சின்ன வயசு க்ரஷ் யார்?  ரசிகரின் கேள்விக்கு நடிகை ராஷ்மிகா ஓபன் டாக்

Actress Rashmika Mandanna: தென்னிந்திய சினிமா மட்டும் இன்றி பான் இந்திய அளவில் தற்போது முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ராஷ்மிக மந்தனார். இவர் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட போது இவரது சின்ன வயசு க்ரஷ் யார் என்று ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

சின்ன வயசு க்ரஷ் யார்?  ரசிகரின் கேள்விக்கு நடிகை ராஷ்மிகா ஓபன் டாக்

ராஷ்மிகா மந்தனா

Published: 

13 Nov 2025 14:41 PM

 IST

கன்னட சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆகி தற்போது பான் இந்திய அளவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா (Actress Rashmika Mandanna). இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இவர் கன்னட சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆகி இருந்தாலும் இவரை ரசிகர்களிடையே அதிக அளவில் பிரபலமாக்கியது தெலுங்கு சினிமா தான். இவரது நடிப்பில் இந்த 2025-ம் ஆண்டில் மட்டும் தொடர்ந்து இந்தி சினிமாவில் மட்டும் சாவா, சிக்கந்தர், தம்மா, மற்றும் பான் இந்திய மொழிகளில் குபேரா, மற்றும் தெலுங்கு சினிமாவில் சமீபத்தில் வெளியான தி கேர்ள் ஃப்ரண்ட் என தொடர்ந்து 5 படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது.

அதன்படி பான் இந்திய சினிமாவில் பிசியான நடிகையாக வலம் வரும் நடிகை ராஷ்மிகா மந்தனாவிற்கும் பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டாவிற்கும் சமீபத்தில் திருமண நிச்சயம் நடைப்பெற்றதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது. ஆனால் இந்த தகவல் குறித்து சம்மந்தப்பட்ட நபர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து படங்களில் மூலம் பிரபலமாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா இந்த மாதிரியான கிசுகிசுகளிலும் தொடர்ந்து இடம் பிடித்து வருகிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா.

சின்ன வயசு க்ரஷ் குறித்து வெளிப்படையாக பேசிய ராஷ்மிகா:

அதன்படி சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட நடிகை ராஷ்மிகா மந்தனாவிடம் சின்ன வயசு க்ரஷ் யார் என்று ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த நடிகை ராஷ்மிகா மந்தனா சின்ன வயசா இருக்கும் போது என்னோட அப்பா அதிக அளவில் தமிழ் படங்களைப் பார்ப்பார்.

என் அப்பாவிற்கு ரஜினிகாந்த் சார் ரொம்ப பிடிக்கும். எனக்கும் அவர ரொம்ப பிடிக்கும். அப்பறம் விஜய் சார் படங்களைப் பார்ப்பேன். அப்போ அவர் ரொம்ப இளமையா இருப்பார்ல. அவர பாக்கும் போதே ரொம்ப பிடிக்கும். அவர க்ரஷ் என்று சொல்வதைவிட அவர்மீது எனக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது என்று நடிகை ராஷ்மிகா மந்தனா பதிலளித்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.

Also Read… மன்மதனே நீ கலைஞன் தான்… 21 ஆண்டுகளை நிறைவுச் செய்தது சிலம்பரசனின் மன்மதன் படம்

இணையத்தில் கவனம் பெறும் ராஷ்மிகா மந்தனாவின் பேச்சு:

Also Read… பராசக்தி படத்திற்காக பாடல் பாடிய யுவன் சங்கர் ராஜா – ஜிவி பிரகாஷ் வெளியிட்ட நெகிழ்ச்சிப் பதிவு