ஓடிடியில் களமிறங்கும் பிரபு தேவா – சேதுராஜன் ஐபிஎஸ் தொடரின் அப்டேட்!
Prabhu Deva Ott Debut : நடிகர், நடன இயக்குநர், இயக்குநர் என பன்முகம் கொண்டவர் பிரபு தேவா. இவர் முதன்முறையாக சேதுராஜன் ஐபிஎஸ் என்ற தொடரின் மூலம் ஓடிடியில் களமிறங்கவுள்ளார். இந்த தொடரில் அவர் கடமை தவறாத காவல் அதிகாரியாக நடிக்கிறார்.

பிரபு தேவா
நடிகர், இயக்குநர், நடன இயக்குநர் என தான் கையில் எடுத்த அனைத்து துறைகளிலும் வெற்றிக்கொடி நாட்டியவர் பிரபு தேவா (Prabhu Deva). இந்தியன் மைக்கேல் ஜாக்சன் என அழைக்கப்படும் பிரபு தேவா தன் தனித்துவமான நடன அசைவுகளால் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்து வருகிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என இயக்குநராகவும் நடிகராகவும் தனக்கென தனி அடையாளத்தை பெற்றிருக்கும் பிரபு தேவா தற்போது முதன்முறையாக ஓடிடியில் (OTT) களமிறங்கவிருக்கிறார். சேதுராஜன் ஐபிஎஸ் என்ற தொடரில் சட்ட ஒழுங்கை கட்டிக்காக்கும் போலீஸ் அதிகாரியாக பிரபு தேவா நடிக்கவிருக்கிறார். இந்த தொடரை ரத்தசாட்சி படத்தை இயக்கிய ரஃபிக் இஸ்மாயில் இயக்கியுள்ளார். இந்த தொடர் குறித்து விரிவாக பார்க்கலாம்.
போலீஸ் அதிகாரியாக பிரபு தேவா
பொன் மாணிக்கவேல் படத்துக்கு பிறகு நடிகர் பிரபு தேவா போலீஸ் அதிகாரியாக களமிறங்கியிருக்கிறார். இந்த தொடர் குறித்து பேசிய பிரபு தேவா, சேதுராஜன் ஐபிஎஸ் என்பது சாதாரண காவல் அதிகாரி கதாப்பாத்திரம் அல்ல. கடமை, அடையாளம் மற்றும் அரசியல் எனும் புயலில் சிக்கித் தவிக்கிற மனிதரின் கதை. இந்த கதை தற்போதைய காலகட்டத்தில் மிகவும் அவசியமானது. இந்தத் தொடரில் காவல்துறை அதிகாரியாக நடிப்பதில் நான் பெருமகிழ்ச்சி கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க : வடிவேலு – பிரபுதேவாவின் கூட்டணி.. வெளியானது புதிய படத்தின் அசத்தல் அறிவிப்பு!
சேதுராஜன் ஐபிஎஸ்
Duty. Identity. Politics. ⚖️@PDdancing is Sethurajan IPS – raw, riveting, and unmissable.
Coming soon only on @SonyLIV📢@prorekha pic.twitter.com/dplImZQitb
— Rinku Gupta (@RinkuGupta2012) September 12, 2025
நடிகர் பிரபு தேவா விஜய்யுடன் இணைந்து தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். குறிப்பாக எதிர்மறை வேடத்தில் வேடித்து ரசிகர்களை பெரிதும் கவர்ந்தார். இதனையடுத்து பிரபு தேவா நடிப்பில் கடைசியாக தமிழில் பேட்ட ராப் திரைப்படம் வெளியாகியிருந்தது. இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதனைத் தொடர்ந்து மலையாளத்தில் காத்தனர், தமிழில் சிங்காநல்லூர் சிக்னல், வோல்ஃப், ஹிந்தியில் மஹாரானி போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
இதையும் படிக்க : லோகேஷ் கனகராஜின் LCUவில் இணைந்த வாத்தி பட நடிகை.. வைரலாகும் போஸ்டர்!
இயக்குநராக பிரபு தேவா
நுவொஸ்தனன்டே நேனொன்டா என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பிரபு தேவா. இந்தப் படம் தான் தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் உனக்கும் எனக்கும் என்ற பெயரில் வெளியாகியிருந்தது. மேலும் தமிழில் விஜய் நடிப்பில் போக்கிரி, வில்லு, ஜெயம் ரவி நடிப்பில் எங்கேயும் காதல், விஷால் நடிப்பில் வெடி ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார்.