Rajinikanth : சந்திரமுகியில் அவரை பார்த்து வியந்தேன்.. ஜோதிகா குறித்து பேசிய ரஜினிகாந்த்
Rajinikanth Praises Jyothika : தென்னிந்திய சினிமாவில் முன்னணி சூப்பர் ஸ்டாராக இருந்து வருபவர் ரஜினிகாந்த். இவரின் நடிப்பில் தமிழில் பல படங்கள் வெளியாகி ஹிட்டாகியிருக்கிறது. இந்நிலையில் அவர் முன்னதாக பேசிய நிகழ்ச்சி ஒன்றில், சந்திரமுகி படத்தின் போது, ஜோதிகாவின் மீது ஆரம்பத்தில் நம்பிக்கை இல்லாததைப் பற்றி ஓபனாக பேசியுள்ளார். அது குறித்து விவரமாகப் பார்க்கலாம்.

ரஜினிகாந்த் மற்றும் ஜோதிகா
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Superstar Rajinikanth) . இவரின் நடிப்பில் இதுவரை சுமார் 170வது திரைப்படங்கள் வெளியாகியிருக்கிறது. இந்த படங்களைத் தொடர்ந்தும் அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகித்தான் வருகிறார். பழம்பெரும் இயக்குநர் கே. பாலசந்தரின் (K. Balachander) இயக்கத்தில் வெளியான திரைப்படம்தான் அபூர்வ ராகங்கள் (Apoorva Raagangal) . நடிகர் கமல்ஹாசன் (Kamal Haasan) மற்றும் ஸ்ரீ வித்யா இணைந்து நடித்திருந்த இப்படத்தின் மூலம்தான் நடிகர் ரஜினிகாந்த் சினிமாவில் நுழைந்தார். இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் முன்னணி கதாநாயகனாக தனது நடிப்பைத் தொடர்ந்து, தற்போதுவரையிலும் தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வரும் இவரின் நடிப்பில் கடைசியாக வேட்டையன் (Vettaiyan) என்ற படமானது வெளியாகியிருந்தது.
இந்த படைத்ததைத் தொடர்ந்து கூலி (Coolie )மற்றும் ஜெயிலர் 2 (Jailer 2) என அடுத்தடுத்த படங்களிலும் ஒப்பந்தமானார். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் எந்திரன் பட நேரத்தில் பேசிய வீடியோ ஒன்றில், நடிகை ஜோதிகாவின் (Jyothika) நடிப்பைப் பற்றிப் புகழ்ந்திருந்தார். அதை பற்றிப் பார்க்கலாம்.
ஜோதிகாவின் நடிப்பை புகழ்ந்த ரஜினிகாந்த் :
நடிகர் ரஜினிகாந்த் ஒரு நேர்காணலில், “நான் இந்த இடத்தில் ஐஸ்வர்யா ராயைப் பற்றிக் கூறித்தான் ஆகவேண்டும், நான் ஐஸ்வர்யா ராயுடன் நடனமாடுவதற்குத்தான் படங்களில் அவர் சேர்க்கப்படுகிறார் என பலர் நினைக்கின்றனர். ஆனால் படையப்ப்பா படத்தில் நீலாம்பரி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா நடிக்க முடியாது. சந்திரமுகியில் ஜோதிகா கதாபாத்திரத்தில் அவர் நடித்திருக்க முடியாது. எந்திரன் படத்தில் கதாபாத்திரம் அவ்வாறு இருந்ததால்தான் ஐஸ்வர்யா ராய் அதில் நடித்தார். மேலும் சந்திரமுகி படத்தில் ஜோதிகாவை பற்று சொல்லியே ஆகவேண்டும், ஆரம்பத்தில் அவர் சந்திரமுகியில் நடிப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லாமல்தான் இருந்தது.
ஏனென்றால் நானா ஜோதிகாவை படங்களில் சீரியஸான ரோலில் நடித்துப் பார்க்கவில்லை. சந்திரமுகி படத்தில் அந்த கதாபாத்திரம்தான் மெய்ன் ரோல், அந்த ரோல் கயிறுமேல நடக்கிறமாதிரி. அந்த கயிறே சந்திரமுகிதான். ஆனால் அப்படத்தில் முதல் நாள் ஷூட்டிங்கில், அந்த சலங்கையை எடுத்து அவர் என்னிடம் பேசும் நடிப்பைப் பார்த்த எனக்கே புல்லரித்துவிட்டது. அதன் பின் நான் இயக்குநர் பி. வாசுவிடம் கூறினேன், நிச்சயமாக சந்திரமுகி வெற்றிபெறும் என்று கூறினேன் என நடிகர் ரஜினிகாந்த் வெளிப்படையாக ஜோதிகாவின் நடிப்பது பற்றிப் பேசியிருந்தார்.
நடிகர் ரஜினிகாந்த் ஜோதிகாவை புகழ்ந்து பேசியிருந்த இந்த பழைய நிகழ்ச்சி வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. மேலும் ரஜினிகாந்த் தன்னுடன் நடித்த சக பெண் நடிகரை இவ்வாறு புகழ்வார் எனவும் ரசிகர்கள் கருத்துக்களைத் தெரிவித்தது வருகின்றனர்