டியூட் பட இயக்குநர் கீர்த்தீஸ்வரன் அடுத்து இயக்க உள்ளது இந்த பிரபல நடிகரா? வைரலாகும் தகவல்
Dude director Keerthiswaran Next Movie: தமிழ் சினிமாவில் டியூட் படத்தை இயக்கியதன் மூலம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றவர் இயக்குநர் கீர்த்தீஸ்வரன். இவர் அடுத்ததாக எந்த நடிகரை வைத்து படம் இயக்க உள்ளார் என்பது குறித்து தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது.

கீர்த்தீஸ்வரன்
தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாக அறிமுக இயக்குநர்களின் படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் கடந்த 2025-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17-ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான படம் டியூட். இந்தப் படத்தை இயக்குநர் கீர்த்தீஸ்வரன் எழுதி இயக்கி இருந்தார். மேலும் கீர்த்தீஸ்வரன் இந்தப் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் முன்னதாக இயக்குநர் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குநராக தனது சினிமா பணியைத் தொடங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கீர்த்தீஸ்வரன் இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படமான டியூட் மக்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்து இருந்த நிலையில் நடிகை மமிதா பைஜூ நாயகியாக நடித்து இருந்தார். இவர்களின் கூட்டணி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது உள்ள 2கே கிட்ஸ்களுக்கு ஏற்றவாரு படம் இருந்ததால் அவர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து இயகுநர் கீர்த்தீஸ்வரன் எந்தப் படத்தை இயக்குவார் என்று ரசிகர்கள் ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் தற்போது புதிய தகவல் ஒன்று சினிமா வட்டாரங்களில் வைரலாகி வருகின்றது.
சிம்பு உடன் இணையும் இயக்குநர் கீர்த்தீஸ்வரன்:
டியூட் பட இயக்குனர் கீர்த்தீஸ்வரன் நடிகர் சிலம்பரசன் உடன் பேச்சுவார்த்தை பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இது அவரது முந்தைய படத்தைப் போலவே, ஒரு தைரியமான, சர்ச்சைக்குரிய செய்தியுடன் கூடிய மற்றொரு பரபரப்பான இளைஞர்களுக்கான பொழுதுபோக்குப் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
மேலும் பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்தப் படத்தை தயாரிக்க உள்ள நிலையில் இந்தப் படத்திற்காக நடிகர் சிலம்பரசனுக்கு மிகப்பெரிய சம்பளம் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இசையமைப்பாளர் சாய்அபயங்கர் இந்தப் படத்திற்கு இசையமைக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
BUZZ – #STR is said to be in talks with #Dude director 🎬 #Keerthiswaran. It is said to be another sensational youthful entertainer ❤️🔥 with a bold, controversial message, similar to his previous film.#SilambarasanTR has been offered a mammoth salary for this one 😳🔥🔥🔥… pic.twitter.com/kKiY5tacTc
— Movies Singapore (@MoviesSingapore) February 20, 2026
Also Read… விக்ராந்த் – ஐஸ்வர்யா ராஜேஷ் படத்தின் டைட்டிலை வெளியிட்ட இயக்குநர் வெற்றிமாறன்