நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு படம் முழுவதும் சிறித்துக்கொண்டே இருந்தேன் – யூத் படத்தை வெகுவாகப் பாராட்டிய ரிஷப் ஷெட்டி
Rishab Shetty talks about Youth Movie: தமிழ் சினிமாவில் நடிகர் கென் கருணாஸ் எழுதி இயகி நடித்த படம் யூத். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் இந்தப் படம் குறித்து நடிகரும் இயக்குநருமான ரிஷப் ஷெட்டி பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ரிஷப் ஷெட்டி
கன்னட சினிமாவில் பிரபல நடிகராகவும் இயக்குநராகவும் வலம் வருபவர் ரிஷப் ஷெட்டி. இவரது இயக்கத்தில் கன்னட சினிமாவில் வெளியான காந்தாரா பாகம் 1 மற்றும் காந்தாரா பாகம் 2 ஆகியப் படங்கள் உலக அளவில் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படத்தில் காந்தாரா என்ற தெய்வம் பற்றி எடுக்கப்பட்டு இருந்தது. இந்தப் படங்களுக்குப் பிறகு ரிஷப் ஷெட்டி உலக அளவில் உள்ள சினிமா ரசிகர்களிடையே பிரபலம் ஆனார். இந்தப் படத்திற்காக பல விருதுகளையும் ரிஷப் ஷெட்டி வென்றது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து ரிஷப் ஷெட்டி அடுத்ததாக எந்தப் படத்தை எடுப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர். இந்த நிலையில் ரிஷப் ஷெட்டி சமீபத்தில் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அந்த பதிவில் தமிழ் சினிமாவில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்ற யூத் படத்தைப் பாராட்டி பதிவிட்டு இருந்தார். மேலும் அந்தப் படம் தனக்கு எவ்வளவு பிடித்தது என்பதையும் அந்தப் பதிவில் குறிப்பிட்டு இருந்தார்.
யூத் படத்தை வெகுவாகப் பாராட்டிய ரிஷப் ஷெட்டி:
நீண்ட காலத்திற்குப் பிறகு, ஒரு திரைப்படம் முழுவதிலும் நான் தொடர்ந்து புன்னகைத்துக்கொண்டே இருந்ததை உணர்ந்தேன். யூத் திரைப்படம் அன்பு, நட்பு மற்றும் ஆழமான உணர்வுகளால் நிரம்பியுள்ளது; இது அனைத்து பெற்றோர்களுக்கும் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு நெஞ்சார்ந்த காணிக்கையாகும்.
கதை, இயக்கம் மற்றும் நடிப்பு ஆகிய அனைத்தையும் ஒருவரே ஏற்றுக்கொண்டு, அத்தனை நுணுக்கமான ஆழத்துடன் கையாண்டிருப்பது உண்மையிலேயே பாராட்டுக்குரியது. ஒவ்வொரு நடிகரும் திரையில் மிக இயல்பாகவே உயிர்ப்புடன் சித்தரிக்கப்பட்டுள்ளனர். சூரஜ் வெஞ்சாரமூடு ஐயா, தேவதர்ஷினி அம்மா மற்றும் அந்த நண்பர்கள் குழுவினர் அனைவரையும் திரையில் காண்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… மாதம்பட்டி ரங்கராஜ் – ஜாய் கிரிசில்டா பிரச்சனையில் திருப்பம்- வைரலாகும் பதிவு!
நடிகர் ரிஷப் ஷெட்டி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
After a long time, I found myself smiling throughout an entire film. #Youth is filled with love, friendship, and deep emotions — a heartfelt tribute dedicated to all parents.
Single handedly writing, directing and acting with such nuanced depth is truly commendable. Every actor… pic.twitter.com/uaz5NV2Z2u
— Rishab Shetty (@shetty_rishab) April 20, 2026
Also Read… விக்ரமின் சியான் 63 படத்தின் நாயகி இவரா? வைரலாகும் தகவல்