விஜய் டிவி ரசிகர்களே ரெடியா? துரந்தர் 1 படத்தை எப்போது, எந்த நேரத்தில் டிவியில் பார்க்கலாம்?
Dhurandhar Part 1: பான் இந்திய சினிமாவையே கதிகலங்கவைத்த திரைப்படம்தான் துரந்தர். இப்படமானது கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் திரையரங்குகளில் வெளியான நிலையில், தற்போது தொலைக்காட்சிகளில் வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த விதத்தில் தமிழ் பதிப்பில் துரந்தர் படமானது விஜய் டிவியில் எப்போது வெளியாகும் என பார்க்கலாம்.

துரந்தர்
தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான தொலைக்காட்சிகளில் ஒன்றாக இருந்துவருவது விஜய் டிவி (Vijay TV). இந்த தொலைக்காட்சியில் தொடர்ந்து சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் போன்றவை வெளியாகிவருவது வழக்கமே. அந்த வகையில் எதாவது சிறப்பான நாட்களில் அல்லது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் புதிய திரைப்படங்கள் ஒளிபரப்பப்படும். சீரியலுக்கு இந்த விஜய் தொலைக்காட்சி எந்த அளவிற்கு பிரபலமோ, அதே போலவே சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வெளியாகும் திரைப்படங்களுக்கும் பேமஸ். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் துரந்தர் (Dhurandhar) திரைப்படமானது வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரன்வீர் சிங் (Ranveer Singh) மற்றும் சாரா அர்ஜுனின் (Sara Arjun) நடிப்பில் வெளியான இப்படமானது, ஏற்கனவே நெட்பிளிக்ஸ் (Netflix) ஓடிடியில் உள்ள நிலையில், தற்போதும் ரசிகர்களால் பார்த்து ரசிக்கப்பட்டுவருகிறது.
மேலும் கடந்த மார்ச் 19ம் தேதியில் துரந்தர் பார்ட் 2 படமும் வெளியாகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படமானது இன்னும் திரையரங்குகளில் வெளியாகிவருகிறது. அந்த வகையில் துரந்தர் பார்ட் 1 படமானது எப்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மீண்டும் இணையும் கூட்டணி.. அட்லீ இணையும் புது படம் யாருடன் தெரியுமா?
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் துரந்தர் திரைப்படம் :
நடிகர் ரன்வீர் சிங், ஆர். மாதவன் மற்றும் சாரா அர்ஜுன் போன்ற பல்வேறு நடிகர்கள் இணைந்து நடித்திருந்தபடம்தான் துரந்தர். இந்த படமானது இரு பாகமாக வெளியாகியிருந்த நிலையில் மொத்தமாக கிட்டத்தட்ட ரூ 2000 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருக்கும். அந்த வகையில் துரந்தர் பார்ட் 2 படமானது திரையரங்குகளில் வெளியாகிவரும் நிலையில், இன்னும் ஓடிடியில் வெளியாகவில்லை.
இதையும் படிங்க: வாக்களிக்கும் போது கமல் ஹாசன் – ஸ்ருதி ஹசனுக்கு விஐபி சலுகை… கிளம்பியது சர்ச்சை!
அந்த வகையில் தற்போது துரந்தர் 1 படமானது விஜய் தொலைக்காட்சியில் வெளியாகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரன்வீர் சிங்கின் துரந்தர் 1 படமானது வரும் 2026 மே 31ம் தேதியில், மாலை 7 மணியளவில் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது வெளியான இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.
தொலைக்காட்சிகளில் துரந்தர் 1 படமானது ஒளிபரப்பாகும் என்பது குறித்த அறிவிப்பு பதிவு:
இயக்குநர் ஆதித்ய தார் இயக்கத்தில், ரன்வீர் சிங் அதிரடி கேங்ஸ்டராக நடித்திருந்த படம்தான் துரந்தர். இந்த படமானது பாகிஸ்தான் மற்றும் இந்தியாவிற்க்குள் நடந்த தீவிரவாத தாக்குதல் போன்ற உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு இயக்கப்பட்டிருந்தது. திரையரங்குகளை இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடிய நிலையில், தற்போது தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பாகவுள்ளது.