பாலிவுட் சினிமாவில் களமிறங்கும் சிவகார்த்திகேயன் பட இயக்குநர்!

Director Rajkumar Periyasamy : தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி. இவரது இயக்கத்தில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம்அமரன். இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

பாலிவுட் சினிமாவில் களமிறங்கும் சிவகார்த்திகேயன் பட இயக்குநர்!

சிவகார்த்திகேயன் மற்றும் ராஜ்குமார் பெரியசாமி

Published: 

06 Oct 2025 15:20 PM

 IST

விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை இயக்கியவர் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி (Rajkumar Periyasamy). இவர் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சியையும் இயக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து சின்னத்திரையில் நிகழ்ச்சிகளை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி கடந்த 2017-ம் ஆண்டு வெளியான ரங்கூன் படத்தை இயக்கி இருந்தார். இந்தப் படத்தின் மூலம் கோலிவுட் சினிமாவில் இயக்குநராக ராஜ்குமார் பெரியசாமி இயக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் கௌதம் கார்த்திக் நாயகனாக நடித்து இருந்த நிலையில் நடிகை சனா மக்புல் நாயகியாக நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்த நிலையில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. 2017-ம் ஆண்டே வெளியான இந்தப் படத்தை தொடர்ந்து சுமார் 7 ஆண்டுகளுக்குப் பிறகு அமரன் படத்தை இயக்கிநார் ராஜ்குமார் பெரியசாமி.

நடிகர் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்து இருந்த இந்தப் படத்தில் நடிகை சாய் பல்லவி நாயகியாக நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்த நிலையில் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து வெளியானது அனைவரும் அறிந்ததே. மேலும் இந்தப் படத்தை நடிகர் கமல் ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் தயாரித்து இருந்த நிலையில் படம் பல விருதுகளைப் பெற்றது.

பாலிவுட் பிரபலங்களை இயக்கும் ராஜ்குமார் பெரியசாமி:

அமரன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி நடிகர் தனுஷை வைத்து படம் இயக்க உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகி ரசிகர்களிடையே  வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பாலிவுட் பிரபலங்களை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதன்படி பாலிவுட் நட்சத்திர தம்பதிகளான கத்ரீனா கைஃப் மற்றும் விக்கி கௌஷல் அவர்களை வைத்து இயக்க உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றது. அதன்படி தமிழ் சினிமாவில் இருந்து பாலிவுட் செல்லும் அடுத்த இயக்குநராக ராஜ்குமார் பெரியசாமி களம் இறங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read… சர்வைவரில் விட்டதை பிக்பாஸில் பிடிப்பாரா வி.ஜே.பார்வதி!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… இது வேற மாதிரியான ஆட்டம்… பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் எண்ட்ரி கொடுத்த சர்ச்சை இயக்குநர்!