Oru Naal Movie: தமிழிலும் வெளியாகும் சாய் பல்லவியின் இந்தி திரைப்படம்.. வெளியானது ‘ஒரு நாள்’ படத்தின் ட்ரெய்லர்!

Oru Naal Movie Trailer: நடிகை சாய் பல்லவி தற்போது தென்னிந்திய சினிமாவையும் கடந்து, இந்தி மொழியில் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். அந்த விதத்தில் இவரின் நடிப்பில் முதலில் உருவாகியுள்ள இந்தி படம்தான் ஏக் தின். இப்படமானது தமிழில் ஒரு நாள் என்ற டைட்டிலில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இதன் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

Oru Naal Movie: தமிழிலும் வெளியாகும் சாய் பல்லவியின் இந்தி திரைப்படம்.. வெளியானது ஒரு நாள் படத்தின் ட்ரெய்லர்!

ஒரு நாள் திரைப்பட ட்ரெய்லர்

Updated On: 

25 Mar 2026 16:41 PM

 IST

மலையாள சினிமாவின் மூலம் கதாநாயகியாக நுழைந்து, தற்போது பான் இந்திய திரைப்படங்களில் நடித்துவருபவர் நடிகை சாய் பல்லவி (Sai Pallavi). இவரின் நடிப்பில் தமிழில் மணிரத்தினத்தின் (Mani Ratnam) இயக்கத்தில் ஒரு படம் மற்றும் தனுஷுடன் டி55 (D55) போன்ற திரைப்படங்களிலும் நடித்துவருகிறார். அந்த விதத்தில், தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் தொடர்ந்து நடித்துவந்த இவர், தற்போது பாலிவுட் சினிமாவிலும் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். இந்தி மொழியில் இவரின் நடிப்பில் முதல் முதலில் உருவாகியுள்ள படம்தான் “ஏக் தின்” (Ek Din). இந்த படமானது தமிழில் “ஒரு நாள்” (Oru Naal) என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் சாய் பல்லவி லீட் கதாநாயகியாக நடிக்க, அவருக்கு ஜோடியக அமீர்கானின் (Aamir Khan) மகன் ஜுனைத் கான் (Junaid Khan) நடித்துள்ளார்.

சாய் பல்லவியின் முதல் இந்தி படம் என்ற நிலையில், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துவருகிறது. இந்த படம் இந்தி மொழியில் மட்டுமே வெளியாகும் என்று நினைத்த நிலையில், தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அந்த விதத்தில் இப்படத்தின் தமிழ் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: ரஜினிகாந்தின் அந்த படத்திற்கு நான் தான் முதலில் பேசப்பட்டேன் – இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து

சாய் பல்லவி – ஜுனைத் கானின் ஒரு நாள் திரைப்படத்தின் ட்ரெய்லர் பதிவு:

சாய் பல்லவியின் ஒரு நாள் பட ட்ரெய்லர் எப்படி இருக்கு:

இந்த் ட்ரெய்லரில் நடிகை சாய் பல்லவி, “மீரா” என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஜுனைத் கான் இதில், மீராவை ஒருதலையாக காதலிக்கும் நபராக நடித்துள்ளார். இவர்கள் இருவருக்குள்ளும் எவ்வாறு காதல் மலர்கிறது. இவர்கள் இருவரின் சந்திப்பு, அவரியலின் உறவு ஒரு நாளில் எவ்வாறு மாறுகிறது என்பதே இப்படத்தின் மைய கருவாக இருக்கும் என தெரிகிறது. இந்த படத்தின் கோட்பாடே ஒரு நாள். அதை வைத்தே இந்த படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படமானது எமோஷனல், காதல் மற்றும் பீல் குட் திரைப்படமாக தயாராகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சாய் பல்லவியின் ஒரு நாள் பட ரிலீஸ் எப்போது:

சாய் பல்லவியின் இந்த படமானது பான் இந்திய படமாக தயாராகியுள்ள நிலையில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவருகிறது. இந்த படத்தை இயக்குநர் சுனில் பாண்டே இயக்க, ஆமிர்கானின் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளராக ராம் சம்பத் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படமானது சிறப்பாக தயாராகியுள்ள நிலையில், வரும் 2026 மே 1ம் தேதி முதல் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஒன்றாக தாய்லாந்திற்கு ஹனிமூன் சென்ற விரோஷ் தம்பதி- ஜோடியாக வெளியிட்ட வீடியோ!

சாய் பல்லவிக்கு இப்படம் இந்தியில் சிறந்த அறிமுக படமாக இருக்கும் என ஏதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதையடுத்து ரன்பீர் கபூருடன் ராமாயணம் என்ற படத்தில் சீதையாக சாய் பல்லவி நடித்துவருகிறார். இப்படத்தின் முதல் பாகம் 2026 தீபாவளியை முன்னிட்டு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us
துரந்தர் படத்தின் இயக்குநருக்கு கங்கனா ரணாவத் பாராட்டு
வழிவிட்ட பயணிகள் - தும்பிக்கையால் நன்றி சொன்ன யானை
ஒரு பிளம்பரின் ஆண்டு வருமானம் ரூ.18 லட்சம் - அதிர்ச்சியில் நெட்டிஷன்கள்
உங்கள் சோகங்களை கேட்க வேண்டுமா? கட்டணம் ரூ.1000 - மும்பையில் கவனம் ஈர்க்கும் நபர்