விறுவிறுப்பாக விற்பனையாகும் பராசக்தி படத்தின் வெளியீட்டு உரிமை – படக்குழு வெளியிட்ட அப்டேட்
Parasakthi Movie Update: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் ரசிகர்கள் தற்போது மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் பராசக்தி. இந்தப் படத்தின் அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் படக்குழு புதிய அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது.

பராசக்தி
தமிழ் சினிமாவில் பல முன்னணி இயக்குநர்கள் உள்ளனர். அதில் பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. அதில் ரசிகர்களிடையே நன்கு பிரபலமானவர் இயக்குநர் சுதா கொங்கரா. இவர் இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணியாற்றிய பிறகு தமிழ் சினிமாவில் கட்ந்த 2010-ம் ஆண்டு வெளியான துரோகி என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார். இவர் இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படம் ரசிகர்களிடையே பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை. அதனைத் தொடர்ந்து 6 ஆண்டுகளுக்குப் பிறகு இயக்குநர் சுதா கொங்கரா இயக்கிய படம் இறுதிச்சுற்று. நடிகர் மாதவன் நாயகனாகவும் நடிகை ரித்திகா சிங் நாயகியாகவும் நடித்து இருந்தார். பாக்சிங்கை மையமாக வைத்து வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் சுதா கொங்கரா தமிழ் சினிமாவில் இயக்கிய படம் சூரரைப் போற்று. கொரோனா காலத்தில் உருவான இந்தப் படம் நேரடியாக ஓடிடியில் வெளியானது. படத்தைப் பார்த்த ரசிகர்கள் இது திரையரங்குகளில் வெளியாகி இருந்தால் மாபெரும் வரவேற்பைப் பெற்று இருக்கும் என்றும் வசூலில் நிச்சயமாக சாதனைப் படைத்து இருக்கும் என்று கருத்து தெரிவித்தனர். மேலும் இந்தப் படத்தில் நடிகர் சூர்யா நாயகனாக நடித்து இருந்த நிலையில் இவரது நடிப்பும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
விறுவிறுப்பாக விற்பனையாகும் பராசக்தி படத்தின் வெளியீட்டு உரிமை:
இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் சுதா கொங்கரா தற்போது நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து பராசக்தி படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் தற்போது வெளியீட்டிற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் படம் வருகின்ற 14-ம் தேதி ஜனவரி மாதம் 2026-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் படத்தின் வெளியீட்டு உரிமைகள் தற்போது விறுவிறுப்பாக விற்பனையாகி வருகின்றது. இதுகுறித்து தற்போது படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Also Read… ஓடிடியில் வெளியாகும் மாஸ்க் படம்… எங்கு எப்போது பார்க்கலாம்?
பராசக்தி படக்குழு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:
Area Rights Distribution And Theater Allotment Going on Full swing 💥🔥 #Parasakthi #Sivakarthikeyan #ParasakthiPongal @siva_kartikeyan @DawnPicturesOff @Sudha_Kongara @iam_ravimohan @Atharvaamurali @gvprakash @redgiantmovies_ @Aakashbaskaran @sreeleela14 @saregamasouth… pic.twitter.com/C2NsFyPUIw
— Parasakthi (@ParasakthiMovie) December 4, 2025
Also Read… கம்ருதினால் பிக்பாஸ் வீட்டில் தொடரும் சண்டை… வைரலாகும் வீடியோ!