எனக்கு அந்த மாதிரியான படங்களில் நடிக்க ஆசை உள்ளது – நடிகர் பிரதீப் ரங்கநாதன்

Pradeep Ranganadhan: தமிழ் சினிமாவில் இயக்குநர் நடிகர் என்று பன்முகத்தன்மையோடு வலம் வருகிறார் பிரதீப் ரங்கநாதன். இவர் இயக்கிய படங்களும் இவர் நடித்தப் படங்களும் ரசிகர்களிடையே தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் தனக்கு எந்த மாதிரியான ஜானரில் நடிக்க விருப்பம் என்று நடிகர் பிரதீப் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

எனக்கு அந்த மாதிரியான படங்களில் நடிக்க ஆசை உள்ளது - நடிகர் பிரதீப் ரங்கநாதன்

பிரதீப் ரங்கநாதன்

Published: 

11 Oct 2025 12:46 PM

 IST

தமிழ் சினிமாவில் கோமாளி படத்தை இயக்கியதன் மூலம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றவர் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் (Pradeep Ranganathan). முதல் படத்தில் இயக்குநராக அறிமுகம் ஆன பிரதீப் ரங்கநாதன் 2-வதாக இயக்கிய லவ் டுடே படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகராகவும் அறிமுகம் ஆனார். அதன்படி பிரதீப் ரங்கநாதன் இயக்கிய படமும் நடிகராக நடித்தப் படமும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படங்களை தொடர்ந்து இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான படம் டிராகன். இந்தப் படத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்து இருந்த நிலையில் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த டிராகன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து  நடிகர் பிரதீப் ரங்கநாதன் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி மற்றும் டியூட் ஆகியப் படங்களில் பிசியாக நடிக்கத் தொடங்கினார். இதில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் பணிகள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கி இருந்த நிலையில் தொடர்ந்து படத்தின் வெளியீடு தள்ளிப்போகிறது. தீபாவளி பண்டிகைக்கு முன்னிட்டு இந்தப் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டியூட் படமும் அதே நாளில் வெளியாவதால் மீண்டும் வெளியீட்டை தள்ளி வைத்தது.

ஹாரர் காமெடி படங்களில் நடிக்க வேண்டும் என்று ஆசை உள்ளது:

இந்த நிலையில் தற்போது டியூட் படம் வருகின்ற 17-ம் தேதி அக்டோபர் மாதம் 2025-ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதன்படி சமீபத்தில் நாயகன் பிரதீப் ரங்கநாதன் அளித்தப் பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அதில் பிரதீப் ரங்கநாதன் பேசியதாவது, எனக்கு தி ராஜா சாப் படத்தின் ட்ரெய்லர் ரொம்ப பிடிச்சு இருந்தது. காஞ்சனா, சந்திரமுகி மாதிரி ஹாரர் காமெடி மாஸ் படங்களின் ரசிகன் நான். அந்த மாதிரியான படங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன், அது எனக்குப் பொருத்தமாக இருக்கும். பிரபாஸின் தி ராஜாசாப் படத்தைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என்றும் நடிகர் பிரதீப் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

Also Read… மோகன்லாலின் பீரியட் ஆக்‌ஷன் படமான விருஷபா ரிலீஸ் எப்போது? வைரலாகும் அப்டேட்!

இணையத்தில் கவனம் பெறும் பிரதீப் ரங்கநாதனின் பேச்சு:

Also Read… என்னது பிக்பாஸ் வீட்டில் போன் யூஸ் பன்றாங்களா? வைரலாகும் வீடியோ