சூர்யாவின் கருப்பு படத்தின் 2வது பாடல் ரிலீஸ் எப்போது? அப்டேட் கொடுத்த சாய் அபயங்கர்!

Karuppu Movie 2nd Single Update: நடிகர் சூர்யாவின் நடிப்பில் 45வது திரைப்படமாக உருவாகியிருப்பதுதான் கருப்பு. இப்படத்தின் ஷூட்டிங் இன்னும் நடைபெற்றுவரும் நிலையில், கடந்த 2025 தீபாவளியில் இப்படத்தின் முதல் பாடல் வெளியானது. அதைத் தொடர்ந்து இப்படத்தின் 2வது பாடல் ரிலீஸ் எப்போது என்பது குறித்து இப்படத்தின் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் அப்டேட் கொடுத்துள்ளார்.

சூர்யாவின் கருப்பு படத்தின் 2வது பாடல் ரிலீஸ் எப்போது? அப்டேட் கொடுத்த சாய் அபயங்கர்!

கருப்பு திரைப்படம்

Published: 

17 Nov 2025 18:59 PM

 IST

தமிழில் துணை நடிகராக நுழைந்து, தற்போது நடிகர் மற்றும் பிரபல இயக்குநராக இருந்தவருபவர் ஆர்.ஜே.பாலாஜி (RJ.Balaji). இவரின் இயக்கத்தில் தமிழில் இதுவரை 2 திரைப்படங்கள் வெளியான நிலையில், 3வது உருவாகிவரும் படம்தான் கருப்பு (Karuppu). இந்த திரைப்படத்தில் அசத்தல் மற்றும் ஆக்ஷன் நாயகனாக நடிகர் சூர்யா (Suriya) நடித்துள்ளார். இது இவரின் 45வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் சூரியன் நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை திரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan) கதாநாயகியாக நடித்துள்ளார். இந்தப் படத்தில் இவர்களின் ஜோடி பல வருடத்திற்கு பிறகு இப்படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் ஷூட்டிங் கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் தொடங்கியிருந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இப்படத்தின் ஷூட்டிங் முடிந்தது. பின்னும் சில காட்சிகள் எடுக்காமல் இருந்த நிலையில், அது மீண்டும் தற்போது படமாக்கப்பட்டுவருகிறது. இந்த படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் (Sai Abhyankkar) இசையமைத்துவருகிறார்.

இதுதான் இவர் ஒப்பந்தமான முதல் பிரம்மாண்ட பட்ஜெட் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் முதல் சிங்கிள் 2025 தீபாவளியில் வெளியான நிலையில், அது தொடர்ந்து இப்படத்தின் 2வது பாடல் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துவந்தனர். இந்நிலையில் சமீபத்தில் ரசிகர் ஒருவருக்கு எக்ஸ் பக்கத்தில் பதிலளித்த சாய் அபயங்கர், “விரைவில் கருப்பு படத்தின் அடுத்த அப்டேட் வரும்” என கூறியுள்ளார். இது தொடர்பான பதிவு ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: நடிப்பு சக்கரவர்த்தி…. துல்கர் சல்மானின் காந்தா படத்தில் 3வது நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

கருப்பு படத்தின் 2வது பாடல் குறித்து சாய் அபயங்கர் வெளியிட்ட எக்ஸ் பதிவு :

கருப்பு படத்தின் ரிலீஸ் தேதி எப்போது :

ஆர்.ஜே. பாலாஜி மற்றும் சூர்யாவின் கூட்டணியில் உருவாகிவரும் கருப்பு படமானது கடந்த 2025 அக்டோபர் மாதத்தில் தீபாவளியை முன்னிட்டுத்தான் படக்குழு வெளியிட காத்திருந்தது. பின் அந்த படத்தின் சில காட்சிகள் இன்னும் படமாக்கப்படும் இருந்த நிலையில், இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிக்கொண்டேப்போனது. அந்த வகையில் இப்படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். சூர்யாவின் நடிப்பில் முற்றிலும் ஆக்ஷ்ன் மற்றும் தெய்வீகம் போன்ற கதைக்களத்தில் இப்படம் உருவாகிவரும் நிலையில், எதிர்பார்புகளை அதிகரித்துவருகிறது.

இதையும் படிங்க: ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது? வைரலாகும் தகவல்

மேலும் இந்த படத்தின் க்ளைமேக்ஸ் காட்சிகளானது, ரிஷப் ஷெட்டியின் காந்தாரா படத்தில் அமைந்தது போல, சூர்யா கருப்பு சாமி இறங்கி சண்டையிடுவது போன்று காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தைப் படக்குழு வரும் 2026ம் ஆண்டு ஜனவரி 23ம் தேதியில் வெளியிட படக்குழு திட்டமிட்டுவருகிறதாம். இல்லையெனில் 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என வட்டாரங்கள் தெரிவிகிறது.

ரயிலை தவறவிட்டவர்கள் அதே டிக்கெட்டை வைத்து வேறு ரயிலில் பயணிக்க முடியுமா?
ரோகித்துக்கு வட பாவ் வழங்க முயன்ற ரசிகர் - வைரலாகும் வீடியோ
விராட் கோலியை போலவே இருக்கும் சிறுமி.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..
இந்திய கிரிக்கெட்டில் எழுந்த டோப்பிங் சர்ச்சை.. சிக்கிய ராஜன் குமார்..