நடன நிகழ்ச்சி போட்டியாளர் டூ பான் இந்திய குயின்.. இந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபலம் யார் தெரிகிறதா?
Child Star to South Indian Queen: தற்போது சினிமா வட்டாரங்களில் நடிகர்கள் மற்றும் நடிகைகளில் சிறுவயது புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது. அந்த வகையில், தற்போது இந்த புகைப்படத்தில் உள்ள நடிகை யார் என கண்டுபிடிக்க முடிகிறதா?. அவர் யார் என விவரமாக பார்க்கலாம்.

நடிகையின் சிறுவயது புகைப்படம்
தென்னிந்திய சினிமாவில் (South Indian cinema) மிகவும் பிரபலமான நடிகைகள் பலர் இருக்கிறார்கள். இந்நிலையில் அவ்வப்போது நடிகைகளின் சிறுவயது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருவது வழக்கமே. அந்த வகையில் மேலே உள்ள புகைப்படத்தில் இருக்கும் நடிகை யார் என தெரிகிறதா?. இவர் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நுழைந்து, பின் மலையாள சினிமாவின் (Malayalam Cinema) மூலம் கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டார். இவர் தமிழ் பெண்ணாக இருந்தாலும், மலையாள சினிமாதான் இவருக்கு முதல் அங்கீகாரத்தை கொடுத்தது. தனது நடிப்பில் வெளியான முதல் படத்தின் மூலமாகவே தென்னிந்தியா முழுவதும் பிரபலமானர். பின் தெலுங்கு மற்றும் தமிழ் சினிமா என நடித்துவந்தார். அந்த வகையில் இவருக்கு தமிழில் முதல் திரைப்படம் நடிகர் தனுஷுடன் (Dhanush) அமைந்தது. இந்த படமும் இவருக்கு சிறப்பான வரவேற்பையே கொடுத்திருந்தகத்து. மேலும் இவரின் நடிப்பில் கடந்த 2024ம் ஆண்டில் வெளியான படம் சுமார் ரூ 350 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்தது.
இவருக்கு நடிகையாக எவ்வளவு திறமை இருக்கிறதோ, அதுபோல் சிறப்பாக நடனமாடுவார். இப்போதாவது யார் என தெரிகிறதா?. இவர் சினிமாவிற்கு வருவதற்கு முன் பல தொலைக்காட்சி நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார். இவர் வேறு யாராயுமில்லை, ரசிகர்களின் மனதை கொள்ளைகொள்ளும் நடிகை சாய் பல்லவி தான் (Sai Pallavi).
இதையும் படிங்க: ஆதிரை மற்றும் வினோத்திற்கு இடையே வெடித்த சண்டை.. விறுவிறுப்பான இன்றைய புரோமோ!
நடிகை சாய் பல்லவி வெளியிட்ட லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் பதிவு :
சாய் பல்லவி தமிழில் கடந்த 2008ம் ஆண்டில் வெளியான ரவி மோகனின் “தாம் தூம்” என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நுழைந்தவர். இந்த படத்திற்கு பின் இவர் வேறு எந்த படங்களிலும் நடிக்காவிட்டாலும், தனது நடன திறமையால், தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் வெளியான நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்றுள்ளார். இதனை தொடர்ந்து ஜார்ஜியாவில் தனது மருத்துவப் படிப்பை தொடர்ந்தார். மருத்துவப் படிப்பிற்கு பின் கடந்த 2014ம் ஆண்டில் வெளியான பிரேமம் என்ற மலையாள படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
இதையும் படிங்க: ஜெயிலர் 2 படத்தில் நடிப்பதை உறுதி செய்த விநாயகன்… வைரலாகும் வீடியோ
இதனை தொடர்ந்த தெலுங்கு மற்றும் தமிழ் மொழி என தென்னிந்திய மொழிகளில் நடிக்க தொடங்கினார். மேலும் இவர் பாலிவுட் சினிமாவிலும் கதாநாயகியாகவும் அறிமுகமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் நடிப்பில் ராமாயணம் என்ற மாபெரும் காவியம் படமாக்கப்பட்டு 2026ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகிறது. மேலும் இவருக்கு தொடர்ந்து இந்தி மொழியில் படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் அதிகரித்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.