MYSAA : ராஷ்மிகா மந்தனாவின் ‘மைசா’ – பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்!

Rashmika Mandannas MYSAA Movie Shooting Pooja : பான் இந்திய முன்னணி நட்சத்திர நடிகைகளில் ஒருவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் முன்னணி கதாநாயகியாக நடிக்கவிருக்கும் படம் மைசா. இப்படத்தின் அறிவிப்புகள் சமீபத்தில் வெளியான நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் பூஜைகளுடன் இன்று பிரம்மாண்டமாக தொடங்கியுள்ளது. இது குறித்த புகைப்படங்களை படக்குழு பகிர்ந்துள்ளது.

MYSAA : ராஷ்மிகா மந்தனாவின் மைசா - பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்!

மைசா திரைப்பட படப்பிடிப்பு பூஜை

Published: 

27 Jul 2025 16:30 PM

நடிகை ராஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna) தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என பான் இந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக நடித்து வருகிறார். இவன் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் குபேரா (Kuberaa). இயக்குநர் சேகர் கம்முலாவின் இயக்கத்தில், நடிகர் தனுஷ் (Dhanush) முன்னணி கதாநாயகனாக இந்தப் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா, நடிகர் தனுஷின் ஜோடியாக நடித்திருந்தார். முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்துடன் வெளியான இப்படம் சூப்பர் ஹிட் திரைப்படமாக அமைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து தற்போது நடிகை ராஷ்மிகா மந்தனா, பெண் லீட் கதாபாத்திரங்கள் இருக்கும் படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார். இவரின் நடிப்பில் ஏற்கனவே தி கேர்ள்பிரண்ட் (The Girlfriend) என்ற படமானது ரிலீசிற்கு கடத்திருக்கும் நிலையில், அதிரடி வரலாற்றுக் கதையில் இவர் நடிக்கவிருக்கும் படம் மைசா (MYSAA).

இந்த படத்தின் அறிவிப்புகள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருந்தது. தெலுங்கு இயக்குநர் ரவீந்தர புல்லே (Rawindra Pulle ) இயக்கவுள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் பூஜைகளுடன் இன்று 2025, ஜூலை 27ம் தேதி முதல் தொடங்கியுள்ளது. இந்த பூஜைகள் குறித்த புகைப்படங்களைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க : ராட்சசர்களின் ராஜா… ட்ரெண்டிங்கில் இடம் பிடித்தது விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படம்!

ராஷ்மிகா மந்தனாவின் மைசா :

நடிகை ராஷ்மிகா மந்தனா , அனுஷ்கா மற்றும் நடிகை நயன்தாராவைப் போல பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க தொடங்கியுள்ளார். இவரின் நடிப்பில் பெண் லீட் கதைக்களம் கொண்ட தி கேர்ள்பிரண்ட் படமானது ரிலீசிற்கு காத்திருக்கிறது. இந்த படத்தை அடுத்தாக, மீண்டும் முன்னணி கதாநாயகியாக, இந்த மைசா படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தைத் தெலுங்கு பிரபல இயக்குநர் ரவீந்திர புல்லே இயக்கவுள்ளார். மேலும் இந்த படத்தை அன்பார்முலா பிலிம்ஸ் நிறுவனமானது தயாரிக்கவுள்ளது.

இதையும் படிங்க : இரும்பு கை மாயாவி படத்திற்காக சூர்யாவை நிராகரித்தேனா? லோகேஷ் கனகராஜ் விளக்கம்!

ராஷ்மிகா மந்தனாவின் மைசா பட ஷூட்டிங் பூஜை புகைப்படங்கள் :

இந்த படமானது தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் உருவாக்கவுள்ளதாம். இந்தப் படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா, போர் வீராங்கனை போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தின் முதல் பார்வை சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் வரவேற்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை படக்குழு வரும் 2026 ஆண்டு கோடைக்காலத்தில் வெளியிட திட்டமிட்டு வருகிறது என கூறப்படுகிறது.