Jana Nayagan: தமிழ்நாடு முதலமைச்சர்.. ஜன நாயகன் பட டைட்டில் கார்ட் குறித்து பேசிய தயாரிப்பாளர்!

Venkat K Narayana About Jana Nayagan Movie Title Card: தமிழக முதலமைச்சர் தளபதி விஜய், நடிப்பில் இறுதியாக ஜன நாயகன் படமானது தயாராகியுள்ள நிலையில், இன்னும் வெளியாகவில்லை. சமீபத்தில் ஆங்கில பத்திரிகை நேர்காணலில் பேசிய இப்படத்தின் தயாரிப்பாளர், ஜன நாயகன் பட புது டைட்டில் கார்ட் எப்படி இருக்கும் என்பது குறித்து பேசியுள்ளார்.

Jana Nayagan: தமிழ்நாடு முதலமைச்சர்.. ஜன நாயகன் பட டைட்டில் கார்ட் குறித்து பேசிய தயாரிப்பாளர்!

ஜன நாயகன் பற்றி தயாரிப்பாளர் வெங்கட் கே நாராயணா

Updated On: 

11 May 2026 14:34 PM

 IST

கோலிவுட் சினிமாவில் இந்த 2026ம் ஆண்டில் அதிக ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் ஜன நாயகன் (Jana Nayagan). இந்த படத்தில் முன்னாள் நடிகரும், தற்போது தமிழக முதலமைச்சராக இருக்கும் தளபதி விஜய் (Tamil Nadu CM Thalapathy Vijay) நடித்திருந்தார். இது இவர் நடித்த கடைசி திரைப்படம் என்ற நிலையில், ரசிகர்கள் மத்தியில் சிறப்பான எதிர்பார்ப்பை ஏற்படுத்திவந்தது. ஆனால் அசென்சர் பிரச்சனைகளின் காரணமாக ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது, பின் இப்படம் முழுவதும் இணையத்தில் லீக்காகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அந்த வகையில் இத்தனை தடைகளை கடந்த பிறகும், இப்படம் திரையரங்குகளில் நிச்சயம் வெளியிடப்படும் என தயாரிப்பாளர் வெங்கட் கே நாராயணா (Producer Venkat K Narayana) உறுதியளித்திருந்தார். இன்னும் இரு வாரங்களில் இப்படம் வெளியாகிவிடும் என்றும், தற்போது இப்படத்தின் சென்சார் சான்றிதழ் வாங்குவதற்கான பணிகள் நடைபெற்றுகிறதாம்.

அந்த வகையில் கே.வி.என். புரொடக்ஷன்ஸ் நிறுவனர் வெங்கட் கே நாராயணா, சமீபத்தில் ஆங்கில பத்திரிகை நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார். அதில் ஜன நாயகன் படத்தின் புதிய டைட்டில் கார்டில் முதலமைச்சர் விஜய்யின் பெயர் எவ்வாறு இருக்கும் என்பது குறித்து பேசியுள்ளார்.

இதையும் படிங்க: ‘அன்பு எப்போதும் உரக்க ஒலிக்கும்’.. திரிஷா கிருஷ்ணன் வெளியிட்ட பதிவு!

ஜன நாயகன் பட டைட்டில் கார்டு பற்றி பேசிய தயாரிப்பாளர்:

சமீபத்தில் ஆங்கில பத்திரிகை நேர்காணலில் பேசிய ஜன நாயகன் பட தயாரிப்பாளர், அதில் “விஜய் முதலமைச்சரான பிறகு ஜன நாயகன் படம் வெளியாகும் நிலையில், நிச்சயம் அந்த டைட்டில் கார்ட் எப்படி இருக்கும் என அனைவருக்கும் தெரிந்ததே (தமிழக முதலமைச்சர் தளபதி விஜய்). அதே போல ஜன நாயகன் படத்திற்காக யு/ஏ 16+ சான்றிதழ் எங்களுக்கு, ஜனவரி 2ம் தேதியில் கூறப்பட்டிருந்தது. பின்னர், சென்சார் உறுப்பினர் ஒருவர் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில், அந்த பிரச்னை நீடித்தது.

இதையும் படிங்க: ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்.. ஜெயிலர் 2 பட ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்போது ரிலீஸ் தெரியுமா?

அதன்பிறகே உயர்நீதிமன்றத்தை அணுகினோம், அதற்கு பிறகு ரிவைசிங் கமிட்டி படத்தை பார்த்தார்கள். நாங்கள் சென்சார் தெளிவிற்காக காத்திருக்கிறோம், விரைவில் அது கிடைக்கும் என நினைக்கிறேன். இந்த படத்தின் பெரிய திரையில் பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள்” என அதில் அவர் கூறியிருந்தார். மேலும் அதில் அவர் முதல்வர் விஜய் குறித்து பாராட்டி பல விஷயங்களை பகிர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்வர் விஜயை பாராட்டி தயாரிப்பாளர் வெங்கட் கே நாராயணா வெளியிட்ட எக்ஸ் பதிவு:

ஜன நாயகன் படத்திற்கு இன்னும் சென்சார் கிடைக்காத காரணத்தால், வெளியீட்டு தேதி உறுதியாகவில்லை. விரைவில் இப்படத்தின் சென்சார் பிரச்சனைகள் முடிவுக்கு வந்து, ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

Follow Us
'நாளைய தீர்ப்பு' முதல் 2026 அரசியல் வெற்றி வரை.. விஜய்யின் வாழ்வில் தொடரும் ஆச்சர்யங்கள்!
ராஜமௌலியின் 'வாரணாசி' படப்பிடிப்பில் நீர் நெருக்கடி.. 150 தண்ணீர் லாரி கோரிக்கையை நிராகரித்த குடிநீர் வாரியம்!
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி