலி. இந்தப் படம் முழுக்க முழுக்க ஃபீல் குட் காமெடி படமாக இருந்தது. ஈழ தமிழர் என்ற சீரியசான கான்செப்டை இயக்குநர் மிகவும் லேசாக மக்களிடையே கடத்திச் சென்று இருப்பார். ஆனால் நடிகர் சசிகுமார் தற்போது ஈழ தமிழராக நடித்துள்ள இந்த ஃப்ரீடம் படம் மிகவும் சீரியசான கதையை மையமாக வைத்து உருவாகியுள்ளது. 1995-ம் ஆண்டு ஈழத் தமிழர்களுக்கு நடந்த அடக்குமுறையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது என்று முன்னதாக பேட்டி ஒன்றில் நடிகர் சசிகுமார் தெரிவித்து இருந்தார்.
இணையத்தில் கவனம் பெரும் ஃப்ரீடம் படத்தின் ஸ்னீக் பீக்:
முன்னதாக ஃப்ரீடம் படக்குழு முதல் ஸ்னீக் பீக் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் இந்த ஃப்ரீடம் படத்தில் இருந்து இரண்டாவது ஸ்னீக் பீக் வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் ஈழத்தமிழர்கள் மனித வெடுகுண்டாக மாறி அரசியல் தலைவரை கொலை செய்வது போன்ற காட்சிகள் அமைந்து இருந்தது. இந்த வீடியோ தற்போது ரசிகர்களிடையே அதிக கவனத்தைப் பெற்று வருகின்றது. படம் நாளை 10-ம் தேதி ஜூலை மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் படத்தின் வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.
Also read… நடிகை சாய் பல்லவி இந்தியில் அறிமுகம் ஆகும் படத்தின் ரிலீஸ் தேதி இதோ
ஃப்ரீடம் படத்தின் இரண்டாவது ஸ்னீக் பீக் வீடியோ:
ஃப்ரீடம் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Wach the emotional packed trailer of #Freedom. Brace yourselve for a Jail Break thriller !!
🔗https://t.co/kZ9Hzud7u6#FreedomFromJuly10Music by @GhibranVaibodha
Directed by @Sathyasivadir
Produced by @vijayganapathys @PandiyanParasu@jose_lijomol @thesudevnair @DirectorBose…— Vijaya Ganapathy’s Pictures (@vijayganapathys) July 3, 2025
Also read… தனுஷின் இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது? வைரலாகும் தகவல்
டூரிஸ்ட் ஃபேமிலி மாதிரி ஜாலியான படம் கிடையாது ஃப்ரீடம் படம்:
முன்னதாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நடிகர் சசிகுமார், டூரிஸ்ட் ஃபேமிலி மாதிரி இந்தப் படம் மிகவும் ஃபீல் குட் படமாக ஜாலியான படமாக இருக்காது என்றும், இந்தப் படம் முழுக்க முழுக்க ஈழ தமிழர்களுக்கு எதிரகா நடத்தப்பட்ட வன்கொடுமைகளின் உண்மைச் சம்வங்களை மையமாக வைத்து உருவான படம் என்று தெரிவித்து இருந்தார்.