Trisha Krishnan: சிறப்பான நடிகை.. கருப்பு படத்தில் திரிஷாவை நடிக்கவைக்க காரணம் இதுதான் – ஆர்.ஜே.பாலாஜி!

RJ Balaji About Trisha Casting In Karuppu: இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜியின் இயக்கத்தில் தமிழில் பிரம்மாண்டமாக தயாராகியுள்ள படம்தான் கருப்பு. இந்த படத்தின் சூர்யா ஹீரோவாக நடிக்க, திரிஷா கதாநாயகியாக நடித்துள்ளார். இந்நிலையில் கருப்பு படத்தில் திரிஷாவை நடிக்கவைத்ததற்கான காரணம் பற்றி ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்துள்ளார்.

Trisha Krishnan: சிறப்பான நடிகை.. கருப்பு படத்தில் திரிஷாவை நடிக்கவைக்க காரணம் இதுதான் - ஆர்.ஜே.பாலாஜி!

திரிஷா கிருஷ்ணன் மற்றும் சூர்யா

Updated On: 

19 Apr 2026 10:50 AM

 IST

தென்னிந்திய சினிமாவில் சிறப்பாக தனது நடிப்பின் மூலம் மக்களை கவர்ந்துவருபவர் சூர்யா (Suriya). இவரின் நடிப்பில் தொடர்ந்து புதிய திரைப்படங்கள் தயாராகிவருகிறது. அந்த வகையில், இந்த 2026ம் ஆண்டின் தொடக்கத்திலே வெளியாக தயாராகியுள்ள திரைப்படம்தான் கருப்பு. இதை இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி (RJ Balaji) இயக்க, ஆரம்பத்தில் சூர்யா45 என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த படத்தில் சூர்யா டபுள் வேடத்தில் நடித்துள்ளார். இந்த படமானது நீதி, ஆக்ஷன் மற்றும் தெய்வீகம் கலந்த கதைக்களத்துடன் தயாராகிவருகியுள்ளது. இந்த படத்தில் சூர்யா ஆக்ஷன் நாயகனாக நடிக்க, அவருடன் நடிகை திரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan) கதாநாயகியாக நடித்துள்ளார்.

இவர்களின் ஜோடி ஆறு (Aaru) என்ற படத்திற்கு பிறகு, கிட்டத்தட்ட 21 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் மீண்டும் இணைந்துள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த ஆர்.ஜே.பாலாஜி, கருப்பு படத்தில் திரிஷாவை நடிகையாக நடிக்கவைக்க காரணம் குறித்து தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: அடினா அடி பொக்கு பொக்குனு அடி.. நாங்க நாலு பேரு பாடல் விமர்சனம் குறித்து ஆர்.ஜே.பாலாஜி பேச்சு!

கருப்பு படத்தில் திரிஷாவை நடிக்க வைக்க காரணம் பற்றி ஆர்.ஜே.பாலாஜி பேச்சு:

அதில் ஆர்.ஜே.பாலாஜி பேசுகையில், “கருப்பு படத்திற்கு முன், நான் இன்னொரு படம் இயக்குவதாக இருந்தது. அந்த படத்தில் திரிஷாதான் நடிப்பதாகவும் இருந்தது. அந்த படம் குறித்த வேலைகள் எல்லாமே நடைபெறும்விதத்தில் இருக்கும்போதுதான், சூர்யா சாருடன் கருப்பு படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. மேலும் திரிஷாவுடன் இணையவிருந்த படத்தின் தயாரிப்பு நிறுவனத்திலும் சில சிக்கல்கள் இருந்தது. மேலும் நானும் இந்த கருப்பு படத்தில் இணைய முடிவு செய்திருந்த நிலையில், திரிஷாவை அப்படியே விட்டுவிட முடியது என நினைத்தேன். அதனால் கருப்பு படத்தின் கதையினை அவரிடமும் சொன்னேன்.

இதையும் படிங்க: ரஜினி சாரை போடானு சொல்லிட்டேன் – நடிகை குஷ்பு பகிர்ந்த சுவாரஸ்ய சம்பவம்!

அவருக்கும் இப்படத்தில் அவர் நடித்துள்ள கதாபாத்திரம் மிகவும் பிடித்திருந்தது. மேலும் நானும் இதுகுறித்து சூர்யா சாரிடமும் தெரிவித்தேன். அவருமே ஹேப்பி, திரிஷாவுடன் படத்தில் இணைந்து கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது என சொன்னார். திரிஷாவை வைத்து படம் இயக்கியத்தில் எனக்கு சிறந்த அனுபவம் கிடைத்திருந்தது. அவர் சினிமாவில் கிட்டத்தட்ட 23 ஆண்டுகளாக இருக்காங்க. ஆனால் ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் இருக்கும் இடமே தெரியாமல் இருப்பார். அவர் கிட்டத்தட்ட 15 வருடம் மற்றும் 20 வருடத்திற்கு முன் பண்ண காட்சியை அவரால் இப்போதும் பண்ண முடிகிறது” என அதில் அவர் தெரிவித்திருந்தார்.

கருப்பு திரைப்படம் குறித்து ஆர்.ஜே.பாலாஜி வெளியிட்ட எக்ஸ் பதிவு:

சூர்யாவின் இந்த கருப்பு படமானது வரும் 2026 மே 14ம் தேதி முதல் தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் வெளியாகவுள்ளது. அந்த வகையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 2026ம் ஆண்டு ஏப்ரல் இறுதியில், மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

Follow Us
Related Stories
Thalapathy Vijay: ரூ 250 கோடி இழப்பீடு.. மனைவி சங்கீதாவுக்கு விவாகரத்து கொடுக்க முடிவு செய்த விஜய்? – மகன் – மகளின் நிலை என்ன?
Radhika Sarathkumar: ‘தேசிய விருது உனக்கு வரணும்’.. தாய் கிழவி படத்தை பார்த்து ராதிகாவை பாராட்டிய இயக்குநர் பாரதிராஜா!
விஜய்யின் தலைவா பட பிரச்சனையை பேசிய சத்யராஜ்.. அதற்கு சிபி சத்ரயாஜ் போட்ட பதிவு என்னனு பாருங்க!
Deepika Padukone: ஹேப்பி நியூஸ் சொன்ன தீபிகா படுகோன் – ரன்வீர் சிங் ஜோடி.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்!
Khushbu: ரஜினி சாரை போடானு சொல்லிட்டேன் – நடிகை குஷ்பு பகிர்ந்த சுவாரஸ்ய சம்பவம்!
ஆர்.ஜே. பாலாஜியின் காமெடி நிறைந்த சிங்கப்பூர் சலூன் படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம்? அப்டேட் இதோ
எங்கள் விமானம் தாக்கப்படும் அபாயம் - பாகிஸ்தான் சென்ற ஈரான் குழுவினர் அச்சம்
போரைப் போல மோதிக்கொள்ளும் சிம்பான்சிகள் - காரணம் என்ன?
UPI-ல் ரூ.10,000-க்கு மேல் பணம் அனுப்ப ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டுமா?.. ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
சீனா தயாரித்த செயற்கைக்கோள் மூலம் கண்காணிப்பு? எழுந்த புதிய பாதுகாப்பு கவலை..