Parasakthi: திரையரங்குகளில் வரவேற்பு.. பராசக்தி படத்தின் பிரத்யேக ‘ஸ்னீக் பீக்’ வீடியோவை வெளியிட்ட படக்குழு!
Parasakthi Movie Sneak Peek Video: இயக்குநர் சுதா கொங்கராவின் இயக்கத்தில், கடந்த 2026 ஜனவரி 10ம் தேதியில் வெளியான திரைப்படம்தான் பராசக்தி. இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்திருந்த நிலையில், திரையரங்குகளில் வரவேற்பை பெற்றுவருகிறது. இதை முன்னிட்டு தற்போது இப்படக்குழு ஸ்பெஷல் ஸ்னீக் பீக் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

பராசக்தி முன்னோட்ட வீடியோ
தமிழில் இந்த 2026ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகியிருந்த பெரிய பட்ஜெட் திரைப்படம்தான் பராசக்தி (Parasakthi). இந்த படத்தில் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) ஹீரோவாக நடிக்க, நடிகர் ரவி மோகன் (Ravi Mohan) வில்லனாக நடித்து அசத்தியிருந்தார். பல வருடங்களுக்கு பின் நடிகர் ரவி மோகன் நெகடிவ் வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருந்த “செழியன்” வேடத்தை ஒப்பிடும்போது, நடிகர் ரவி மோகன் நடித்திருந்த “திருநாதன்” வேடம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை இயக்குநர் சுதா கொங்கரா (Sudha Kongara) இயக்கியிருந்த நிலையில், ஜனவரி 10ம் தேதி முதல் பான் இந்திய மொழிகளில் இப்படமானது வெளியாகியிருந்தது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர்கள் ஜி.வி. பிரகாஷ் குமார் (GV.Prakash Kumar) இசையமைத்திருந்த நிலையில், படத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் சிறப்பான வரவேற்பைப் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படமானது வெளியாகி கிட்டத்தட்ட 6 நாட்களை கடந்துள்ள நிலையில், பொங்கல் விடுமுறையை முன்னிட்டு திரையரங்குகளில் மக்கள் கூட்டமும் அதிகரித்து வருகிறது. மேலும் ரசிகர்களிடையே ஆர்வத்தைத் தூண்டும் விதத்தில் படக்குழு ஸ்பெஷல் ஸ்னீக் பீக் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க: சூர்யாவின் ரசிகர்களே.. அதை தவிர்த்து கருப்பு படத்திலிருந்து இனி எந்த அப்டேட்டும் வராது?- ஆர்.ஜே.பாலாஜி பேச்சு!
பராசக்தி படத்திலிருந்து வெளியிடப்பட்ட ஸ்பெஷல் ஸ்னீக் பீக் வீடியோ பதிவு :
Here’s the Exclusive Sneak Peek of #Parasakthi
Running Successfully in Theatres near you 🧨🔥https://t.co/XJ13MHrQca#ParasakthiPongal@siva_kartikeyan @Sudha_Kongara @iam_ravimohan @Atharvaamurali @gvprakash @DawnPicturesOff @redgiantmovies_ @Aakashbaskaran @sreeleela14…
— DawnPictures (@DawnPicturesOff) January 16, 2026
பராசக்தி படத்தின் 5 நாள் முடிவு வசூல் எவ்வளவு :
இந்த பராசக்தி படமானது வெளியானதிலிருந்து மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இப்படம் இந்தி மொழி திணிப்பிற்கு எதிராக அமைந்திருக்கும் நிலையில், படத்தில் பாதி காட்சிகளில் மட்டுமே அதற்கான போராட்டங்கள் உயிரிழப்புகள் கட்டப்படுவதாகவும், மற்றபடியாக காதல் காட்சிகள் இப்படத்தில் அதிகமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படமானது சிவகார்த்திகேயனின் 25வது திரைப்படம் என்ற நிலையில், பெரும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த அளவிற்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்யவில்லை.
இதையும் படிங்க : விஜய் சேதுபதி தெலுங்கில் ஹீரோவாக அறிமுகமாகும் படம்.. டைட்டில் என்ன தெரியுமா?
இந்த படமானது வெளியான முதல் நாளிலே சுமார் ரூ.27 கோடிகளை வசூலித்ததாக படக்குழு அறிவித்திருந்தது. மேலும் 2வது நாளிலே சுமார் ரூ.51 கோடிகளுக்கு மேல் இப்படம் வசூலித்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், 5 நாட்களை கடந்தும் மொத்தமாகவே சுமார் ரூ.60 கோடிகள் கிட்ட வசூலித்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன. தொடர் பொங்கல் விடுமுறையையொட்டி, இப்படம் வெளியிடப்பட்ட நிலையில், பொங்கல் பண்டிகைக்கு வெளியான மற்ற படங்களுக்கு திரையரங்குகளில் இருக்கும் கூட்டம் கூட, இப்படத்திற்கு இல்லை என இணையதளங்களில் பேசப்படுகிறது.