Preethi Asrani: தளபதி விஜய் சினிமாவில் இருந்து போறது கஷ்டமாக இருக்கு.. நடிகை ப்ரீத்தி அஸ்ரானி வருத்தம்!

Preethi Asuranais Heartbreak: தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்துவரும் நடிகையாக இருந்து வருபவர் ப்ரீத்தி அஸ்ரானி. இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து அடுத்தடுத்த படங்கள் உருவாகிவருகிறது. இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய அவர் தளபதி விஜய்யின் சினிமா விலகுவது பற்றி பேசியுள்ளார்.

Preethi Asrani: தளபதி விஜய் சினிமாவில் இருந்து போறது கஷ்டமாக இருக்கு.. நடிகை ப்ரீத்தி அஸ்ரானி வருத்தம்!

தளபதி விஜய் மற்றும் ப்ரீத்தி அஸ்ரானி

Published: 

20 Sep 2025 08:30 AM

 IST

தமிழ் சினிமாவில் சசிகுமாரின் (Sasikumar) அயோத்தி (Ayothi) என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ப்ரீத்தி அஸ்ரானி (Preethi Asrani). இவரின் நடிப்பில் தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் தொடர்ந்து படங்கள் உருவாகி வருகிறது. அந்த வகையில் இவரின் நடிப்பில் தமிழில் வெளியீட்டிற்கு காத்திருக்கும் படம்தான் கிஸ் (Kiss) . இயக்குநர் சதீஷ் கிருஷ்ணன் இயக்கத்தில், நடிகர் கவினுக்கு (Kavin) ஜோடியாக ப்ரீத்தி அஸ்ரானி நடித்திருக்கிறார். இப்படமானது 2025 செப்டம்பர் 19ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் ஒன்றில் பேசிய ப்ரீத்தி அஸ்ரானி, தளபதி விஜய்(Thalapathy Vijay) சினிமாவில் இருந்து விலகுவது பற்றி வருத்தமாக பேசியுள்ளார்.

தளபதி விஜயுடன் படம் நடிக்கவேண்டும் என ஆசைப்பட்டநிலையில், அது நிறைவேறாமல் போனதாக வருத்தம் தெரிவித்துள்ளார். நடிகை ப்ரீத்தி அஸ்ரானி பேசியது பற்றி விவரமாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : பிரபாஸின் ‘கல்கி 2898ஏடி’படத்திலிருந்து தீபிகா படுகோன் நீக்கம் – காரணம் என்ன?

தளபதி விஜய் பற்றி நடிகை ப்ரீத்தி அஸ்ரானி பேசிய விஷயம்

அந்த நேர்காணலில் ஆரம்பத்தில் நடிகை ப்ரீத்தி அஸ்ரானி, கிஸ் படம் குறித்த தகவலை பகிர்ந்திருந்தார். மேலும் அவர் தொடர்ந்து பேசிய அவர், தளபதி விஜய் பற்றியும் பகிர்ந்துள்ளார். அதில் அவர், “விஜய் சார் சினிமாவில் இருந்து விலகுவது எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது, நான் எதிர்பார்க்கவில்லை. அவருடன் கடைசி படத்திலாவது நடித்திருக்கவேண்டும் என்ற ஆசை இருந்தது, ஆனால் அது நடக்கவில்லை.

இதையும் படிங்க : அதர்வாவின் தணல் படத்திற்கு இயக்குநர் வெங்கட் பிரபு கொடுத்த விமர்சனம் – என்ன சொல்லியிருக்கார் தெரியுமா?

நான் ஒரு நடிகராக நினைக்கும்போதே இவ்வளவு வருத்தமாக இருக்கிறது, இதே ஒரு ரசிகரின் இடத்திலிருந்து பார்க்கும்போது, சினிமாவில் இருந்து விஜய் சார் விலகினால் அவர்களின் மனநிலை எவ்வாறு இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் தளபதி விஜய்யை தியேட்டரில் பார்க்கும் விஷயமே போய்விடும். அவர் நடித்திருந்த பழைய படங்களை எல்லாம் மீண்டும் மீண்டும் பார்ப்பார்கள். அந்த விஷயத்தை யோசித்துப்பார்க்கும்போது கஷ்டமாக இருக்கிறது” என்று நடிகை ப்ரீத்தி அஸ்ரானி, நேர்காணலில் தெரிவித்திருந்தார். இது தற்போது தளபதி விஜயின் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.

நடிகை ப்ரீத்தி அஸ்ரானி லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் பதிவு

ப்ரீத்தி அஸ்ரானி புதிய படங்கள்

நடிகை ப்ரீத்தி அஸ்ரானி, தமிழில் கிஸ் படத்தை தொடர்ந்து, எஸ்.ஜே. சூர்யாவின் இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகும் கில்லர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படமானது முற்றிலும் மாறுபட்ட கதையில் உருவாகுவதாகவும் கூறப்படுகிறது. மேலும் மலையாளத்தில் பல்டி என்ற படத்திலும் நடித்திருக்கிறார். இப்படமானது வரும் 2025 செப்டம்பர் 26ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.