பவர் ஸ்டார் பவன் கல்யாணின் உஸ்தாத் பகத் சிங் படத்தினை யார் எல்லாம் பார்க்கலாம்? வெளியானது சென்சார் அப்டேட்

Pawan Kalyans Ustaad Bhagat Singh Censor Update: தெலுங்கு சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் பவன் கல்யாண். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது.

பவர் ஸ்டார் பவன் கல்யாணின் உஸ்தாத் பகத் சிங் படத்தினை யார் எல்லாம் பார்க்கலாம்? வெளியானது சென்சார் அப்டேட்

உஸ்தாத் பகத் சிங்

Published: 

10 Mar 2026 17:04 PM

 IST

தெலுங்கு சினிமாவில் உச்ச நடிகராக ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெறும் நாயகனாக வலம் வருகிறார் நடிகர் பவன் கல்யாண். இவர் கடந்த 1996-ம் ஆண்டு முதல் தெலுங்கு சினிமாவில் நாயகனாக நடித்து வருகிறார். தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வரும் இவர் தற்போது அரசியலிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் அரசியல் மற்றும் சினிமா என இரண்டிலும் ஒரே நேரத்தில் கவனம் செலுத்தி வருகிறார் பவன் கல்யாண். அதன்படி நடிகர் பவன் கல்யாண் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் தே கால் ஹிம் ஓஜி. அதிரடி ஆக்‌ஷன் ட்ராமா பாணியில் உருவாகி இருந்த இந்தப் படம் விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூலில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் பவன் கல்யாண் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் உஸ்தாத் பகத் சிங். இந்தப் படத்தில் நடிகர் பவன் கல்யாண் உடன் இணைந்து நடிகர்கள் ஸ்ரீலீலா, ராஷி கண்ணா, நவாப் ஷா, அசுதோஷ் ராணா, ஆர்.பார்த்திபன், பி.எஸ். அவினாஷ், ராஜீவ் கனகலா, கௌதமி, போசானி கிருஷ்ண முரளி, ரெடின் கிங்ஸ்லி, சம்மக் சந்திரா, நாக மகேஷ், கிரி, நர்ரா ஸ்ரீனு, பஞ்ச வைஷ்ணவ் தேஜ், டெம்பர் வம்சி என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

பவன் கல்யாணின் உஸ்தாத் பகத் சிங் படத்தின் சென்சார் அப்டேட் இதுதான்:

இந்த நிலையில் இயக்குநர் ஹரிஷ் சங்கர் எழுதி இயக்கி உள்ள இந்தப் படம் வருகின்ற மார்ச் மாதம் 19-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படன் திரையரங்குகளில் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்தின் சென்சார் தொடர்பான அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி படத்திற்கு யு/ஏ சான்றிதழை சென்சார் குழு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… மூணு வேளை சோத்துக்கு நாம படுற பாடு இருக்கே… சர்க்கார் பட ஷூட்டிங்கில் பேசிய விஜய் – ஓபனாக சொன்ன யோகி பாபு

உஸ்தாத் பகத் சிங் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… RJ Balaji: ஏப்ரல் 10 ரிலீஸ் இல்லை… இன்னும் பத்து நாளில் கருப்பு பட அப்டேட் வரும் – ஆர்.ஜே.பாலாஜி வெளியிட்ட வீடியோ!

Follow Us
ஈரான் - இஸ்ரேல் போர் பரபரப்பு: 4 வாரங்களுக்கு டிவி செய்தி சேனல்களின் TRP வெளியீடு நிறுத்தம்
ஷோலே படக் காட்சி போல சம்பவம்… காதலனை விடுவிக்க மொபைல் டவரில் ஏறிய இளம்பெண்!
போர் விமான விபத்து.. இந்திய விமானப்படை விமானி வீரமரணம்..
நவீனகால திருமணங்கள்.. பழமை மாறாத சிந்தனை..