பிரபல தயாரிப்பாளர் ஏ.வி.எம்.சரவணன் காலமானார்!

AVM Saravanan: தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களை ஏ.வி.எம் நிறுவனம் தயாரித்துள்ளது. அதில், சம்சாரம் அது மின்சாரம், சிவாஜி என பல வெற்றி படங்களை ஏ.வி.எம்.சரவணன் தயாரித்துள்ளார். பல ஸ்டார் நடிகர்களை உருவாக்கியுள்ளார்.

பிரபல தயாரிப்பாளர் ஏ.வி.எம்.சரவணன் காலமானார்!

ஏ.வி.எம்.சரவணன்

Updated On: 

04 Dec 2025 09:08 AM

 IST

பிரபல திரைப்பட தயாரிப்பாளரும், .வி.எம் நிறுவனத்தின் இயக்குநருமான ஏ.வி.எம்.சரவணன் (86) காலமானார். சென்னை வடபழனியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை வயது மூப்பு காரணமாக காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர், தமிழ்நாடு அரசின் கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றவர் ஆவார். .வி.மெய்யப்ப செட்டியாருக்கு பின்னர் அந்த நிறுவனத்தை அவரது மகன் ஏ.வி.எம்.சரவணன் நிர்வகித்து வந்தார். சிவாஜியின் பராசக்தி முதல் விஜய்யின் வேட்டைக்காரன் வரை பல தமிழ் படங்களை ஏவிஎம் நிறுவனம் தயாரித்துள்ளது. அதில், சம்சாரம் அது மின்சாரம், சகலகலா வல்லவன், மனிதன், எஜமான், சிவாஜி, வேட்டைக்காரன், மின்சார கனவு உள்ளிட்ட பல வெற்றி படங்களை ஏ.வி.எம். சரவணன் தயாரித்துள்ளார்.

Also Read… சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்த நாளில் ரீ ரிலீஸாகும் எஜமான் படம் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

ஏவிஎம் ஸ்டுடியோஸ் வளர்ச்சியில் முக்கியப் பங்கு:

1958ஆம் ஆண்டில் இருந்து ஏவிஎம் நிறுவனத்தின் சினிமா தயாரிப்பில் சரவணன் ஈடுபட்டு வந்தார். இவர் ஏவிஎம் மெய்யப்ப செட்டியாரின் மூன்றாவது மகன் ஆவார். ஏவிஎம் நிறுவனத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்கு ஆற்றியவர் என்றே கூறலாம், அந்த அளவுக்கு அந்நிறுவனத்தை, சரணவன் திறம்பட நிர்வகித்து வந்தார். எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் உள்ளிட்ட பல தலைமுறை நடிகர்களின் படங்களைத் தயாரித்துள்ளார். தற்போது அவரைத் தொடர்ந்து அவரது மகன் குகன் ஏவிஎம் நிறுவனத்தை நிர்வகித்து வருகிறார்.

வயது மூப்பால் உடல்நலக் குறைவு:

வயது மூப்பினால் ஏற்படும் உடல்நல பிரச்சினை காரணமாக சரவணன் கடந்த சில மாதங்களாக நடக்க முடியாமல் இருந்து வந்துள்ளார். அதோடு, சிறிது காலமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், வடபழனியல் ஏவிஎம் ஸ்டுடியோவில் உள்ள வீட்டில் தங்கியிருந்தார். இந்நிலையில், இன்று காலை 5.30 மணியளவில் அவர் காலமானார். அவரது உடல் ஏவிஎம் ஸ்டுடியோவில் உள்ள 3வது தளத்தில் அஞ்சிக்காக வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, இன்று பிற்பகல் 3 மணியளவில் ஏவிஎம் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட உள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

Also Read… காந்தாரா படம் தொடர்பான சர்ச்சை… மன்னிப்பு கோரிய நடிகர் ரன்வீர் சிங் 

திரைத்துறையினர் இரங்கல்:

ஏவிஎம் சரவணனின் மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவை அறிந்த திரைப்பிரபலங்கள் அவரது உடலுக்கு நேரில் சென்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ரஜினி, கமல் உள்ளிட்ட பல ஸ்டார்களின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் சரவணன் என்பதை நினைவுகூர்ந்து, திரையுலகினர் பலரும் அவருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Follow Us
Related Stories
ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கானின் கதாப்பாத்திரம் இதுவா? வைரலாகும் தகவல்
RJ Balaji: எனக்கு அந்த படத்தில் நடிச்சது பெரிய அவமானமா இருந்துச்சி – ஆர்.ஜே.பாலாஜி சொன்ன விஷயம்!
Samantha: ஒரு நல்ல ஆண் மகனுக்கு எடுத்துக்காட்டே அந்த நடிகர்தான் – சமந்தா சொன்ன நடிகர் யார் தெரியுமா?
பள்ளியில் காதலித்தவர்களை தேடிச் செல்லும் நாயகன், நாயகி – ஓடிடியில் வெளியாகி உள்ள வித் லவ் படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ
இந்தியன் 3 பட ஷூட்டிங்.. தயாரிப்பு நிறுவனத்திற்கு கெடுவிதித்த சங்கர்.. பின்னணி என்ன?
மான்யவர் மோஹே விளம்பரத்தில் விஜய் தேவர்கொண்டா – ரஷ்மிகா ஜோடி.. 3 நாட்களில் 100 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை..
ஹார்முஸ் கடல் வழியை மூடுவதாக ஈரான் அறிவிப்பு - பரபரப்பு தகவல்
இந்திய பெருங்கடலில் அமெரிக்காவின் தாக்குதலில் நீரில் மூழ்கிய ஈரானின் போர் கப்பல் - 87 பேர் பலி
மத்திய கிழக்கில் நீடிக்கும் பதற்றம் - பெட்ரோல், டீல் விலை அதிகரிக்குமா?
குவைத் துறைமுகத்தில் எண்ணெய் டேங்கர் அருகில் வெடிப்பு