கொரியாவிற்கு அழைத்து சென்றாரா பிரியங்கா மோகன்.. மேட் இன் கொரியா படம் எப்படி இருக்கிறது? – விமர்சனங்கள் இதோ!
Made in Korea Movies Reviews : தென்னிந்திய மொழி திரைப்படங்களில் தொடர்ந்து நடித்துவருபவர்தான் பிரியங்கா மோகன். இவரின் நடிப்பிலும், இயக்குநர் ரா.கார்த்திக் இயக்கத்திலும் நெட்பிளிக்ஸில் வெளியாகியுள்ள படம்தான் மேட் இன் கொரியா. இந்த திரைப்படத்தின் விமர்சனங்கள் குறித்து விவரமாக பார்க்கலாம்.

மேட் இன் கொரியா திரைப்பட விமர்சனங்கள்
நடிகை பிரியங்கா மோகன் (Priyanka Mohan) தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் பிரபலமிக்க நடிகைகளில் ஒருவராக இருந்துவருகிறார். இவரின் நடிப்பில் இறுதியாக தமிழில் பிரதர் (Brother) என்ற படம் வெளியானது. இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்த நிலையில், தோல்வியை சந்தித்திருந்தது. அந்த வகையில் கிட்டத்தட்ட 2 ஆண்டுக்கு பின் இவரின் நடிப்பில் தமிழில் வெளியாகியுள்ள படம்தான் “மேட் இன் கொரியா” (Made in Korea). இப்படத்தை இயக்குநர் ரா. கார்த்திக் (Ra. Karthik) இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே அசோக் செல்வனின் “நித்தம் ஒருவானம்” என்ற படத்தை இயக்கி ஹிட் கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் முற்றிலும் வித்தியாசமாக இவர் இயக்கியுள்ள படம்தான் மேட் இன் கொரியா. இந்த படத்தில் பிரியங்கா மோகன்தான் லீட் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இதை நெட்பிளிக்ஸ் (Netflix) நிறுவனம் தயாரித்துள்ள நிலையில், இன்று 2026 மார்ச் 12ம் தேதி முதல் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ஸ்ட்ரீம் செய்யப்பட்டுவருகிறது. இந்நிலையில் இப்படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த விமர்சனங்கள் குறித்து பார்க்கலாம்.
இதையும் படிங்க: ஜிவி பிரகாஷ் குமாரின் ஹேப்பி ராஜ் படம் எப்படி இருக்கு? வெளியானது முதல் விமர்சனம்
நடிகை பிரியங்கா மோகனின் மேட் இன் கொரியா திரைப்படம் எப்படி இருக்கு:
From our heart to yours ♥️#Madeinkorea is all yours now, streaming on @NetflixIndia pic.twitter.com/zcY3OR6Yuv
— Priyanka Mohan (@priyankaamohan) March 12, 2026
இந்த மேட் இன் கொரியா திரைப்படமானது முற்றிலும் சிம்பிளான கதையில் தயாராகியுள்ளது. இதை பார்ப்பதற்கு கொரியன் மற்றும் தமிழ் படத்தை இணைத்து பார்பதுபோலவே இருக்கிறதாம். மேலும் இப்படத்தை ஆழ்ந்து பார்க்கும்போது நம்மை கொரியாவிற்கு அழைத்து செல்வதுபோலவும் உள்ளது. காமெடி, எமோஷனல் மற்றும் மக்களின் அன்பு என வித்தியாசமாக இப்படம் அமைந்துள்ளது.
மேட் இன் கொரியா படத்தில் பிரியங்கா மோகனின் நடிப்பு மற்றும் கதை எப்படி இருக்கு:
நடிகை பிரியங்கா மோகன் சாதாரணமாகவே நல்ல நடிப்பை வெளிக்காட்டுவார். அந்த விதத்தில் இப்படத்திற்காக பல வித்தியாசமான முயற்சிகளையும் இவர் மேற்கொண்டுள்ளார். இப்படமானது ஒரு பெண் தனது சிறுவயதிலிருந்தே கொரியா பண்பாடு மற்றும் கொரியாவிற்கு செல்லும் ஆசையோடு இருக்கிறார். அவர் கொரியா சென்றாரா?, அங்கு சந்தித்த இன்னல்கள் பற்றிய கதையில் இது தயாராகியுள்ளது. இது கொரியா படங்களை விரும்புபவர்களுக்கு ஒரு விருந்தாகவே அமையும். இயக்குநர் ரா. கார்த்திக் தனது எழுதினாலும், இயக்கத்தினால் நம்மை கொரியாவிற்கே அழைத்து செல்வதுபோலவே செய்திருக்கிறார். மேலும் இப்படத்தில் பாடல்களும் சிறப்பாகவே இருக்கிறது.
இதையும் படிங்க: விஜய்யின் ஜன நாயகன் திரைப்படத்தின் ஓடிடி உரிமை ரத்து? – படத்தின் நிலைமை இதுதான்!
இந்த மேட் இன் கொரியா படத்தை கண்டிப்பாக பார்க்கலாமா:
மேட் இன் கொரியா திரைப்படமானது சாதாரணமான தமிழ் திரைப்படங்களை போல இல்லாமல், கொரியா மக்களின் வாழ்கை மற்றும் கிட்டத்தட்ட கொரியா படங்களை போலவே அமைந்துள்ளது. மேலும் இந்தியாவிலே கொரியா கலாச்சாரத்தையும் மையமாக வைத்து எடுக்கப்பட்ட முதல் படம் என்றும் கூறப்படுகிறது. இப்படமானது தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் இருக்கிறது. வீக் என்டில் குடும்பத்துடன் பார்க்கும் படமாகவே இது இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.