கருப்பு படத்திலிருந்து இன்று மாலை வெளியாகும் கருப்பா கூட வா பாடல்… வைரலாகும் ஆர்.ஜே.பாலாஜி பேச்சு
Karuppa Kooda Vaada Lyrical Video Song From Karuppu Movie: நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் கருப்பு. இந்தப் படத்தில் இருந்து தற்போது அடுத்தப் பாடலை வெளியிட படக்குழு திட்டமிட்டு உள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கருப்பு
தமிழ் சினிமா ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்தப் படம் கருப்பு. இந்தப் படத்தில் நடிகர் சூர்யா நாயகனாக நடித்து உள்ளார். நடிகர் சூர்யாவின் நடிப்பில் மிகவும் வித்யாசமான நடிப்பில் திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் கருப்பு. இந்தப் படத்தை இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் சூர்யா உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். இந்த கருப்பு படத்தின் டீசர் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் சூர்யா வழக்கறிஞராக நடித்து உள்ள நிலையில் படத்தின் மீது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்து உள்ளது. மேலும் படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்தின் அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றது.
அந்த வகையில் படம் வருகின்ற மே மாதம் 14-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைப்பெற்றது. இந்த விழாவில் நடிகர்கள் மற்றும் அப்டக்குழுவினர் கலந்துகொண்டு பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இன்று மாலை வெளியாகிறது கருப்பு படத்தில் இருந்து கருப்பா கூட வா:
அதன்படி இந்த கருப்பு படத்தில் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ள நிலையில் படத்தில் இருந்து முன்னதாக பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் படத்தின் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி வெளியிட்ட எக்ஸ் தள பதிவில் கூறியதாவது, கருப்புசாமியை நம்பும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் முக்கியமான பாடலாக இருக்கப் போகும் “கருப்பா கூட வா” பாடல் இன்று மாலை வெளியாக உள்ளது என்று தெரிவித்துள்ளார். இது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… Mehreen Pirzada: பட்டாஸ் பட நடிகைக்கு திருமணம்.. காதலனை கரம்பிடித்தார் நடிகை மெஹ்ரீன் பிர்சாடா!
இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
கருப்புசாமியை நம்பும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் முக்கியமான பாடலாக இருக்கப் போகும்
“கருப்பா கூட வா” பாடல் இன்று மாலை வெளியாக உள்ளது. @SaiAbhyankkar Goosebumps whenever I listen to it !!!🥹🔥@Suriya_offl ❤️ #Karuppu from May 14th ..!!!💥💥💥 pic.twitter.com/ow0hVNa848— RJ Balaji (@RJ_Balaji) April 28, 2026
Also Read… நண்பனை விட ஒருத்தன் லைஃப்வுக்கு தேவை இல்லையடா… 19 ஆண்டுகளை நிறைவு செய்தது சென்னை-28 படம்!