Rashmika Mandanna: வாரிசு பட செட்-ல நடத்த நகைச்சுவை சம்பவம் – ஓபனாக சொன்ன ராஷ்மிகா மந்தனா!
Rashmika Mandanna About Varisu Shooting Funny Moment: பான் இந்திய பிரபல நடிகைகளில் ஒருவராக இருந்துவருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் முன்னதாக நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த நிலையில், அதில் வாரிசு பட ஷூட்டிங்கில், தளபதி விஜய்யுடன் நடந்த நகைச்சுவையான சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார். அது பற்றி பார்க்கலாம்.

ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய்
நடிகை ராஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna) தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளில் தொடர்ந்து படங்களில் நடித்துவருகிறார். இவர் கடந்த 2026 பிப்ரவரி மாத இறுதியில் தனது நீண்டநாள் நண்பரும், காதலருமான விஜய் தேவரகொண்டாவை (Vijay Deverakonda) திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் தற்போது காதலர்களாக இருந்து, கணவன் மனைவியாக மாறியுள்ளனர். அந்த வகையில் நடிகை ராஷ்மிகா மந்தனா, திருமணத்தை தொடர்ந்து படங்களில் கதாநாயகியாக நடித்துவருகிறார். இவரின் நடிப்பில் இறுதியாக “தி கேர்ள்பிரண்ட்” (The Girlfriend) என்ற படமானது வெளியாகியிருந்த நிலையில், இவருக்கு பிரம்மாண்ட வெற்றியை கொடுத்திருந்தது. இப்படத்தை அடுத்ததாக தற்போது, பெண் லீட் கதாபாத்திரம் கொண்ட படங்களில் நடிப்பதை தேர்வுசெய்துவருகிறார்.
இவர் தமிழில் கார்த்தி மற்றும் தளபதி விஜய் (Thalapathy Vijay) என இரு நடிகர்களுடன் படங்களில் ஜோடியாக இணைந்து நடித்திருக்கிறார். அந்த வகையில் இவர் தளபதி விஜய்யுடன் இணைந்து நடித்த படம்தான் வாரிசு (Varisu). இந்த படத்தின் ஷூட்டிங்கின்போது, தளபதி விஜய்யுடன் நடந்த காமெடியான சம்பவம் குறித்து ராஷ்மிகா தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ரஜினிகாந்த் மற்றும் விஜயிடம் உள்ள அதே ஸ்டைல் நயன்தாராவிடம் உள்ளது – இயக்குநர் விஷ்ணு எடவன்
தளபதி விஜய்யின் வாரிசு பட ஷூட்டிங்கில் நடந்த நகைச்சுவை சம்பவம் குறித்து ராஷ்மிகா மந்தனா:
முன்னதாக பேசிய நேர்காணல் ஒன்றில் ராஷ்மிகா மந்தனா, “வாரிசு பட ஷூட்டிணத்தின்போது, எனது காட்சியை முடிந்ததற்கு பிறகு, அங்கேயே ஷூட்டிங் செட்டில் ஒரு ஷோபாவில் படுத்து அசந்து தூங்கிவிட்டேன். அப்போது என்னை பார்த்த விஜய் சார் மற்றும் வம்சி சார் பார்த்து சிரித்தனர். அப்போது விஜய் சார், பாருங்க இந்த பொண்ணு வந்து நடிக்கிது, நடிச்சிட்டு தூங்குது.. அடுத்து சாப்புடுது, பின்ன வீட்டுக்கு போகுது என விஜய் சார் என்னை பற்றி காமெடியாக பேசினார்” என அவர் தெரிவித்திருந்தார். தற்போது இதுகுறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க: அந்த படத்தில் நடிச்சா தப்பா போயிடுமோனு நினச்சு நோ சொல்லிட்டேன் – நடிகை வாணி போஜன்
நடிகை ராஷ்மிகா மந்தனாவின் இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் பதிவு:
நடிகை ராஷ்மிகா மந்தனாவின் நடிப்பில் தற்போது, காக்டைல் 2, மைசா, ராணபாலி போன்ற திரைப்படங்கள் தயாராகிவருகிறது. இதில் இந்தியில் நடித்துள்ள காக்டைல் படமானது வரும் 2026ம் ஆண்டு ஜூலை மாதத்தில், ரணபாலி படமானது 2026ம் ஆண்டு செப்டம்பர் மதத்திலும் வெளியாகுவதாக படக்குழுக்கள் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படத்தில் நடிப்பதற்கு ராஷ்மிகா மந்தனா ஆர்வம் காட்டிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.