R Madhavan: எனக்கு மிகவும் பெருமையளிக்கிறது.. அல்லு அர்ஜுனுக்கு நன்றி தெரிவித்த ஆர்.மாதவன் பதிவு!
R Madhavan thanks To Allu Arjun: பான் இந்திய சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் ஆர்.மாதவன். அந்த வகையில் ஆர்.மாதவன் மற்றும் துரந்தர் 2 படக்குழுவை பாராட்டி, நடிகர் அல்லு அர்ஜுன் எக்ஸ் பதிவை வெளியிட்டிருந்தார். அவருக்கு மாதவன் நன்றி தெரிவித்துள்ளார்.

அல்லு அர்ஜுன் மற்றும் மாதவன்
நடிகர் ஆர்.மாதவன் (R. Madhavan) தமிழ் சினிமாவை தொடர்ந்து தற்போது பாலிவுட் சினிமாவில் நடிப்பில் ஆர்வம் காட்டிவருகிறார். இவரின் நடிப்பில் தற்போது தொடர்ந்து வித்யாசமான கதைக்களத்தில் படங்கள் தயாராகிவருகிறது. அந்த வகையில் இவர் பான் இந்திய திரைப்படமாக வெளியாகிய துரந்தர் 1 மற்றும் 2 (Dhurandar Movies) படத்தில் மிக முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் இவர், “அஜய் சன்யால்” என்ற வேடத்தில் நடித்திருந்தார். பாகிஸ்தான் ஸ்பை கதைக்களத்தில் தயாராகியிருந்த இதை, இயக்குநர் ஆதித்ய தார் இயக்கியிருந்தார். துரந்தர் படத்தில் நடிகர் ரன்வீர் சிங் (Ranveer Singh), சாரா அர்ஜுன் (Sara Arjun), மாதவன், சஞ்சய் தத், ராகேஷ் பேடி, அர்ஜுன் ராம்பால் போன்ற பல்வேறு நட்சத்திர நடிகர்கள் இணைந்து நடித்திருந்தனர். துரந்தர் 1 படமானது கடந்த 2025 ஆண்டு டிசம்பர் மாதத்தில் வெளியாகி மிக பிரம்மாண்ட வெற்றியை பெற்றிருந்தது. இதையடுத்து, இதன் பார்ட் 2 துரந்தர் தி ரிவென்ஜ் (Dhurandar The Revenge) திரைப்படமானது, நேற்று 2026 மார்ச் 19ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகியுள்ளது.
அந்த வகையில் இன்னும் இப்படத்தின் தமிழ் மற்றும் மலையாளம் போன்ற மொழி பாதிப்பு படங்கள் திரையரங்குகளில் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் சமீபத்தில் துரந்தர் 2 படத்தை பார்த்த நடிகர் அல்லு அர்ஜுன் (Allu Arjun) அதை பாராட்டியுள்ளார். மேலும் துரந்தர் 2 படத்தில் நடித்திருந்த நடிகர் ஆர்.மாதவனின் நடிப்பு மற்றும் மற்ற நடிகர்களின் நடிப்பு குறித்து பாராட்டி எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்நிலையில் அதற்கு நன்றி தெரிவித்து நடிகர் ஆர்.மாதவனும் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவை வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: புதுப்பேட்டை 2 ஸ்கிரிப்ட் ஓவர்.. அப்டேட் கொடுத்த இயக்குநர் செல்வராகவன்!
நடிகர் ஆர். மாதவன் வெளியிட்ட எக்ஸ் பதிவு:
I’m so humbled touched and hyper motivated. This means so much coming from you, my dear brother I have watched all your films with complete awe of your abilities. And so it’s a fantastic feeling to know how mutual it is. God bless you .. and this being the first review online is… https://t.co/aHv3010Z7T
— Ranganathan Madhavan (@ActorMadhavan) March 18, 2026
அல்லு அர்ஜுனுக்கு நன்றி தெரிவித்து நடிகர் ஆர். மாதவன் கூறிய விஷயம்:
அந்த பதிவில் நடிகர் ஆர். மாதவன், “நான் மிகவும் நெகிழ்ச்சியுடனும், மிகுந்த உத்வேகத்துடனும் இருக்கிறேன். எனது அன்பான சகோதரன் அல்லு அர்ஜுன், உங்களிடம் இருந்து இந்த விமர்சனங்கள் வருவது எனக்கு மிகவும் பெருமையளிக்கிறது. உங்களின் திறமைகளை கண்டு, நான் உங்களின் அனைத்து படங்களையும் மிகவும் பிரம்மிப்புடன் பார்த்திருக்கிறேன். எனவே, இந்த உணர்வு பரஸ்பரம் என்பதை அறிவது ஒரு அற்புதமான எமோஷன்.
இதையும் படிங்க: இயக்குநர் வெற்றிமாறன் சொன்ன அந்த ஒரு வார்த்தைதான் நான் இந்த இடத்தில் இருக்க காரணம் – இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து ஓபன் டாக்
கடவுள் உங்களை எப்போதுமே பார்த்துக்கொள்வார். மேலும், என் வாழ்க்கைப் பயணத்தின் ஒரு திருப்புமுனையான தருணத்தில், இணையத்தில் இதுவே முதல் விமர்சனமாக இருப்பது எனக்கு மிகவும் மிகவும் விசேஷமானது” என அந்த பதிவில் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பான தகவல்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.