Ravi Mohan : நானும் சித்தார்த்தும் எப்போதும் ஹீரோக்களைப் போல இருந்ததில்லை – நடிகர் ரவி மோகன்!
Ravi Mohan About Siddharth Friendship : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரவி மோகன், சமீபத்தில் சித்தார்த்தின் 3BHK படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் விழாவில் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் மேடையில் பேசிய ரவி மோகன், தனக்கும் சித்தார்த்துக்கு இருக்கும் நட்பு பற்றி பேசியுள்ளார். அது குறித்து விவரமாக பார்க்கலாம்.

ரவி மோகன் மற்றும் சித்தார்த்
இயக்குநர் ஸ்ரீ கணேஷின் (Shri Ganesh) இயக்கத்தில் மாறுபட்ட திரைக்கதைகளத்துடன் உருவாகியிருக்கும் படம் 3BHK. இந்த திரைப்படத்தில் நடிகர் சித்தார்த் (Siddharth) மற்றும் சரத்குமார் (Sarathkumar) முன்னணி கதாபாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகைகள் தேவயானி (Devayani) மற்றும் குட் நைட் படத்தில் நடித்து பிரபலமான நடிகை மீத்தா ரகுநாத் இணைந்து நடித்துள்ளனர். இந்த திரைப்படமானது வரும் 2025, ஜூலை 4ம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சித்தார்த்தின் 40வது திரைப்படமாக இந்த 3BHK படம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், முற்றிலும் பீல் குட் படமாக இது உருவாகியிருக்கிறது. இப்படத்தின் ரிலீஸை முன்னிட்டு சமீபத்தில் இப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் நிகழ்ச்சியானது நடைபெற்றிருந்தது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் ரவி மோகன் (Ravi Mohan) கலந்துகொண்டிருந்தனர்.
இந்நிலையில் நிகழ்ச்சி மேடையில் பேசிய அவர், 3BHK படத்தை பார்த்ததாகவும் மற்ற ஹீரோவிற்கு இவ்வாறு யாரும் படத்தை போட்டு காண்பிக்கமாட்டர்கள் என்று பேசியிருந்தார். மேலும் தனக்கும், நடிகர் சித்தார்த்துக்கு இருக்கும் நட்பு (friendship) பற்றியும் பேசியிருந்தார். அதை பற்றி பார்க்கலாம்.
3BHK படக்குழு வெளியிட்ட ட்ரெய்லர் பதிவு :
#3BHKTrailer OUT NOW!!! ✨️https://t.co/ACAUH0tbhE
உங்க கருத்த தெரிஞ்சுக்க ஆவலா இருக்கோம் 🤗❤️#3BHK #3BHKfromJULY4#Siddharth @realsarathkumar @sri_sriganesh89 #Devayani @RaghunathMeetha @Chaithra_Achar_ @iamarunviswa @amritramnath23 @dineshkrishnanb #JithinStanislaus… pic.twitter.com/i3h9anyCcY
— Shanthi Talkies (@ShanthiTalkies) June 26, 2025
சித்தார்த் குறித்து ரவி மோகன் பேச்சு :
3BHK பட ட்ரெய்லர் ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய ரவி மோகன் , அதில் “இந்த 3BHK படத்தை நான் பார்த்துவிட்டேன், அதனால் எனக்கு இப்படத்தை பற்றி எல்லாமே தெரியும். இந்த படத்தை பார்க்கும்போது, நன்றாக இருக்கிறது அல்லது நன்றாக இல்லை என்பதை தாண்டி, வித்தியாசமான உணர்வாக இப்படம் எனக்கு இருந்தது. நிச்சயமாக இந்த படம் அனைவருக்கும் உணர்வை ஏற்படுத்தும், அதுதான் இந்த படத்தின் வெற்றி என்று நான் நினைக்கிறேன். மேலும் பாலு மகேந்திரா சாரின் வீடு படத்தை பார்த்த அனைவருக்கும் இந்த 3BHK படமும் நிச்சயாக பிடிக்கும். மேலும் இந்த படம் ரிலீசான பிறகு நிச்சயம் அனைவரும் அதை குறிப்பிடுவார்கள் என்று நினைக்கிறேன், அதற்கு காரணம் இயக்குநர் ஸ்ரீ கணேஷ்தான்.
மேலும் எந்த ஒரு நடிகரும் ரிலீசிற்கு முன், மற்ற நடிர்களுக்கு படத்தைப் போட்டு காண்பிக்க மாட்டார்கள். ஆனால் நானும் சித்தார்த்தும் எப்போதும் ஹீரோக்களைப் போல இருந்ததில்லை, நாங்கள் இருவரும் எப்போது நண்பர்களானோம், எப்போது சந்தித்தோம் என தெரியவில்லை. அப்படியே நண்பர்களாகிவிட்டோம். ஒரு தடவை சித்தார்த் என்னிடம், “நான் தெலுங்கில் பொம்மரில்லு படத்தை நடித்து ஹிட் கொடுத்தேன், நீ அதை தமிழில் சந்தோஷ் சுப்பிரமணியம் என நடித்து அசத்தியிருந்தாய், அதனால் உனக்காகவே நான் படங்களின் கதையை கேட்டுக்கொண்டிருக்கிறேன்” என்று கூறினார். அதுபோல திரைப்படங்களோடு இணைந்து, நாங்களும் ஒன்றாக வளந்துவிட்டோம் என நடிகர் ரவி மோகன் பேசியிருந்தார்.