R Parthiban: குந்தவையை கொஞ்சநாள் வீட்டிலே குந்தவைக்கிறது நல்லது – திரிஷா குறித்து பார்த்திபன் பரபரப்பு பேச்சு!

R Parthiban commented Trisha Krishnan: பிரபல இயக்குநராகவும், நடிகராகவும் தமிழ் சினிமாவில் இருந்துவருபவர் ஆர்.பார்த்திபன். இவர் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நிலையில், அதில் நடிகை திரிஷா குறித்து பரபரப்பான கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். தற்போது இந்த விஷயம் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

R Parthiban: குந்தவையை கொஞ்சநாள் வீட்டிலே குந்தவைக்கிறது நல்லது - திரிஷா குறித்து பார்த்திபன் பரபரப்பு பேச்சு!

திரிஷா மற்றும் பார்த்திபன்

Updated On: 

08 Mar 2026 16:37 PM

 IST

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துவருபவர் ஆர். பார்த்திபன் (R. Parthiban). இவர் 90ஸ் காலகட்டத்தில் இயக்குநராகவும் பல படங்களை இயக்கியிருக்கிறார். மேலும் இயக்குநராக எந்தவித கட்டும் இல்லாமலே இரவின் நிழல் (Iravin Nizhal) என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். கடந்த 2022ம் ஆண்டில் இப்படம் வெளியாகியிருந்த நிலையில், மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இந்த படத்தை அடுத்ததாக தொடர்ந்து முக்கிய வேடங்களில் திரைப்படங்களில் இவர் நடித்துவருகிறார். தமிழில் தனுஷின் (Dhanush) நடிப்பில் வெளியான இட்லி கடை (Idli Kadai) என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இதையடுத்து தற்போது தனது இயக்கத்திலே “நான் தான் சிஎம்” (Naan Thaan CM) என்ற புது படத்திலும் கதாநாயகனாக நடித்துவருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி மேடை ஒன்றில் பேசியிருந்த நடிகர் ஆர்.பார்த்திபன், நடிகை திரிஷா (Trisha) குறித்து பரபரப்பான கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதில் அவர், “குந்தவையை கொஞ்சநாள் வீட்டுக்குள்ளே குந்தவைக்கிறது நல்லது” என தெரிவித்துள்ளார். மேலும் இந்த கருது மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ஒரு படம் நல்ல இல்லனா அவங்க பரம்பரையையே திட்டுறாங்க.. கென் கருணாஸ் சொன்ன விஷயம்!

நடிகை திரிஷா குறித்து நடிகர் ஆர். பார்த்திபன் சொன்ன விஷயம் :

அந்த நிகழ்ச்சியில் ஆர். பார்த்திபன் பேசுகையில் , “இந்த குந்தவையை கொங்க நாளுக்கு வீட்டுக்குள்ளே குந்தைவைக்கிறது நல்லது. வெளியே வராமல் பாத்துக்கோங்க. அதனால பல பிரச்சனைகள் உண்டாகாமல் பார்த்துக்கலாம். சில கவிதையை ரசிக்கலாம் தவிர, அதை வெளியே சொல்லாமல் இருப்பது பெட்டர்னு நினைக்கிறேன்” என அதில் திரிஷா குறித்து அவர் தெரிவித்துள்ளார். இந்த கருத்து தற்போது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்திவருகிறது.

இதையும் படிங்க: திருமண நாள் சர்ப்ரைஸ்.. தனது மனைவிக்கு ரூ 15 கோடி மதிப்பு மிக்க பரிசை கொடுத்த அல்லு அர்ஜுன்!

நடிகர் ஆர். பார்த்திபனின் இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் பதிவு:

நடிகர் ஆர். பார்த்திபன் தெலுங்கில் நடிகர் பவன் கல்யாணின் உஸ்தாத் பகத் சிங் என்ற படத்தில் “நல்ல நாகப்பா” என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படமானது வரும் 2026 மார்ச் 19ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இதையடுத்து தனது இயக்கத்திலும், நடிப்பிலும் “நான் தான் சிஎம்” என்ற படத்திலும் நடித்துவருகிறார். இப்படம் முழுக்க அரசியல் மற்றும் நகைச்சுவை பாணியில் தயாராகிவருகிறதாக கூறப்படுகிறது. இது இறுதிக்கட்ட பணிகளில் இருக்கும் நிலையில், இந்த் 2026ம் ஆண்டிற்குள் வெளியாகும் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

Follow Us
Related Stories
Samantha: ஒரு நல்ல ஆண் மகனுக்கு எடுத்துக்காட்டே அந்த நடிகர்தான் – சமந்தா சொன்ன நடிகர் யார் தெரியுமா?
பள்ளியில் காதலித்தவர்களை தேடிச் செல்லும் நாயகன், நாயகி – ஓடிடியில் வெளியாகி உள்ள வித் லவ் படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ
இந்தியன் 3 பட ஷூட்டிங்.. தயாரிப்பு நிறுவனத்திற்கு கெடுவிதித்த சங்கர்.. பின்னணி என்ன?
மான்யவர் மோஹே விளம்பரத்தில் விஜய் தேவர்கொண்டா – ரஷ்மிகா ஜோடி.. 3 நாட்களில் 100 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை..
RJ Balaji: ஏப்ரல் 10 ரிலீஸ் இல்லை… இன்னும் பத்து நாளில் கருப்பு பட அப்டேட் வரும் – ஆர்.ஜே.பாலாஜி வெளியிட்ட வீடியோ!
மூணு வேளை சோத்துக்கு நாம படுற பாடு இருக்கே… சர்க்கார் பட ஷூட்டிங்கில் பேசிய விஜய் – ஓபனாக சொன்ன யோகி பாபு
ஹார்முஸ் கடல் வழியை மூடுவதாக ஈரான் அறிவிப்பு - பரபரப்பு தகவல்
இந்திய பெருங்கடலில் அமெரிக்காவின் தாக்குதலில் நீரில் மூழ்கிய ஈரானின் போர் கப்பல் - 87 பேர் பலி
மத்திய கிழக்கில் நீடிக்கும் பதற்றம் - பெட்ரோல், டீல் விலை அதிகரிக்குமா?
குவைத் துறைமுகத்தில் எண்ணெய் டேங்கர் அருகில் வெடிப்பு