Radhika Sarathkumar: தாய் கிழவி ரஜினிகாந்த் நடிக்கவேண்டிய படம்.. ஆனால் அவரு – ராதிகா சரத்குமார் உடைத்த உண்மை!

Radhika Sarathkumar About Rajinikanth: தென்னிந்திய சினிமாவில் பிரபல 90ஸ் கதாநாயகியாக கலக்கிவந்தவர் ராதிகா சரத்குமார். இவரின் நடிப்பில் தமிழ் மிக பிரம்மாண்டமாக தயாராகியுள்ள படம்தான் தாய் கிழவி. இப்படத்தின் ப்ரீ- ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய இவர், இப்படத்தின் கதையில் ரஜினிகாந்த் நடித்திருக்கவேண்டியது என தெரிவித்துள்ளார்.

Radhika Sarathkumar: தாய் கிழவி ரஜினிகாந்த் நடிக்கவேண்டிய படம்.. ஆனால் அவரு - ராதிகா சரத்குமார் உடைத்த உண்மை!

ராதிகா சரத்குமார் மற்றும் ரஜினிகாந்த்

Updated On: 

24 Feb 2026 19:55 PM

 IST

நடிகை ராதிகா சரத்குமார் (Radhika Sarathkumar) கோலிவுட் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் முன்னணி கதாநாயகியாக படங்களில் நடித்துவந்தார். இதையடுத்து இவருக்கு படங்களில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்புகள் குறைந்த நிலையில், தமிழில் ஹீரோக்களுக்கு அம்மாவாகவும், படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துவந்தார். அந்த வகையில் கடந்த சில ஆண்டுகளாக இவரின் நடிப்பில் வெளியாகவும் படங்கள் அந்தளவிற்கு வரவேற்கப்படவில்லை. இந்நிலையில் சிவகார்த்திகேயனின் (Sivakarthikeyan) தயாரிப்பில், ராதிகா சரத்குமார் லீட் கதாநாயகியாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள படம்தான் தாய் கிழவி (Thaai Kizhavi). இதை அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் (Sivakumar Murugesan) இயக்க, ராதிகா சரத்குமார் கிழவி வேடத்தில் நடித்துள்ளார். இப்படமானது முற்றிலும் கிராமப்புற என்டேர்டைமென்ட் கதைக்களத்தில் தயாராகியுள்ள நிலையில், வரும் 2026 பிப்ரவரி 27ம் தேதியில் தமிழில் உலகமெங்கும் வெளியாகிறது. இதை முன்னிட்டு இப்படத்தின் டெயிலர் வெளியிடப்பட்டிருந்த நிலையில், ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது.

அந்த வகையில் இதன் ப்ரீ- ரிலீஸ் விழாவும் சமீபத்தில் நடத்தப்பட்டிருந்தது. அந்த விழாவின்போது மேடையில் பேசிய ராதிகா சரத்குமார், இப்படத்தில் தான் நடித்த கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் (Rajinikanth) நடித்திருக்கவேண்டியது என கூறியுள்ளார்.

இதையும் படிங்க: ‘நடிகைகள் கவர்ச்சி காட்டுவது தவறில்லை’ – வெளிப்படையாக பேசிய காஜல் அகர்வால்!

ரஜினிகாந்த் குறித்து விழாவில் பேசிய நடிகை ராதிகா சரத்குமார் :

அந்த நிகழ்ச்சியின்போது மேடையில் பேசிய ராதிகா சரத்குமார், “எனது வாழ்க்கைக்கு திருப்புமுனையை கொடுத்த சிவகார்த்திகேயன் மற்றும் சிவகுமார் முருகேசனுக்கு நன்றி. ஆரம்பத்தில் இந்த படத்தில் நடிக்கமாட்டேன் என கூறும்போது, சரத்குமார்தான் இதில் நடிக்கவேண்டும் என என்னை வற்புறுத்தினார். இது குறித்து நானும் எனது வாய் வலிக்க பல நேர்காணல்களில் தெரிவித்திருக்கிறேன். ஆனாலும் எனது ஆன்மாவை இந்த படம் மேலும் வலுவூட்டியது.

இதையும் படிங்க: நான் யாருக்கும் போட்டியாகவோ, காலி பண்ணவோ வரவில்லை – எமோஷ்னலாக பேசிய சிவகார்த்திகேயன்

இப்படத்தின் கதை எனக்கு தெரியும், மேலுக்கும் இப்படத்தை கமல் சார் பார்க்கும்போது நானும் பார்த்தேன். நான் இந்த படத்தை பார்த்து ரொம்ப ரசித்தேன், சிரித்தேன், ஆனால் அதையும் மீறி நான் பார்த்தது, உண்மையை சொல்லப்போனால் இது ரஜினிகாந்த் பண்ணிருக்கவேண்டிய படம். அவரு இந்த மாதிரிலாம் வேஷம் போட்டு நடிக்கமாட்டாரு. அந்த கதாபாத்திரத்தை பெண்ணாக மாற்றி, என்னை இதில் நடிக்கவைத்துவிட்டார்கள். நான் இந்த படத்தை அப்படித்தான் பார்க்கிறேன். ஏனென்றால் இந்த படத்தில் அவ்வளவு மாஸ் காட்சிகள் இருக்கிறது. நீங்கள் யாராச்சும் சிந்தித்து பார்ப்பீர்களா, இந்த தாய் கிழவி படத்தில், கிழவியை ஒரு ரஜினிகாந்த் போலவே கொண்டுபோய்ட்டாங்க” என அதில் அவர் தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் குறித்து நடிகை ராதிகா சரத்குமார் பேசிய வீடியோ பதிவு:

Follow Us
Related Stories
Kayadu Lohar: ஐஆம் கேம் படம் முற்றிலும் வித்தியாசமானது.. நிச்சயம் அனைவர்க்கும் பிடிக்கும் – கயாடு லோஹர் பேச்சு!
Hi Movie: நயன்தாரா – கவின் நடிக்கும் ஹாய் பட ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது? தமிழ் புத்தாண்டை முன்னிட்டு படக்குழு அறிவிப்பு!
அவன் குறுக்க மட்டும் போயிடாதீங்க சார் – 4 ஆண்டுகளை நிறைவு செய்தது கேஜிஎஃப் சாப்டர் 2 படம்
சரி என்று தெரியாமல் தவறு என்று புரியாமல் எதில் வந்து சேர்ந்தேன் நான் எதிர்பார்க்கவில்லை நான் – 19 ஆண்டுகளை நிறைவு செய்தது உன்னாலே உன்னாலே படம்
GV Prakash: ஜோ பட இயக்குநரின் புது படத்தில் இணைந்த ஜி.வி. பிரகாஷ்.. நடிகை யார் தெரியுமா?
புத்தாண்டை முன்னிட்டு குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட ஹரிஷ் கல்யாண்
வரலாறு படைத்துள்ளீர்கள் - ஆர்தமிஸ் விண்வெளி பயணக்குழுவை பாராட்டிய டிரம்ப்
ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்களுக்கு கட்டணம் விதிக்கத் திட்டம்!!
நடுவானில் விமானத்தின் 2 எஞ்சின்களும் செயலிழப்பு.. துரிதமாக செயல்பட்டு 69 பேரை காப்பாற்றிய பைலட்!
நடிகை ஹன்சிகா தனது மைத்துனி மீது கொடுத்த புகார்