இந்த சிறுமி யார் தெரியும்? மோட்டிவேஷனுக்கு ஒரு எடுத்துக்காட்டு… ஆனால் 2 வருடமாக படமில்லை… இந்த நடிகை யாருனு தெரியுதா?
Celebrity Childhood Photo: தென்னிந்திய சினிமாவில் பல உச்ச நட்சத்திர நடிகையாக இவர் இருந்துவருகிறார். அவரின் நடிப்பில் பல ஹிட் படங்களும் வெளியாகிவருகிறது . இந்நிலையில் அவர்களின் சிறுவயது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவரும் நிலையில், தற்போது பிரபல நடிகையும், தயாரிப்பாளராக இருக்கும் நடிகையின் சிறுவயது புகைப்படம் வைரலாகிவருகிறது.

தமிழ் நடிகையின் சிறுவயது புகைப்படம்
பான் இந்திய சினிமாவில் நடிகைகள் லீட் கதாபாத்திரங்களில் நடித்து சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் அவர்களின் சிறுவயது புகைப்படங்கள் ரசிகர்களிடையே வைரலாகிவருவது வழக்கம். அந்த விதத்தில் மேலே இருக்கும் புகைப்படத்தில் இருக்கும் சிறுமியின் புகைப்படம் ரசிகர்களிடையே வைரலாகிவருகிறது. அந்த நடிகை யாருனு தெரியாத அளவிற்கு அவரின் சிறுவயது புகைப்படம் இருக்கிறது. இந்த நடிகை தமிழகத்தில் பிறந்து வளர்ந்திருந்தாலும், தெலுங்கு சினிமாவின் (Telugu Cinema) மூலமாகவே கதாநாயகியாக அறிமுகமானார். ஆரம்பத்தில் விளம்பரங்களில் மாடலாக நடித்து தனது வாழ்க்கையை தொடங்கிய இவர், கௌதம் வாசுதேவ் மேனனால் (Gautham Vasudev Menon) கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டிருந்தார். மேலும் இந்த படத்தின் மூலம் மக்களிடையே இவருக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்திருந்தது. முதல் படத்திலே முதல் கணவருடன் இணைந்து நடித்துவரும் இந்த நடிகைதான். மேலும் இவருக்கு தமிழிலும் தொடர்ந்த படங்கள் அமைந்திருந்தது.
கோலிவுட் சினிமாவில் இவருக்கு சிறப்பான ஜோடி என்றால் அது தளபதி விஜய் (Thalapathy Vijay) தான். அவருடன் கிட்டத்தட்ட 3 படங்களில் இணைந்து நடித்திருக்கிறார். இந்த 3 படங்களும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றிருந்தது. இப்போதாவது இந்த கதாநாயகி யாருனு தெரியுதா?. அட இந்த சிறுமி வேறுயாருமில்லை, தமிழக இளைஞர்களின் கனவு கன்னியான சமந்தா ரூத் பிரபுதான் (Samantha Ruth Prabhu).
இதையும் படிங்க: சூர்யாவை அந்த படத்தின்போது பார்த்து பயந்துவிட்டேன்.. ஆனால் – நடிகை சமந்தா ஓபன் டாக்!
நடிகை சமந்தா ரூத் பிரபுவின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் போஸ்ட்:
நடிகை சமந்தா ரூத் பிரபு கடந்த 1987ம் ஆண்டில் ஏப்ரல் 28ம் தேதியில் தமிழகத்தில் உள்ள சென்னையில் பிறந்தார். இவர் ஆரம்பத்தில் சாதாரண நபர்களை போலவே கல்லூரி மற்றும் தனது பள்ளி படிப்பை முடித்தார். பின் மாடலிங் மீது ஆர்வம் கொண்டு சில விளம்பரங்ககளிலும் நடிக்க தொடங்கியிருந்தார். இதனை அடுத்து இவர் கதாநாயகியாக ஏ மாயா சேசாவே என்ற படத்தின் மூலம் தெலுங்கில் கதாநாயகியாக அறிமுகமானார். கடந்த 2010ம் ஆண்டு வெளியான இப்படத்தை இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியிருந்தார். இந்த படத்தை அடுத்ததாக தமிழில் பானா காத்தாடி மற்றும் மாஸ்க்கோவின் காவேரி என்ற படங்களின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
இதையும் படிங்க: குற்றப் புலனாய்வு கதையில்… மம்முட்டி – விநாயகனின் கலம் காவல் படம் எப்படி இருக்கு? விமர்சனங்கள் இதோ!
இந்த படமும் அவருக்கு நல்ல வரவேற்பையே கொடுத்திருந்தது. இதை தொடர்ந்த தற்போது இவர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழி படங்களிலும், வெப் தொடர்களிலும் நடித்துவருகிறார். நடிகை சமந்தா சமீபத்தில் , தி பேமிலி மேன் பட இயக்குநர் ராஜ் நிதிமோரு என்பவரை 2வது திருமணம் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 2 ஆண்டுகளுக்கு பின் சமந்தா, “மா இன்டி பங்காரம்” என்ற தெலுங்கு படத்தில் ஆக்ஷ்ன் கதாநாயகியாக நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.