தமிழில் 2 படம்தான்.. ஆனால் பான் இந்திய பேமஸ்.. இந்த போட்டோவில் இருக்கும் சிறுமி யாருனு தெரிகிறதா?

Actresss Childhood Photos: மு தற்போது சினிமாவில் பிற மொழி நடிகைகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் அந்த நடிகைகளின் அடையாளம் தெரியாத சிறுவயது போட்டோ இணையத்தில் வைரலாவது வழக்கம். அதுபோல் தற்போது பிரபல நடிகை ஒருவரின் புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.

தமிழில் 2 படம்தான்.. ஆனால் பான் இந்திய பேமஸ்.. இந்த போட்டோவில் இருக்கும் சிறுமி யாருனு தெரிகிறதா?

நடிகையின் சிறுவயது புகைப்படம்

Published: 

20 Dec 2025 08:30 AM

 IST

தமிழ் சினிமாவில் தற்போது தமிழ் நடிகைகளை (Tamil Actress) காட்டிலும், மற்றமொழி நடிகைகளுக்கும் வாய்புக்கள் அதிகரித்ததுவருகிறது. அந்த வகையில் தமிழ் சினிமாவில், கன்னடம் (Kannada), தெலுங்கு (Telugu), இந்தி (Hindi) மற்றும் மலையாளம் போன்ற மொழி நடிகைகள் ஆதிக்கம் செலுத்திவருகின்றனர். அதுபோல தமிழ் நடிகைகளும் பிற மொழிகளில் படங்களில் நடித்து ஹிட் கொடுக்கின்றனர். இந்நிலையில் அந்த நடிகைகளின் அடையாளம் தெரியாத சிறுவயது போட்டோஸ் இணையத்தில் வைரலாவது வழக்கம். அதில் தற்போது தமிழில் அறிமுகமான பிரபல கன்னட நடிகை (Kannada Actress) ஒருவரின் புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது. அண்ட் நடிகை யார் தெரியுமா?. இவர் தமிழில் இதுவரை தமிழில் மொத்தமே 2 படங்களில்தான் நடித்திருக்கிறார்., அதில் ஒரு படம் சுமார் ரூ 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து வெற்றிபெற்றது. மேலும் இந்த 2025ல் கன்னடத்தில் நெகடிவ் வேடத்தில் ஒருபடத்தில் நடித்திருந்தார், அந்த படம் உலகளவில் சுமார் ரூ 800 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்தது.

இப்போதாவது அந்த நடிகை யார் என தெரிகிறதா?. மேலும் இவர் தமிழில் இயக்குநர் மணிரத்னத்தின் (Mani Ratnam) இயக்கத்திலும் புது படத்தில் நடிக்கவுள்ளார். அதில் விஜய் சேதுபதி (Vijay sethupathi) தான் கதாநாயகனாம். இப்போதாவது இந்த நடிகை யாருனு தெரிகிறதா? இவர் வேறுயாருமில்லை, மதராஸி (Madharaasi) படத்தில் நடித்த நடிகை ருக்மிணி வசந்த்தான் (Rukmini Vasanth).

இதையும் படிங்க: வீக்கெண்டில் வீட்லேயே ஜாலியா ஒரு படம் பார்க்கனுமா? இந்த நெய்மர் படத்தை மிஸ் செய்யாமல் பாருங்க

நடிகை ருக்மிணி வசந்தின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் பதிவு :


நடிகை ருக்மிணி வசந்தின் சினிமா அறிமுகம் :

நடிகை ருக்மிணி வசந்த் கடந்த 1996ம் ஆண்டில் பெங்களூருவில் உள்ள ஒரு கன்னட குடும்பத்தில் பிறந்தார். இவரின் தந்தை வசந்த் வேணுகோபால் இந்திய ராணுவ வீரர் ஆவார். கடுமையான ராணுவ குடும்பத்தில் பிறந்த ருக்மிணி வசந்த், தனது தனித்தையின் இறப்பிற்கு பின் தாயின் அரவணைப்பில் வளர்ந்துவந்தார். பின் தனது கல்லூரி படிப்பை லண்டனில் தொடர்ந்தார். மேலும் இவருக்கு முதல் அறிமுக படமாக அமைந்தது, பீர்பால் ட்ரோலஜி. இந்த படத்தை அடுத்ததாக இவருக்கு பிரபலத்தை கொடுத்த படம்தான் சப்த சாகரதாச்சே எல்லோ.

இதையும் படிங்க: இயக்குநராக ஆவதுதான் என் லட்சியம், பிழைப்புக்காகத்தான் நடிகரானேன் – பேசில் ஜோசஃப்

கடந்த 2023ம் ஆண்டில் வெளியான இப்படத்தில் ப்ரியா என்ற வேடத்தில் நடித்து பிரபலமானார். இப்படத்தை அடுத்ததாக இவருக்கு தெலுங்கு மற்றும் தமிழில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தது. மேலும் இவருக்கு முதல் தமிழ் படமாக அமைந்தது ஏஸ். கடந்த 2025 மே மாதத்தின் இறுதியில் இப்படம் வெளியானது. இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ருக்மிணி நடித்திருந்தார். மேலும் மதராஸி படத்திலும் மாலதி என்ற வேடத்தில் நடித்து ரசிகர்கள் மனதை கொள்ளையடித்தார். மேலும் தற்போது தெலுங்கில் ஜீனியர் என்.டி.ஆரின் டிராகன் என்ற படத்தில் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் யாஷின் டாக்சிக் படத்தின் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்

பலத்த காற்றால் சாய்ந்த சுதந்திர தேவி சிலை - பிரேசிலில் ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம்
கைலாச மலை – யாரும் ஏற முடியாத தீராத மர்மம்
எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பயோபிக்கில் நடிக்கும் சாய் பல்லவி?
ஜிம்மில் பயிற்சி செய்தபோது திடீரென பார்வை இழந்த 27 வயது இளைஞர்