அரசன் பட ஷூட்டிங்கில் விஜய் சேதுபதி… தயாரிப்பாளர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு
Arasan Movie: நடிகர் சிலம்பரசன் நடிப்பில் தற்போது விறுவிறுப்பாக உருவாகி வரும் படம் அரசன். இந்தப் படப்பிடிப்பு தளத்தில் இருந்து தொடர்ந்து புகைப்படங்கள் வெளியாகி ரசிகரக்ளிடையே கவனத்தை ஈர்த்து வரும் நிலையில் தயாரிப்பாளர் வெளியிட்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அரசன் படக்குழு
நடிகர் சிலம்பரசன் நடிப்பில் தற்போது விறுவிறுப்பாக உருவாகி வரும் படம் அரசன். நடிகர் சிலம்பரசன் நாயகனாக நடித்து இயக்குநர் வெற்றிமாறன் இந்தப் படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு பூஜையுடன் தொடங்கியது. தற்போது கோவில்பட்டியில் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து தொடர்ந்து புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே தொடர்ந்து இணையத்தில் வைரலாகி வருகின்றது. முன்னதாக படத்தில் இருந்து அறிவிப்பு வீடியோ வெளியான போது படத்தின் மீது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. படம் வடசென்னையில் இரண்டாம் பாகமாக இருக்குமா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்த நிலையில் அது நிச்சயமாக தனுஷ் நடிப்பில் தான் வெளியாகும் என்றும் இது முற்றிலும் வேறு படம் என்று இயக்குநர் வெற்றிமாறன் வெளிப்படையாக தெரிவித்து இருந்தார்.
மேலும் இந்தப் படத்தில் வட சென்னை படத்தில் நடித்த ஆண்ட்ரியா உட்பட நடிகர்கள் பலர் நடிப்பதால் இது வட சென்னை படத்தில் பார்லல் யுனிவர்ஸாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்தப் படத்தில் ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடிப்பது போல நடிகர் விஜய் சேதுபதியும் முன்னணி வேடத்தில் நடிப்பதாக முன்பு அரசன் படக்குழு போஸ்டர் வெளியிட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருந்தது.
அரசன் பட ஷூட்டிங்கில் சிம்புவுடன் இருக்கு விஜய் சேதுபதி:
நடிகர் சிலம்பரசன் நடிப்பில் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த அரசன் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான வி கிரியேஷன்ஸ் சார்பாக தயாரிப்பாளர் கலைபுலி எஸ் தாணு தயாரித்து வருகின்றார். இவர் சமீபத்தில் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளதாவது, விஜய் சேதுபதி ‘அரசன்’ திரைப்படத்தின் படப்பிடிப்புத் தளத்திற்கு வருகை தந்து, இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் சிலம்பரசன் ஆகியோருடன் ஒரு மறக்க முடியாத தருணத்தைப் பகிர்ந்துகொண்டார் என்று ஒரு புகைப்படத்துடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Also Read… பராசக்தி ஒரு அரசியல் படம் மட்டுமல்ல – இயக்குநர் சுதா கொங்கரா
கலைபுலி எஸ் தாணு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Vijay Sethupathi graced the shooting spot of Arasan and shared a memorable moment with director Vetrimaaran and Silambarasan.#VetriMaaran @SilambarasanTR_ @VijaySethuOffl @anirudhofficial #SilambarasanTR #ARASAN pic.twitter.com/h6TNrvi9l9
— Kalaippuli S Thanu (@theVcreations) December 19, 2025
Also Read… சூர்யா 46 படப்பிடிப்பு தளத்தில் சூர்யா செய்த நெகிழ்ச்சி செயல் – வைரலாகும் வீடியோ