Kantara 2: ‘காந்தாரா 2’ ஷூட்டிங் நிறைவு.. மேக்கிங் வீடியோவை வெளியிட்ட படக்குழு!
Rishab Shettys Kantara 2 Movie Wrap Up : கன்னட சினிமாவில் முன்னணி நடிகர் மற்றும் இயக்குநர்களில் ஒருவராக இருந்து வருபவர் ரிஷப் ஷெட்டி. இவரின் இயக்கத்தில் காந்தாரா 2 படமானது உருவாகிவரும் நிலையில் , மக்கள் மத்தியில் பிரம்மாண்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளதாகப் படக்குழு, அறிவிப்பு மற்றும் மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளது.

காந்தாரா 2 திரைப்படம்
நடிகர் ரிஷப் ஷெட்டியின் (Rishab shetty) இயக்கத்தில் மற்றும் முன்னணி நடிப்பில் கடந்த 2022ம் ஆண்டு வெளியான திரைப்படம் காந்தாரா 1 (Kantara 1). இந்த படத்தில் நடிகர் ரிஷப் ஷெட்டி முன்னணி கதாநாயகனாக நடித்து அசத்தியிருந்தார். கன்னட மொழியை அடிப்படையாகக் கொண்டு வெளியாகியிருந்த இப்படமானது, பஞ்சுரளி என்ற காவல் தெய்வத்தின் கதைகளைக் கொண்டு வெளியாகியிருந்தது. இந்த படமானது கடந்த 2022ம் ஆண்டில் பான் இந்தியா அளவிற்கு சூப்பர் ஹிட் திரைப்படமாக அமைந்திருந்தது. இப்படமானது தமிழ், தெலுங்கு, மலையாளம் , கன்னடம் மற்றும் இந்தி எனப் பல்வேறு மொழிகளில் வெளியாகியிருந்தது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து காந்தாரா சாப்டர் 1( காந்தாரா 2) (Kantara Chapter 1) திரைப்படமானது அறிவிக்கப்பட்டிருந்தது.
இப்படத்தின் ஷூட்டிங்கும் கிட்டத்தட்ட 1 ஆண்டுகளுக்கும் மேல் நடைபெற்று வந்த நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்திருப்பதாகப் படக்குழு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புடன் காந்தாரா 2 படக்குழு மேக்கிங் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவானது தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
இதையும் படிங்க : கணவருடன் மனக்கசப்பு? – ஹன்சிகா விவாகரத்து செய்யவுள்ளதாக பரவும் தகவல்
காந்தாரா 2 திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ பதிவு :
Wrap Up… The Journey Begins ❤️🔥
Presenting #WorldOfKantara ~ A Glimpse into the making.
Head to Settings -> Audio Track -> Select your language of choice. pic.twitter.com/27eBzOpFrp
— Rishab Shetty (@shetty_rishab) July 21, 2025
காந்தாரா 2 திரைப்படத்தின் ரிலீஸ் எப்போது :
நடிகர் ரிஷப் ஷெட்டியின் முன்னணி நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில், மிக முக்கிய வேடத்தில் நடிகர் ஜெயராம் நடித்துள்ளார். இந்த காந்தாரா 2 திரைப்படமானது காந்தாரா 1 படத்தின் தொடர்ச்சி கதைக்களத்துடன் உருவாகியுள்ளது கூறப்படுகிறது. இந்த படத்தைப் பாகம் 1னை தயாரித்த, அதே தயாரிப்பு நிறுவனமான ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இதையும் படிங்க : ஹரிஸ் கல்யாண் எடுத்த ரிஸ்க் .. ஸ்டண்ட் மாஸ்டர் சொன்ன விஷயம்!
இந்தப் படமானது பான் இந்திய மொழி படமாக உருவாகியுள்ளது. இப்படத்தை ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்திருக்கும் நிலையில், வரும் 2025 அக்டோபர் 2ம் தேதியில் வெளியாகும் எனப் படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இன்னும் இப்படத்தின் ரிலீசிற்கு சில மாதங்கள் மட்டும் இருக்கும் நிலையில், படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
காந்தாரா 2 படத்தின் பட்ஜெட் :
இப்படமானது தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் மிகப் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. இப்படத்தின் முதல் பாகம் சுமார் ரூ.14 கோடியில் தயாராகி, ரூ.400 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்தது. இந்நிலையில் இப்படத்தின் பாகம் 2 சுமார் ரூ.125 கோடிகளில் தயாராகியிருப்பதாகக் கூறப்படுகிறது. இப்படத்தின் ரிலீசிற்கு இன்னும் 2 மாதங்கள் மட்டும் இருக்கும் நிலையில், எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.