பராசக்தி படத்திலிருந்து வெளியானது அடி அலையே பாடலின் ப்ரோமோ வீடியோ

Adi Alaye Song Promo | நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் பராசக்தி. இந்தப் படத்தின் முதல் பாடல் வருகின்ற வியாழன் அன்று வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்தப் பாடலின் ப்ரோமோ வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

பராசக்தி படத்திலிருந்து வெளியானது அடி அலையே பாடலின் ப்ரோமோ வீடியோ

பராசக்தி

Published: 

04 Nov 2025 17:54 PM

 IST

நடிகர் சிவகார்த்திகேயன் (Actor Sivakarthikeyan) நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் மதராஸி. இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் எழுதி இயக்கிய இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகும் படங்கள் சக்கைப்போடு போட்டு வருவது அவரது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது 25-வது படத்திற்காக தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வரும் சுதா கொங்கரா உடன் கூட்டணி வைத்தார். இந்தப் கூட்டணி குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியான போதே ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து இந்தப் படத்திற்கு பராசக்தி என்று பெயர் வைத்தனர். இந்தப் பெயர் முன்னதாக விஜய் ஆண்டனி பதிவு செய்து இருந்த நிலையில் இவர்கள் அறிவித்ததால் அதனை அவர் விட்டுக்கொடுத்துவிட்டு தனது படத்திற்கு சக்தி திருமகன் என்று பெயர் வைத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து பராசக்தி படத்தின் அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டது. அதன்படி படம் இந்தி எதிர்ப்பு கொள்கையை மையமாக வைத்து வெளியாக உள்ளது என்பது தெரிகிறது.

அடி அலையே பாடலின் ப்ரோமோ வீடியோ:

இந்தப் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்து இருந்த நிலையில் அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீலீலா நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் ரவி மோகன் மற்றும் அதர்வா முரளி இருவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். தொடர்ந்து இந்தப் படம் வருகின்ற ஜனவரி மாதம் 14-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் முதல் சிங்கிளான அடி அலையே என்ற பாடல் வருகின்ற 6-ம் தேதி நவம்பர் மாதம் 2025-ம் ஆண்டு வெளியாக உள்ள நிலையில் அந்த பாடலின் ப்ரோமோ வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளது.

Also Read… கேரளாவின் 2024-ம் ஆண்டிற்கான மாநில விருதை வென்றது பிரேமலு படம்

பராசக்தி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… பிக்பாஸ் வீட்டில் களேபரம்… கம்ருதின் – பிரவீன் இடையே மோதல்