Vaadivaasal : சூர்யாவின் வாடிவாசல்.. மதுரையில் தொடங்கும் பிரம்மாண்ட ஷூட்டிங் எப்போது தெரியுமா?
Vaadivaasal Shooting Update : தமிழ் சினிமாவில் கொண்டாடும் நடிகராக இருப்பவர் சூர்யா. இவரின் நடிப்பில் பல படங்கள் வெளியாகி ஹிட்டாகியிருக்கிறது. இந்நிலையில் கடந்த 2022ம் ஆண்டில் இவரின் நடிப்பில் அறிவிக்கப்பட்டிருந்த படம் வாடிவாசல். இயக்குநர் வெற்றிமாறனின் இயக்கத்தில் உருவாக்கவுள்ள இந்த படத்தின் ஷூட்டிங் மதுரையில் தொடங்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் சூர்யாவிற்கு (Suriya) தென்னிந்திய அளவில் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர். இவரின் நடிப்பில் பல படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட்டாகியிருக்கிறது. இந்நிலையில் இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான படம் ரெட்ரோ (Retro). இந்த படமானது கடந்த 2025, மே 1ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியானது. இதை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கி, சூர்யாவுடன் இணைந்து தயாரித்திருந்தார். இந்த படத்தில் நடிகர் சூர்யாவுடன் பூஜா ஹெக்டே (Pooja Hegde) இணைந்து நடித்திருந்தார். இதை அடுத்து , இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜியின் (RJ Balaji) சூர்யா45 (Suriya 45)படத்தில் நடித்து வருகிறார். இந்த படமானது கிராமத்துக் கதைக்களத்துடன் மாஸாக உருவாகி வருகிறது. இதைத் தொடர்ந்து தமிழில் வெற்றிமாறனுடன் (Vetrimaaran) வாடிவாசல் (Vaadivaasal) என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்த படத்தை பற்றிய அறிவிப்புகளானது கடந்த 2022ம் ஆண்டிலே வெளியாகியிருந்தது. அதைத் தொடர்ந்து இந்த படமானது எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பானது மக்களிடையே அதிகம் எழும்பி வந்தது.
இதை தொடர்ந்து முன்னதாக நேர்காணல் ஒன்றில் பேசிய தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு, இந்த படத்தின் ஷூட்டிங் 2025 ஜூன் மாதத்தில் தொடங்கவுள்ளதாகக் கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட இவர் கொடுத்த அப்டேட் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தடை ஏற்படுத்தியுள்ளது.
வாடிவாசல் ஷூட்டிங் மதுரையில் தொடங்குகிறதா ?
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு, அதில் “சூர்யாவின் வாடிவாசல் படத்தின் ஷூட்டிங் மற்றும் படப்பிடிப்பு தளம் தொடர்பான விஷயங்கள் பேச்சுவார்த்தையில் இருந்து வருகிறது, மேலும் வாடிவாசல் படத்தின் ஷூட்டிங் வரும் 2025, ஜூன் மாதத்தில் தொடங்கவுள்ளது.
இந்த படத்தின் ஷூட்டிங் செட்டும் மதுரையில் போடப்படவுள்ளது, மேலும் நடிகர்கள் தங்குவதற்கு ஏதுவான இடமும் பார்க்கப்பட்டு வருகிறதாகத் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு கூறியுள்ளார். இந்நிலையில் இந்த தகவலானது சூர்யா ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆனந்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
வெற்றிமாறன் மற்றும் சூர்யாவின் கூட்டணியில் :
அகிலம் ஆராதிக்க “வாடிவாசல்” திறக்கிறது#VetriMaaran @Suriya_offl#VaadiVaasal pic.twitter.com/ZPWfCDkF3C
— Kalaippuli S Thanu (@theVcreations) January 15, 2025
இயக்குநர் வெற்றி மாறனின் இயக்கத்தில் இறுதியாக விடுதலை 2 படமானது வெளியாகியது. இந்த படமானது ஓரளவு வரவேற்பைப் பெற்ற நிலையில், அதைத் தொடர்ந்து தற்போது வாடிவாசல் படத்தை இயக்கும் பணியில் இறங்கியுள்ளார். இந்த படத்தை இவர் கடந்த 2022ம் ஆண்டிலேயே அறிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து இந்த படத்தின் ஷூட்டிங் 2 வருடங்களுக்குப் பின் வரும் 2025, ஜூன் மாதத்தில் தொடங்கவுள்ளது. நடிகர் சூர்யா இதில் ஜல்லிக்கட்டு வீரனாக நடிக்கவுள்ளார். வெற்றிமாறன் மற்றும் சூர்யாவின் கூட்டணியில் உருவாக்கவுள்ள முதல் படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.