இன்னும் 30 நாட்களில்… ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்ட ராம் சரணின் பெடி படக்குழு!
Ram Charan Peddi Movie: தென்னிந்திய சினிமாவில் மக்களுக்கு மிகவும் பிடித்தமான நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் ராம் சரண். இவரின் நடிப்பில் மிகவும் சிறப்பாக தயாராகியுள்ள படம்தான் பெடி. இன்னும் இப்படத்தின் வெளியீட்டிற்கு 30 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், ஸ்பெஷல் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

பெடி
டோலிவுட் சினிமாவில் ரசிகர்களா மெகா ஸ்டார் என்று அழைக்கப்பட்டுவருபவர்தான் ராம் சரண் (Ram Charan). இவரின் நடிப்பில் கடந்த 2025ம் ஆண்டில் கேம் சேஞ்சர் (Game Changer) படமானது வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தது. இந்த 2026ம் ஆண்டில் வெளியீட்டிற்கு தயாராகியுள்ள திரைப்படம்தான் பெடி (Peddi). இப்படத்தை ரங்கஸ்தலம் திரைப்படத்தை இயக்கியிருந்த இயக்குநர் புச்சி பாபு சனா (Buchi Babu Sana) இயக்கியுள்ள நிலையில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமானது பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. இந்த படத்தில் ராம் சரண் பையில்வானாக நடிக்க, அவருக்கு ஜோடியால பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் (Janhvi Kapoor) நடித்துள்ளார். இந்த ஜோடியானது முதல் முறையாக இணைந்திருக்கும் நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துவருகிறது.
அந்த வகையில் இப்படமானது வரும் 2026ம் ஆண்டு ஜூன் 4ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. தற்போது படக்குழு படத்தின் வெளியீட்டிற்கு இன்னும் 30 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டுள்ளது. தற்போது வெளியான இந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் வைரலாகப் பரவிவருகிறது.
இதையும் படிங்க: ஜன நாயகன் படத்தின் டைட்டில் கார்ட் எப்படி இருக்கும்? வைரலாகும் வீடியோ
ராம் சரணின் பெடி படக்குழு வெளியிட்ட சிறப்பு போஸ்டர் குறித்த எக்ஸ் பதிவு:
ராம் சரணின் பெடி படத்தில் அவருடன் நடிகர்கள் ஜெகபதி பாபு, சிவராஜ் குமார் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இதில் ராம் சரண் பையில்வானாக நடித்திருக்கும் நிலையில், அவரின் கதாபாத்திரம் மிகவும் வித்தியாசமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராம் சரண், இயக்குநர் புச்சி பாபு சனாவின் இயக்கத்தில் ரங்கஸ்தலம் படத்தில் காதுகேட்காத நபராக நடித்திருந்த நிலையில், இப்படத்திலும் வித்தியாசமான வேடத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: டாக்ஸிக் படத்தில் யாஷுடனான நெருக்கமான காட்சிகளை நீக்க சொன்னேனா? அதிரடி பதிலை கொடுத்த கியாரா அத்வானி!
இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் நிலையில், இதுவரை இரு பாடல்கள் இப்படத்திலிருந்து வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தில் ராம் சரனுடன் தமிழ் நடிகை ஒருவர் சிறப்பு பாடலில் நடனமாடியுள்ளாராம். அது வேறுயாருமில்லை நடிகை ஸ்ருதிஹாசன்தான். இவர் இப்படத்தில் ராம் சரணுடன் இணைந்து நடனமாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் இப்படத்தின் வெளியீட்டிற்கு சில வாரங்களே இருக்கும் நிலையில், படத்தின் அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.