கதை ரெடி… அடுத்து டைரக்‌ஷன் தான் – சசிகுமார் கொடுத்த மாஸ் அப்டேட்

Sasikumar talks about direction: தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகி தற்போது நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவராக வலம் வருகிறார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அடுத்ததாக தான் இயக்க உள்ள படங்கள் குறித்து பேசியது வைரலாகி வருகின்றது.

கதை ரெடி... அடுத்து டைரக்‌ஷன் தான் - சசிகுமார் கொடுத்த மாஸ் அப்டேட்

சசிகுமார்

Published: 

11 Feb 2026 13:22 PM

 IST

தமிழ் சினிமாவில் நடிகர், திரைப்பட இயக்குனர், திரைப்பட தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் பின்னணிப் பாடகர் என பன்முகத்தன்மை கொண்டவராக வலம் வருகிறார் சசிகுமார். இவர் சினிமாவில் ஆரம்ப காலக்கட்டத்தில் இயக்குநர் பாலாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார். அதனைத் தொடர்ந்து இயக்குநர் அமீர் உடன் இணைந்து அவரது மௌனம் பேசியதே மற்றும் ராம் ஆகியப் படங்களில் இணைந்து பணியாற்றினார். இதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் வெளியான சுப்ரமணியபுரம் படத்தை இயக்கியதன் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார். மேலும் இவர் இயக்குநராக மட்டும் இன்றி படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் தற்போதும் தமிழ் சினிமா ரசிகர்களிடையே கல்ட் மூவி என்று கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து சசிகுமார் ஈசன் என்ற படத்தை இயக்கினார்.

இந்த இரண்டு படங்களைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் படங்களை இயக்குவதை விட்டுவிட்டு தொடர்ந்து நடிகராக நடிக்கத் தொடங்கினார். மேலும் இவர் தேர்வு செய்து நாயகனாக நடிக்கும் படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் சுமார் 16 ஆண்டுகளுக்குப் பிறகு சசிகுமார் மீண்டும் படத்தை இயக்க உள்ளது குறித்து பேட்டி ஒன்றில் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அடுத்து டைரக்‌ஷன் தான் – சசிகுமார் கொடுத்த அப்டேட்:

நடிகர், திரைப்பட இயக்குனர், திரைப்பட இயக்குநர் என மூன்று ஸ்கிரிப்ட்கள் தயாராக உள்ளன, அவற்றை மற்ற ஹீரோக்களுடன் இயக்குவேன். அந்த படங்களில் நடிக்க நான் திட்டமிடவில்லை. எனது அறிமுகப் பணிகள் அனைத்தையும் முடித்துவிட்டேன், எனவே இப்போது எனது விருப்பப் பட்டியல் திட்டங்களில் கவனம் செலுத்தத் தயாராக இருக்கிறேன். இயக்கத் தயார்.

கௌதம் வாசுதேவ் மேனன் பலமுறை என்னிடம் கேட்டதால் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடித்தேன். தலைவர் ரஜினிகாந்தை நான் நேசிப்பதால் பேட்ட படத்தில் நடித்தேன். கிடாரி 2-ன் யோசனை மற்றும் அடிப்படை கதைக்களத்தை இயக்குனருடன் பகிர்ந்து கொண்டேன். அவர் ஒரு முழுமையான ஸ்கிரிப்ட்டுடன் திரும்பி வருவதற்காக நான் காத்திருக்கிறேன் என்று அந்தப் பேட்டியில் தெரிவித்து இருந்தார்.

Also Read… 3 ஆண்டுகளை நிறைவு செய்த டாடா படம்… இயக்குநர் வெளியிட்ட நெகிழ்ச்சிப் பதிவு

இணையத்தில் வைரலாகும் சசிகுமாரின் பேச்சு:

Also Read… Dhanush: நான் நடிக்கவருவதற்கு முன் அந்த வேலையில் ஆர்வம் அதிகம்.. ஆனால் – தனுஷ் பகிர்ந்த விஷயம்!

கால்வாயில் விழுந்த கார்.. 3 பேர் உயிரிழந்த சோகம்..
வெளியான ‘கூஸ்கோர் பண்டிட்’ டீசர்.. வலுக்கும் சர்ச்சை..
நார்தர்ன் லைட்ஸைக் காண சிறப்பு இரவு ரயிலை உருவாக்கிய நார்வே!
திருமண நாளைக் கொண்டாட காத்திருந்த கேக்; டெல்லியில் விபத்தில் உயிரிழந்த இளைஞர்