அனுஷ்காவின் ‘காதி’ படத்துடன் மோதும் ராஷ்மிகாவின் ‘தி கேர்ள்ஃபிரண்ட்’ ?

The Girlfriend Vs Ghaati : தென்னிந்திய அளவில் முன்னணி நடிகைகளில் ஒருவர்தான் நடிகை அனுஷ்கா ஷெட்டி. இவரின் நடிப்பில் ரிலீசிற்கு காத்திருக்கும் படம் காதி. இப்படத்துடன் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் தி கேர்ள்ஃபிரண்ட் படமானது மோதவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகிறது. இது குறித்து பார்க்கலாம்.

அனுஷ்காவின் காதி படத்துடன் மோதும் ராஷ்மிகாவின் தி கேர்ள்ஃபிரண்ட் ?

தி கேர்ள்பிரண்ட் vs காதி

Published: 

19 Jul 2025 16:40 PM

நடிகை ராஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna), பான் இந்திய நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் குபேரா (Kuberaa). நடிகர் தனுஷின் (Dhanush) நடிப்பில் வெளியான இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலாவின் முன்னணி இயக்கத்தில், குபேரா கடந்த 2025, ஜூன் 20ம் தேதியில் வெளியானது. இந்த படத்தை அடுத்து நடிகர் ராஷ்மிகா மந்தனாவின் நடிப்பில் தெலுங்கில் உருவாகியுள்ள திரைப்படம் தி கேர்ள்ஃபிரண்ட் (The Girlfriend. இயக்குநரும், நடிகருமான ராகுல் ரவீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து, தற்போது இறுதிக்கட்ட பணியில் இருந்து வருகிறது. இந்நிலையில், இப்படமானது வரும் 2025 செப்டம்பர் 5ம் தேதியில் படக்குழு வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்துடன் நடிகை அனுஷ்கா ஷெட்டியின் (Anushka Shetty), காதி (Ghaati) படமும் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த தகவலானது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. இன்னும் இந்த 2 படங்களின் ரிலீஸ் தேதி வெளியாகாத நிலையில், இந்த தகவல் இணையத்தில் பரவி வருகிறது. இது குறித்து தினத்தந்தி செய்தி தளத்திலும் பகிரப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : விஜய் சேதுபதியுடன் சண்டை.. இயக்குநர் பாண்டிராஜ் ஓபன் டாக்!

ராஷ்மிகா மந்தனாவின் தி கேர்ள்ஃபிரண்ட் பட முதல் பாடல் பதிவு :

நடிகை அனுஷ்கா ஷெட்டி யின் காதி திரைப்படம் :

நடிகர் விக்ரம் பிரபு தெலுங்கில் கதாநாயகனாக அறிமுகமாகியிருக்கும் படம்தான் காதி. இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிகை அனுஷ்கா ஷெட்டி நடித்துள்ளார். இந்த படத்தை யுவி க்ரியேஷன் நிறுவனம் தயாரிக்க, இயக்குநர் க்ரிஷ் ஜாகர்லமுடி இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படமானது போதைப் பொருள் கடத்தல் தொடர்பான கதைக்களத்துடன் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த படத்தின் முதல் பாடலானது சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது.

இதையும் படிங்க : ஜனநாயகனுடன் மோதுகிறதா பராசக்தி? – சுதா கொங்கரா பதில்

காதி ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு பதிவு :

அனுஷ்காவின் இப்படமானது கடந்த 2025, ஜூலை 11ம் தேதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பின் சில காரணங்களால் இப்படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இப்படத்தின் எடிட்டிங் வேலைகள் இன்னும் முழுமையாக நிறைவடையாததுதான் அதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படமானது வரும் 2025, செப்டம்பர் 5ம் தேதியில் வெளியிடப் படக்குழு திட்டமிட்டு வருகிறது. இதைப் பற்றிய அறிவிப்புகளும் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.