Draupathi 2 : வரலாற்றை பிரதிபலித்ததா மோகன் ஜி-யின் திரௌபதி 2.. விமர்சனங்கள் இதோ!

Draupathi 2 Movie X Reviews : தமிழ் பிரபல இயக்குநரான மோகன் ஜி-யின் இயக்கத்தில் இன்று 2026 ஜனவரி 23ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகியுள்ள படம்தான் திரௌபதி 2. இந்த படமானது திரையரங்குகளில் ரசிகர்கள் மத்தியில் எவ்வாறு விமர்சனங்களைப் பெற்றுவருகிறது என்பது குறித்து பார்க்கலாம்.

Draupathi 2 : வரலாற்றை பிரதிபலித்ததா மோகன் ஜி-யின் திரௌபதி 2.. விமர்சனங்கள் இதோ!

திரௌபதி 2 திரைப்பட விமர்சனம்

Updated On: 

23 Jan 2026 14:34 PM

 IST

தமிழில் பிரபலமான நடிகராக இருப்பவர் ரிச்சர்ட் ரிஷி (Richard Rishi). இவர் நடிகை ஷாலினி அஜித் குமாரின் (Shalini Ajith kumar) சகோதரர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இவர் தமிழ் சினிமாவில் தொடர்ந்து படங்களில் நடித்துவருகிறார். அந்த வகையில் இவரின் நடிப்பில் இந்த 2026ம் ஆண்டு ஜனவரி 23ம் தேதியில் திரையரங்குகளில் வெளியான படம்தான் திரௌபதி 2 (Drupathi 2). இந்த படத்தை இயக்குநர் மோகன் ஜி (Mohan G) இயக்க, இதை தயாரிப்பாளர் சோழ சக்கரவர்த்தி தயாரித்திருந்தார். இந்த் படத்தில் ரிச்சர்ட் ரிஷி, நடராஜன் சுப்ரமணியன் (Natarajan Subramania), மற்றும் நடிகை ரக்ஷனா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது வெளியீட்டிற்கு முன்னே பல்வறு சர்ச்சைகளை சந்தித்திருந்தது.

பல பிரச்னைகளுக்கு பின் இந்த படமானது 2026 ஜனவரி 23ம் தேதியான இன்று வெளியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட 450 திரையரங்குகளில் இப்படம் வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் எவ்வாறு வரவேற்பை பெறுகிறது என்பது குறித்து பார்க்கலாம்.

இதையும் படிங்க: மங்காத்தா ரீ-ரிலீஸ்.. திரையரங்கில் ரசிகர்களுடன் இணைந்து கொண்டாடிய ஆதிக் ரவிச்சந்திரன்!

திரௌபதி 2 படத்திற்காக ரசிகர்கள் கொடுத்த எக்ஸ் விமர்சனங்கள் குறித்த பதிவு :

இந்த திரௌபதி 2 படமானது முழுக்க குடும்ப ஆடியன்ஸுக்காக தயாரிக்கப்பட்டுள்ளதாம். இந்த படத்தின் கதை திருவண்ணாமலை சுற்றுவட்டாரப்பகுதிகளை மையமாக கொண்டு நகரும் நிலையில், அப்பகுதி மக்களிடையே ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் இசையமைப்பாளர் ஜிப்ரானின் இசையமைப்பில் வெளியான பாடல்கள் மற்றும் பின்னணி இசை நன்றாகவே வந்துள்ளது.

இதையும் படிங்க: கவின் – பிரியங்கா மோகன் படத்தில் இணையும் பிரபல நடிகை… யார் தெரியுமா?

மேலும் நடிகர்களான ரிஷி மற்றும் நடராஜன் சுப்ரமணியன் நடிப்பு நன்றாகவே வந்துள்ளதாம். மேலும் இந்த படத்தில் இந்து மற்றும் இஸ்லாமிய மதம் குறித்து கதையமைக்கப்பட்டுள்ள நிலையில், ஒருவிதமான கலவையான விமர்சனங்களை பெற்றுவருகிறது.

திரௌபதி 2 படத்தை கண்டுகளித்த இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் :

இந்த திரௌபதி 2 படமானது இன்று 2026 ஜனவரி 23ம் தேதி முதல் வெளியாகியுள்ள நிலையில், இதன் பிரீமியர் ஷோவை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கண்டுகளித்துள்ளார். இந்த படத்திற்கும் அவர் நல்ல விமர்சனம் கொடுத்துள்ளார்.

திரௌபதி 2 படத்தை திரையரங்கு சென்று பார்க்கலாமா:

இந்த திரௌபதி 2 படமானது ஒரு பெண்ணின் கதையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படம் தமிழகத்தில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு வரலாற்று படமாகவே வெளியாகியுள்ளது. இந்த படத்தின் பட்ஜெட் சிறியது என்ற நிலையில், ஒரு சாதாரணமான படத்தை போலவே வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்திற்கு மக்களிடையே கலவையான விமர்சனங்கள் இருக்கும் நிலையில், இதை திரையரங்கு சென்று ஒரு முறை பார்க்கலாம் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

வனப்பகுதியைச் சுற்றிப் பார்த்து ரசித்த இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்கள்..
பொது சொத்துக்களை மதிக்கும் பயணிகள் மட்டுமே பயணம் செய்ய வேண்டும்.. வந்தே பாரத் ரயில் குறித்த வைரல் போஸ்ட்..
ஐசிசி உலகக் கோப்பை 2026.. ஐசிசியின் எச்சரிக்கை.. வங்கதேசத்தின் இறுதி பதில்
குட்டியை காப்பாற்ற தாய் குரங்கு செய்த செயல்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..