Sirai Movie: ரிலீஸிற்கு முன்பே சிறை பட இயக்குநருக்கு கார் பரிசு.. தயாரிப்பாளர் கொடுத்த சர்ப்ரைஸ்!
Producer Lalit Gifts Car To Sirai Movie Director: அறிமுக இயக்குநராக சிறை திரைப்படத்தின் மூலம் நுழைந்தவர்தான் சுரேஷ் ராஜகுமாரி. இவரின் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் விக்ரம் பிரபு நடிக்க, வரும் 2025 டிசம்பர் 25ல் வெளியாகிறது. இந்நிலையில் இயக்குநருக்கு தயாரிப்பாளர் புது காரை பரிசாக வழங்கியுள்ளார்.

சிறை படக்குழு
தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விக்ரம் பிரபு (Vikram Prabhu). இவரின் இயக்கத்தில் தமிழில் தொடர்ந்து திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுவருகிறது. அந்த வகையில் இவரின் நடிப்பில் இந்த 2025ம் ஆண்டில் 2வது வெளியாகவுள்ள படம்தான் சிறை (Sirai). இந்த படத்தை அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி (Suresh Rajakumari) என்பவர் இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தின் கதையை டாணாக்காரன் பட இயக்குநர் தமிழ் (Thamizh) எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சிறை படமானது உண்மையான கதையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளதாம். இந்த படத்தில் விக்ரம் பிரபுவுடன் அறிமுக நடிகர் அக்ஷய் குமார் என்பவரும் நடித்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதை தொடர்ந்து நேற்று 2025 டிசம்பர் 22ம் தேதியில் இப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றிருந்தது. அதில் இயக்குநர்கள் வெற்றிமாறன்(Vetrimaaran), பா.ரஞ்சித், தமிழ் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர்
இந்நிகழ்ச்சியானது பிரம்மாண்டமாக நடந்த நிலையில், அதில் தயாரிப்பாளர் லலித் குமார் (Lalit Kumar) சிறை பட இயக்குநரான சுரேஷ் ராஜகுமாரிக்கு புது காரை (New Car) பரிசாக வழங்கியுள்ளார். பொதுவாக தயாரிப்பாளர்கள் படம் வெளியாகி வெற்றிபெற்ற பிறகு இயக்குநர்களுக்கு பரிசு வழங்குவது வழக்கமாக கொண்டிருந்தாலும், சிறை படத்தின் ரிலிஸிற்கு முன்னே தயாரிப்பாளர் லலித் பரிசு கொடுத்துள்ளார். அப்போது இந்த சிறை படத்தின் மீது இவருக்கு எந்தளவிற்கு நம்பிக்கை இருக்கிறது என்பது இதன் மூலம் தெரியவருகிறது.
இதையும் படிங்க: 2025-ம் ஆண்டில் தமிழ் ரசிகர்களிடையே அதிக கவனம் ஈர்த்த நாயகிகள் யார் யார்? லிஸ்ட் இதோ
தயாரிப்பாளர் கார் வழங்கியது குறித்து இணையத்தில் வைரலாகும் பதிவு:
Even before the release of the film, producer Lalit of @7screenstudio has gifted a car to his #Sirai director Suresh 👏👌
Usually, producers do it after films attain big success but this time, it is being done before the release itself. A great show of confidence! pic.twitter.com/E8qWr2DCz7
— Siddarth Srinivas (@sidhuwrites) December 22, 2025
நடிகர் விக்ரம் பிரபுவின் நடிப்பில் உருவாகியுள்ள படம்தான் சிறை. இந்த படமானது ஒரு கதைதான் காதல் கதை தொடர்பான கதைக்களத்தில் உருவாகியுள்ளது. இதில் அறிமுக நடிகர் அக்ஷய் குமார் மிக முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் இந்த படத்தின் கதையை டாணாக்காரன் பட இயக்குநர் தமிழ் எழுதியுள்ளார். இவரின் எழுத்தில் வெளியாகும் 2வது போலீஸ் கதை களம் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தொடர்ந்து போலீஸ் தொடர்பான கதைகளை இயக்க காரணம், இவர் முன்பு தமிழக காவல்துறை அதிகாரியாக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தோழியின் திருமணத்தில் தசரா பட பாடலுக்கு நடனமாடிய கீர்த்தி சுரேஷ்.. ரசிகர்களிடையே வைரலாகும் வீடியோ!
கடந்த 2025 டிசம்பர் 22ம் தேதியில் இப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சியில் பிரம்மாண்டமாக நடந்த நிலையில், இந்த நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் லலித் குமார், தளபதி விஜய்க்கு என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருப்பதாக தெரிவித்திருந்தார். மேலும் இந்த 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ இவ்வளவு பெரியதாக வளர்வதற்குக் காரணமே தளபதி விஜய் தான் என அவர் தெரிவித்திருந்தார். தயாரிப்பாளர் லலித், மாஸ்டர் மற்றும் லியோ போன்ற விஜய் திரைப்படங்களை தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.