பவிஷ் நாராயணன் நடிப்பில் முடிவடைந்தது லவ் ஓ லவ் படத்தின் ஷூட்டிங்
A New Age romantic film Love Oh Love Shoot Wrapped: நடிகர் பவிஷ் நாராயணன் நடிப்பில் நி ஏஜ் ரொமாண்டிக் படமாக உருவாகி வந்தது லவ் ஓ லவ் படம். இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது.

லவ் ஓ லவ்
தமிழ் சினிமாவில் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம். நடிகர் பவிஷ் நாராயணன் நாயகனாக நடித்த இந்தப் படத்தை இயக்குநர் தனுஷ் எழுதி இயக்கி இருந்தார். இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. கடந்த 2025-ம் ஆண்டில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே நாயகனாக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. அறிமுகம் ஆன முதல் படத்திலேயே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றார். முதல் படத்தில் மாமா தனுஷ் இயக்கத்தில் உருவான இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றதை தொடர்ந்து அடுத்ததாக என்ன படம் உருவாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து இருந்தனர்.
இதனைத் தொடர்ந்து தற்போது இரண்டாவதாக நடிகர் பவிஷ் நாராயணன் நடிப்பில் உருவாகி உள்ள படம் லவ் ஓ லவ். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பூஜையுடன் தொடங்கியது. மேலும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது நிறைவடைந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது தற்போது வைரலாகி வருகின்றது.
பவிஷ் நாராயணன் நடிப்பில் முடிவடைந்தது லவ் ஓ லவ் படத்தின் ஷூட்டிங்:
நடிகர் பவிஷ் நாராயணன் நாயகனாக நடித்து உள்ள இந்தப் படத்தில் நடிகை நாக துர்கா நாயகியாக நடித்து உள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் கே.எஸ்.ரவிக்குமார், செல்வராகவன் மற்றும் வனிதா விஜயகுமார் நடித்து உள்ளனர். மேலும் இயக்குநர் மகேஷ் ராஜேந்திரன் இந்தப் படத்தை எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்தை ஷினிமா மீடியா தயாரித்து உள்ளது. இந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு இன்று அதிகாலை முடிவடைந்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… பிரபல மலையாள நடிகரின் படத்தில் கேமியோ தோற்றத்தில் நடித்துள்ளாரா அஜித் குமார்? வைரலாகும் தகவல்
லவ் ஓ லவ் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
‘#LoveOhLove’ – A New Age romantic film – Shoot Wrapped today. Get ready to enjoy soon ❤️💳 ✨#LOL @Zinema_media @CreativeEnt4 @dhananjayang @thinkmusicindia @Pavishvofficial @nagadurgaoffl @alyekmaliya @MuthaiahG @srikanth_nb @foxnmusic @Harshika_Ramesh @Dstudiospost pic.twitter.com/vP4MrzEN88
— Zinema Media (@Zinema_media) April 29, 2026
Also Read… Dhanush: வேஷ்டி சட்டை போடும்போது இருக்குற ஃபீல் – கலகலப்பாக பேசிய தனுஷ்!