ஹேப்பி நியூஸ் சொன்ன சமந்தா… உற்சாகத்தில் ரசிகர்கள்
Actress Samantha Ruth Prabhu: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை சமந்தா ரூத் பிரபு உடல் நலக் குறைவு காரணமாக நடிப்பதில் இருந்து சில ஆண்டுகளாக விலகி இருந்தார். இது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்திய நிலையில் மகிழ்ச்சி அளிக்கும் விதமாக செய்தி வெளியாகி உள்ளது.

சமந்தா
தமிழ் சினிமாவில் கடந்த 2010-ம் ஆண்டு முதல் நடிகையாக அறிமுகம் ஆகி தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார் நடிகை சமந்தா ரூத் பிரபு (Actress Samantha Ruth Prabhu). தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் விஜய், விக்ரம், ஜீவா, சித்தார்த், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி ஆகியோர் உடன் இணைந்து பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி தெலுங்கு சினிமாவிலும் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். மேலும் பான் இந்திய மொழிகளில் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த இவர் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நாக சைத்தன்யாவை கதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இந்த ஜோடியைப் பார்த்து ரசிகர்கள் கொண்டாடி வந்தனர்.
ஆனால் இந்த திருமண உறவு 4 ஆண்டுகளுக்கு மேல் நீடிக்கவில்லை. இருவரும் திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக கூறி விவாகரத்து செய்துக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து இருவரும் அவரவர் வாழ்க்கையில் பிசியாகிவிட்டனர். தொடர்ந்து விவாகரத்திற்கு பிறகு பிசியாக நடித்து வந்த நடிகை உடல் நலக்குறைவு காரணமாக படங்களில் நடிப்பதில் இருந்து விலகி இருந்தார். அதனைத் தொடர்ந்து சினிமாவில் தயாரிப்பாளராக என்ட்ரி கொடுத்தார். இவரது தயாரிப்பில் வெளியான சுபம் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் சமந்தா எப்போது மீண்டும் சினிமாவில் நடிப்பார் என்று ரசிகர்கள் ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் குட் நியூஸ் ஒன்று வெளியாகியுள்ளது.
சமந்தாவின் நடிப்பில் தொடங்கியது மா இண்டி பங்காரம் படத்தின் ஷூட்டிங்:
இந்த நிலையில் தற்போது நடிகை சமந்தா முன்னணி வேடத்தில் நடிக்க உள்ள படம் மா இண்டி பங்காரம். இந்தப் படத்தை சமந்தாவின் தயாரிப்பு நிறுவனமே தயாரிக்க உள்ளது. இந்தப் படத்தில் நடிகை சமந்தா உடன் இணைந்து நடிகர்கள் குல்ஷன் தேவையா, திகந்த், கௌதமி மற்றும் மஞ்சுஷா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளனர். இது குறித்த அறிவிப்பு வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றனர்.
Also Read… பிக்பாஸில் கனி – பார்வதி இடையே வெடித்த சண்டை… வைரலாகும் வீடியோ!
நடிகை சமந்தா வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Started our journey with the Muhurtham of #MaaIntiBangaram, surrounded by love & blessings. ✨
We can’t wait to share with you what we’re creating… need all your love and support as we begin this special film. ❤️#MIB #Samantha #TralalaMovingPictures @TralalaPictures… pic.twitter.com/PwICPNsP8R— Samantha (@Samanthaprabhu2) October 27, 2025
Also Read… காவல்துறை அதிகாரியாக நடிக்கும் சசிகுமார்? வைரலாகும் தகவல்