RJ Balaji: ‘கருப்பு’ படத்தைத் தொடர்ந்து ஆர்.ஜே.பாலாஜியுடன் இணையும் நடிகர் இவரா? வைரலாகும் தகவல் இதோ!

RJ Balaji New Film Update: தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் மற்றும் இயக்குனராக இருந்துவருபவர் ஆர்.ஜே.பாலாஜி. இவரின் இயக்கத்தில் சூர்யாவின் கருப்பு திரைப்படம் தயாராகிவருகிறது. அந்த வகையில், இப்படத்தை அடுத்ததாக பிரபல நடிகருடன் கைகோர்க்கவுள்ளாராம். அது யார் என்பது பற்றி தெளிவாக பார்க்கலாம்.

RJ Balaji: கருப்பு படத்தைத் தொடர்ந்து ஆர்.ஜே.பாலாஜியுடன் இணையும் நடிகர் இவரா? வைரலாகும் தகவல் இதோ!

ஆர்.ஜே. பாலாஜி

Published: 

09 Oct 2025 23:22 PM

 IST

கோலிவுட் சினிமாவில் ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரங்க்ளில் நடித்தது மக்களிடையே மிகவும் பிரபலமானவர் ஆர்.ஜே.பாலாஜி (RJ. Balaji). இவரின் நடிப்பில் எல்.கே.ஜி (LKG), சிங்கப்பூர் சலூன், சொர்க்கவாசல், மூக்குத்தி அம்மன் (Mookuthi Amman) என பல்வேறு படங்கள் வெளியாகியுள்ளது. அந்த வகையில் நடிகராக இருந்து பின், இயக்குநராகவும் புதிய அவதாரம் எடுத்தார். இவரின் இயக்கத்தில் முதலில் வெளியான திரைப்படம்தான் மூக்குத்தி அம்மன். இந்த படத்தில் நடிகை நயன்தாரா (Nayanthara) முக்கிய வேடத்தில் நடிக்க, ஆர்.ஜே. பாலாஜியும் இணைந்து நடித்திருந்தார். இந்த படமானது அவருக்கு சூப்பர் ஹிட்டாக அமைந்தது. இந்த படங்களை தொடர்ந்து தற்போது சூர்யாவுடன் (Suriya) கைகோர்த்திருந்தார்.

இவரின் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் படம்தான் கருப்பு (Karuppu). இந்த படத்தில் சூர்யாவுடன் நடிகை திரிஷாவும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில், மேலும் புதிய படத்திற்காக ஆர்.ஜே.பாலாஜி தயாராகிவருவதாக கூறப்படுகிறது. அவர் புதிய கதை ஒன்றை பிரபல நடிகரும், வசன எழுத்தாளருமான கே. மணிகண்டனுக்கு (K. Manikandan) கூறியுள்ளாராம். இது குறித்த தகவல் இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகும் இன்பநிதி.. இயக்குநர் இவரா?

நடிகர் மணிகண்டனுடன் கைகோர்க்கும் ஆர்.ஜே. பாலாஜி

இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜியின் இயக்கத்தில் தயாராகியுள்ள படம்தான் கருப்பு. இந்த படத்தில் நடிகர் சூர்யா இரட்டை வேடத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது ஆர்.ஜே. பாலாஜி புதிய படத்திற்காக தன்னை தயார்படுத்திவருகிறார்.

இதையும் படிங்க: ஆன்மீக சுற்றுழா சென்றுள்ள ரஜினிகாந்த் – இணையத்தில் வைரலாகும் போட்டோஸ்

அந்த வகையில் நடிகர் மணிகண்டனுக்கு புதிய படத்திற்கான கதையை கூறியுள்ளாராம். இந்த படமானது நகைச்சுவை கதைக்களத்துடன் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. சூர்யாவின் கருப்பு படத்தை தொடர்ந்து மணிகண்டனுடன் புதிய படத்தில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவலின் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்திவருகிறது.

கருப்பு திரைப்படம் குறித்து ஆர்.ஜே. பாலாஜி வெளியிட்ட எக்ஸ் பதிவு :

இந்த கருப்பு படமானது இந்த 2025 தீபாவளிக்கு வெளியிட திட்டமிடப்பட்ட நிலையில்,  2026ம் ஆண்டில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இது தொடர்பான தகவல் வெளியாகும் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது. தற்போது சூர்யா வெங்கி அல்லுரி இயக்கத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு, தமிழ் என இரண்டு மொழிகளில் இந்தப் படம் தயாராகிறது.

Related Stories
ஆதார் அட்டைதாரர்களே.. இந்தத் தவறுகள் உங்கள் வங்கிக் கணக்கை காலி செய்துவிடும்.. அரசு எச்சரிக்கை!!
ரூ.1 லட்சத்தில் மின்சார ஜீப்…100 கி.மீட்டர் பயணம்..பீகார் இளைஞரின் புதுமை!
"பாட்டி.. மொத்த சமோசாவும் காலி".. ராணுவ வீரர்களின் செயலால் நெகிழ்ந்த நெட்டிசன்கள்!!
‘கழுத்தை அறுத்த சீன மாஞ்சா கயிறு’.. உயிர்தப்பிய மதபோதகர்..