என்னைக்குமே பொங்கலுக்கு தனிப்படம் வந்ததே இல்லை… 2 படங்கள் வெளியாகுவது சரிதான்- பராசத்தி பட தயாரிப்பாளர் பேச்சு

Producer Aakash Bhaskaran About Parasakhi Prepone: நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் விரைவில் வெளியீட்டிற்கு காத்திருக்கும் திரைப்படம்தான் பராசக்தி. இப்படத்தை தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்க, சுதா கொங்கரா இயக்கியுள்ளார். இந்த படமும் ஜன நாயகன் படமும் மோதல் குறித்து ரசிகர்கள் மத்தியில் விவாதங்கள் எழுந்த நிலையில், அது குறித்து தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வெளிப்படையாக பேசியுள்ளார்.

என்னைக்குமே பொங்கலுக்கு தனிப்படம் வந்ததே இல்லை... 2 படங்கள் வெளியாகுவது சரிதான்- பராசத்தி பட தயாரிப்பாளர் பேச்சு

தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன்

Published: 

29 Dec 2025 16:43 PM

 IST

கோலிவுட் சினிமாவில் சிறந்த இயக்குநர்களில் ஒருவராக இருந்து வருபவர்தான் சுதா கொங்கரா (Sudha Kongara). இவரின் இயக்கத்தில் உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள திரைப்படம்தான் பராசக்தி (Parasakthi). இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) கதாநாயகனாக நடிக்க, அவருடன் நடிகர்கள் ரவி மோகன் (Ravi Mohan) , ஸ்ரீலீலா (Sreeleela) மற்றும் அதர்வா உள்ளிட்ட பிரபலங்கள் மிக முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படமானது கடந்த 1965ல் நடந்த இந்தி திணிப்பிற்கு எதிரான மாணவர்களின் போராட்டத்தை அடிப்படையாக கொண்டு தயாராகியுள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி. பிரகாஷ் குமார் (GV.Prakash Kumar) இசையமைக்க, டான் பிக்ச்சர்ஸ் என்ற நிறுவனத்தின் கீழ் ஆகாஷ் பாஸ்கரன் (Aakash Bhaskaran) படத்தை தயாரித்துள்ளார். இவரின் தயாரிப்பில் இறுதியாக இட்லி கடை என்ற திரைப்படமானது வெளியாகியிருந்தது.

இந்நிலையில் தற்போது பராசக்தி படத்தின் ப்ரோமோஷன் தொடங்கி மிக பிரம்மாண்டமாக நடைபெற்றுவரும் நிலையில், சமீபத்தில் நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் ஆகாஷ் பாஸ்கரன் கலந்துகொண்டிருந்தார். அதில் பேசிய அவர், ஜன நாயகன் மற்றும் பராசக்தி பட மோதல் குறித்து, ரிலீஸ் தேதி முன்னே தள்ளிவைக்கப்பட்டது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

இதையும் படிங்க: ஓடிடியில் வெளியாகியுள்ள மம்முட்டியின் டோமினிக் அண்ட் தி லேடிஸ் பர்ஸ் படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ!

பராசக்தி பட புது ரிலீஸ் தேதி குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு :

பராசக்தி படத்தின் முன் வெளியீட்டு குறித்து பேசிய ஆகாஷ் பாஸ்கரன் :

நேர்காணலில் பேசிய தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், அதில் “பராசக்தி திரைப்படம் வழியில்லாமல் 4 நாட்களுக்கு முன்னே வெளியாகுவதாக அறிவிக்கப்பட்டுவிட்டது. ஏனென்றால் என்னிடம் பலரும் முன்னே வெளியிடுங்கள் என கூறினார்கள். திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தரர்கள் என அனைவரும் என்னிடம் கூறினார்கள் அதன் காரணமாகத்தான் இந்த படத்தை முன்பே ரிலீஸ் செய்வதாகிவிட்டது. பொங்கல் பண்டிகையில் மொத்தம் 10 நாட்கள் தொடர் விடுமுறை வரும் நிலையில், ஜன நாயகன் படத்திற்கும் பராசக்தி படத்திற்கும் 2 நாட்களுக்கு மட்டுமே இடைவெளி இருந்தால் நன்றாக இருக்கும்.

இதையும் படிங்க: ‘இது விஜய் அண்ணாவின் அன்பு சாம்ராஜ்யம்’- நெகிழ்ச்சி பதிவை வெளியிட்ட இயக்குநர் ரத்னகுமார்!

அப்போதுதான் இரு படங்களுக்கும் வசூலும் வரும் என பலரும் கூறினார்கள். மேலும் பராசக்தி படம் குறித்து தேவையில்லாத தகவல் மற்றும் மோதல் குறித்து பலரும் பேசிவருகிறார்கள். எப்போதுமே பொங்கலுக்கு குறைந்தது 10 திரைப்படங்களாவது வெளியாகும். அதன் பிறகு 5, 4 என குறைந்து தற்போது 1 அல்லது 2 படங்கள் வெளியாகிவருகிறது. என்னைக்குமே பொங்கலுக்கு ஒரு தனி படம் வந்ததே இல்லை. அதனால் 2 படங்கள் வெளியாகுவது என்பது சரியான விஷயம்தான். போட்டியில்லாத ஆரோக்கியமான வரவேற்பு இருக்கும் என நினைக்கிறேன் என்று அதில் மனம் திறந்துள்ளர்.

இன்று முதல் உயரும் ரயில் கட்டணம் - யாருக்கு பாதிப்பு?
டொரண்டோவில் நடந்த துப்பாக்கி சூட்டில் இந்திய மாணவர் பலி
இனி சம்பள அடிப்படையில் தேர்வு - அமெரிக்காவின் முடிவால் இந்தியர்களுக்கு அதிர்ச்சி
இனி ஆதாருடன் APAAR ஐடியும் கட்டாயம்.. CET தேர்வகர்களுக்கு மகாராஷ்டிரா அரசு உத்தரவு