Karathey Babu: ரவி மோகனின் அரசியல் படம்.. கராத்தே பாபு படத்தின் டீசர் எப்போது வெளியாகிறது தெரியுமா?
Karathey Babu Teaser Update: தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நாயகனாக இருப்பவர் ரவி மோகன். இவரின் நடிப்பில் அரசியல் கதைக்களத்தில் தயாராகிவரும் படம் கராத்தே பாபு. இந்த படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், இதன் டீசர் ரிலீஸ் எப்போது என்பது குறித்து படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கராத்தே பாபு திரைப்படம்
நடிகர் ரவி மோகன் (Ravi Mohan) நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல படங்கள் வெளியாகிவருகிறது. அந்த வகையில் முழுமையாக அரசியல்வாதியாக இவர் நடித்துவரும் படம்தான் கராத்தே பாபு (Karathey Babu). இப்படத்தை கவினின் டாடா (Dada) திரைப்படத்தை இயக்கி பிரபலமான இயக்குநர் கணேஷ் கே பாபு (Ganesh K Babu) இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த 2025ம் ஆண்டு ஆரம்பத்திலே தொடங்கிய நிலையில், மிக பிரம்மாண்டமாக நடைபெற்றுவந்தது. இந்த படத்தில் ரவி மோகன் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக அறிமுக நடிகை டவுடி ஜிவால் (Daudee Jiwal) நடித்துள்ளார். இந்த படமானது முழுவதும் அரசியல் ஆக்ஷன் மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் என மாறுபட்ட கதைக்களத்தில் தயாராகியுள்ளது.
இந்த படமானது 2026ம் ஆண்டில் படக்குழு வெளியிட திட்டமிட்டுள்ள நிலையில், இதன் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போது வெளியான இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றுவருகிறது.
இதையும் படிங்க: மங்காத்தா ரீ-ரிலீஸ்.. திரையரங்கில் ரசிகர்களுடன் இணைந்து கொண்டாடிய ஆதிக் ரவிச்சந்திரன்!
ரவி மோகனின் கராத்தே பாபு பட டீசர் ரிலீஸ் குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு :
Teaser of the most awaited political entertainer @iam_ravimohan‘s #Karatheybabu is releasing tomorrow (24th Jan) at 11 AM
Be cautious that all the characters used in the film are fictional🚨 #கராத்தேபாபு
Dir by @ganeshkbabu
A @samcsmusic Musical
Produced by @screensceneoffl… pic.twitter.com/XvokWgdpER— Screen Scene (@Screensceneoffl) January 23, 2026
இந்த கராத்தே பாபு படத்தில் நடிகர் ரவி மோகன் எம்.எல்.ஏ.ஷண்முக பாபு என்ற வேடத்தில் நடித்துள்ளாராம். இது முழுக்க அரசிய, ஆக்ஷன் மற்றும் வித்தியாசமான வசனங்களுடன் தயாராகியுள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்ததாக கூறப்படும் நிலையில், இப்படத்தின் மேடேஹன எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகிறது. இந்த கராத்தே பாபு படத்தய் இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்க, ஸ்க்ரீன் சீன் என்ற தயாரிப்பு நிறுவனம் த்யாரித்துவருகிறது. இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இப்படம் நிச்சயமாக இந்த 2026ம் ஆண்டு கோடைக்காலத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: தேரே இஸ்க் மெய்ன் டூ சிறை வரை… ஓடிடியில் வெளியாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
நடிகர் ரவி மோகனின் நடிப்பில் சமீபத்தில் வெளியான பராசக்தி படம் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்திருந்தது. இப்படத்தில் திருநாதன் என்ற நெகடிவ் வேடத்தில் இவர் நடித்திருந்தார். இந்த படத்தில் ரவி மோகனின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் இக பிரம்மாண்ட வரவேற்பை பெற்றிருந்தது. இதைத் தொடர்ந்து இந்த கராத்தே பாபு படத்திலும் ரவி மோகன் நெகடிவ் கலந்த ஒரு ஹீரோ வேடத்தில் நடித்துள்ள நிலையில், இப்படமும் இவருக்கும் நல்ல வரவேற்பைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.