ஜெயிலர் 2 – KHxRK படங்களின் நிலை என்ன? ரஜினிகாந்த் கொடுத்த அப்டேட்

Rajinikanth talks about Jailer 2 Movie and KHXRK movie shooting update: தமிழ் சினிமா மட்டும் இன்றி உலக அளவில் நடிகர் ரஜினிகாந்தின் படங்களை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் அடுத்ததாக நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக உள்ள படம் ஜெயிலர் 2.

ஜெயிலர் 2 - KHxRK படங்களின் நிலை என்ன? ரஜினிகாந்த் கொடுத்த அப்டேட்

ரஜினிகாந்த்

Published: 

04 Apr 2026 17:53 PM

 IST

நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வருகிறார். 70 வயதைக் கடந்தும் தொடர்ந்து சினிமாவில் அடுத்தடுத்தப் படங்களில் கமிட்டாகி இளம் தலைமுறையினருக்கு போட்டியாக தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இறுதியாக கடந்த 2025-ம் ஆண்டில் கூலி படம் திரையரங்குகளில் வெளியானது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் ரஜினிகாந்த் நாயகனாக நடித்து இருந்தார். இந்தப் படத்தில் பான் இந்திய நட்சத்திரங்கள் பலர் முன்னணி வேடத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. படம் திரையரங்குகளில் வெளியான போது விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் தற்போது அடுத்தடுத்து 3 படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

அதன்படி தற்போது இந்த ஆண்டில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ஜெயிலர் 2. இந்தப் படத்தை இயக்குநர்நெல்சன் திலீப் குமார் எழுதி இயக்கி வருகிறார். இதனைத் தொடர்ந்து ரஜினிகாந்த் தனது 173-வது படத்திற்காக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி உடன் கூட்டணி வைத்துள்ளார். அதனைத் தொடர்ந்து இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசனும் இணைந்து நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜெயிலர் 2 – KHxRK பட நிலை என்ன?

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதன்படி ஜெயிலர் 2 திரைப்படம் ஏறக்குறைய நிறைவடைந்து, தற்போது இறுதிக்கட்டப் பணிகளில் உள்ளது. இதன் வெளியீட்டுத் தேதி குறித்துத் தயாரிப்பு நிறுவனம் விரைவில் அறிவிக்கும். நெல்சன் இயக்கும் KHxRK படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ளது என்றும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… டிமாண்டி காலனி 3 பட ஷூட்டிங் ஓவர்.. திரில்லர் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோவை வெளியிட்ட படக்குழு!

இணையத்தில் வைரலாகும் ரஜினிகாந்த் பேச்சு:

Also Read… Ones More: கொஞ்சும் தென்றலா.. உயிர் கொல்லும் மின்னலா.. ஒன்ஸ் மோர் படத்தின் ‘இந்திரா’ வீடியோ பாடல் வெளியீடு!

Follow Us
ரயில் டிக்கெட் ரத்து செய்வதில் புதிய மாற்றம் - இனி முழு கட்டணமும் திரும்ப கிடைக்காது!
அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களை தாக்குவோம் - ஈரான் எச்சரிக்கையால் மீண்டும் பதற்றம்
துல்கர் சல்மானுடன் மோதலா? டோவினோ தாமஸ் அதிரடி பதில்!
மீண்டும் சரிந்த தங்கம் விலை.