LIK: ரஜினிக்காக ஒத்தி வைக்கப்பட்ட லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ பட கிளிம்ப்ஸ் வீடியோ!
Love Insurance Kompany Movie Glimpse Release Postponed : நடிகர் பிரதீப் ரங்கநாதன் மற்றும் விக்னேஷ் சிவனின் கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படம். இந்த படத்தின் முதல் கிளிம்ப்ஸ்வீடியோ, இன்று 2025 ஆகஸ்ட் 1ம் தேதியில் வெளியாக இருந்தது. இந்நிலையில், தற்போது படக்குழு இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீட்டை ஒத்திவைத்துள்ளது.

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படம்
கோலிவுட் சினிமாவில் பிரபல இயக்குநர்களில் ஒருவராக இருந்து வருபவர் விக்னேஷ் சிவன் (Vignesh Shivan). இவரின் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் படம் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (Love Insurance Kompany). இந்த திரைப்படத்தில் முன்னணி கதாநாயகனாக நடிகர் பிரதீப் ரங்கநாதன் (Pradeep Ranganathan) நடித்துள்ளார். இந்த படமானது இவர் ஹீரோவாக நடிக்கும் 3வது திரைப்படமாகும். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி ஷெட்டி (Kirthi Shetty) நடித்துள்ளார். இந்த படத்தின் மூலம்தான் இவர் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். இந்த படமானது முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்துடன் மிகப் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கிறது. இந்நிலையில் இன்று 2025 ஆகஸ்ட் 1ம் தேதி இப்படத்தின் கிளிம்ப்ஸ் ( Glimpse ) வீடியோவை படக்குழு வெளியிடுவதாக அறிவித்திருந்தது.
இந்நிலையில், தற்போது இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீட்டைப் படக்குழு ஒத்திவைத்துள்ளது. தலைவர் ரஜினிகாந்த்தின் (Rajinikanth), கூலி (Coolie) திரைப்படத்தின் இசை வெளியீடு மற்றும் ட்ரெய்லர் ரிலீஸ் நிகழ்ச்சியை முன்னிட்டு, இப்படத்தின் கிளிம்ப்ஸ் காணொளியைப் படக்குழு ஒத்திவைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் புதிய ரிலீஸ் தேதியை விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க : மாபெரும் வெற்றி.. ‘தலைவன் தலைவி’ வசூல் நிலவரம் இதோ!
லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படக்குழு வெளியிட்ட அறிவிப்பு பதிவு :
The #FirstPunch of #LoveInsuranceKompany will now land a little later due to coolie audio & trailer launch.
#VigneshShivan @pradeeponelife @IamKrithiShetty@iam_SJSuryah @anirudhofficial #RaviVarman @iYogiBabu @Gourayy @PradeepERagav @muthurajthangvl@PraveenRaja_Off… pic.twitter.com/7n5Jcq5yOA
— Seven Screen Studio (@7screenstudio) August 1, 2025
லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ரிலீஸ் ஒத்திவைப்பா ?
நடிகர் பிரதீப் ரங்கநாதனின் நடிப்பில் உருவாகியிருக்கும், இப்படத்தில் நடிகர் எஸ். ஜே. சூர்யாவும் மிக முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும் பிரதீப் ரங்கநாதனின் தந்தை வேடத்தில், அரசியல் கட்சித் தலைவர் சீமான் நடித்துள்ளார். இந்த லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படமானது, முற்றிலும் அறிவியல் மற்றும் டைம் ட்ராவலிங் சார்ந்த கதைக்களத்துடன் உருவாகியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : பாக்ஸ் ஆபிஸில் கலக்கும் கிங்டம் படம்.. முதல் நாள் வசூல் விவரம்!
இந்த படத்தை வரும் 2025, செப்டம்பர் 18ம் தேதியில் வெளியிடப் படக்குழு அறிவிப்பை வெளியிட்டது. ஆனால் சமீப காலமாக இப்படக்குழு வெளியிட்ட எந்த போஸ்டர்களில் படத்தின் ரிலீஸ் தேதி இடம்பெறவில்லை. இதன் காரணமாக இப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டதா என பல்வேறு விதமாகச் சந்தேகங்களும் எழுந்தது. ஆனால் இது குறித்துப் படக்குழு எந்த அறிவிப்புகளையும் இதுவரை கூறவில்லை. ஒருவேளை இடத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவின் ரிலீஸ் போது, படத்தின் புது ரிலீஸ் தேதியை அறிவிப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் என கூறப்படுகிறது.