Rashmika Mandanna : கீதா கோவிந்தம் எப்பவும் ரொம்ப ஸ்பெஷலான படம்.. ராஷ்மிகா மந்தனா கருத்து

Rashmika Mandannas Instagram Post : பான் இந்திய நடிகைகளில் ஒருவராகக் கலக்கி வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் நடிப்பில் மக்களிடையே மிகவும் பிரபலமான படங்களில் ஒன்று கீதா கோவிந்தம். இப்படமானது வெளியாகி 7 வருடங்களை நிறைவு செய்த நிலையில், அது குறித்து நெகிழ்ச்சி பதிவை வெளியிட்டுள்ளார்.

Rashmika Mandanna : கீதா கோவிந்தம் எப்பவும் ரொம்ப ஸ்பெஷலான படம்.. ராஷ்மிகா மந்தனா கருத்து

கீதா கோவிந்தம் படம்

Published: 

16 Aug 2025 19:19 PM

நடிகை ராஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna), தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி போன்ற மொழி படங்களில் முன்னணி கதாநாயகியாக நடித்தது வருகிறார். இவர் தமிழில் தளபதி விஜய் (Thalapathy Vijay), கார்த்தி மற்றும் தனுஷ் போன்ற நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கிறார். அந்த வகையில் இவருக்கு முதன் முதலில் பான் இந்தியா அளவிற்கு மிகவும் பிரபலமான படம்தான் கீதா கோவிந்தம் (Geetha Govindam). கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான இப்படமானது, தமிழ், தெலுங்கு என பான் இந்திய மக்களிடையே வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனாவுக்கு ஜோடியாக நடிகர் விஜய் தேவரகொண்டா (Vijay Deverakonda) இணைந்து நடித்திருந்தார்.  இந்த படமானது சுமார் ரூ 5 கோடி பட்ஜெட்டில் உருவாகி, சுமார் ரூ 132 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து பிரம்மாண்ட வெற்றியை பெற்றிருந்தது.

இந்த படம் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதியில் வெளியாகியிருந்தது. இந்நிலையில், இப்படம் வெளியாகி 7 வருடங்கள் நிறைவடைந்திருக்கும் நிலையில், நடிகை ராஷ்மிகா மந்தனா நெகிழ்ச்சி பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், 7 வருடங்களுக்கு முன், கீதா கோவிந்தம் ஷூட்டிங்கில் எடுக்கப்பட்ட புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். தற்போது இப்பதிவானது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : பல்லாண்டு தொடர வாழ்த்துக்கள்.. ரஜினிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து!

கீதா கோவிந்தம் படத்தின் 7 வருட நிறைவு குறித்து நடிகை ராஷ்மிகா மந்தனா வெளியிட்ட பதிவு

இந்த பதிவில் நடிகை ராஷ்மிகா மந்தனா,”7 வருடங்களுக்கு முன் எடுத்த புகைப்படங்கள் எல்லாம், என்னிடம் இருக்கிறது என்பது என்னால் நம்பமுடியவில்லை. கீதா கோவிந்தம் படம் எப்பவுமே எனக்கு ரொம்ப ஸ்பெஷலான படமாக இருக்கும். இப்படம் உருவாக காரணமான, அனைவரையும் நான் நினைத்துக்கொண்டிருந்தேன். அவர்கள் எல்லாரையும் சந்தித்து ரொம்ப நாள் ஆச்சு. ஆனால் அவர்கள்  நன்றாக இருக்காங்கனு நினைக்கிறேன்.

இதையும் படிங்க : கூலி vs வார் 2.. வசூலில் முந்தியது யார்? – வெளியான அப்டேட்!

கீதா கோவிந்தம் படம் வெளியாகி அதுக்குள்ள 7 வருடம் ஆகிவிட்டது என்பதை என்னால் நம்ப முடியவில்லை. ஆனால் 7 வருடம் நிறைவடைந்துவிட்டது” என நடிகை ராஷ்மிகா மந்தனா அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார். இந்த பதிவை நடிகர் விஜய் தேவரகொண்டாவும், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரியாக பதிவிட்டிருந்தார்.

ராஷ்மிகா மந்தனாவின் புதிய புதிய படங்கள் :

நடிகை ராஷ்மிகா மந்தனா, குபேரா படத்தை அடுத்து, இந்தியில் தமா என்ற திகில் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படமானது இறுதிக்கட்ட பணிகளிலிருந்து வருகிறது. மேலும் இப்படத்தை அடுத்ததாக மைசா என்ற தெலுங்கு படத்திலும் நடிக்கிறார். இந்த படத்தில் போர் வீராங்கனையாக இவர் நடிக்கிறார் எனக் கூறப்படுகிறது. மேலும் இவரின் நடிப்பில் வெளியீட்டிற்கு தி கேர்ள்பிரண்ட் என்ற படமானது காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.