இது கானா டைம்… மீசைய முறுக்கு 2 படத்திலிருந்து வெளியானது பப்பாளி பழமே பாடல்!

Pappali Pazhamey Music Video From Meesaya Murukku 2 | ஹிப் ஹாப் தமிழா ஆதி நாயகனாக நடித்து வரும் படம் மீசைய முறுக்கு 2. இந்த நிலையில் படத்தில் இருந்து இரண்டாவது பாடலை படக்குழு இன்று வெளியிட்டு உள்ளது.

இது கானா டைம்... மீசைய முறுக்கு 2 படத்திலிருந்து வெளியானது பப்பாளி பழமே பாடல்!

பப்பாளி பழமே

Published: 

08 Apr 2026 21:41 PM

 IST

சுயாதீன இசையமைப்பாளராக தனது பணியைத் தொடங்கியவர் ஹிப்ஹாப் தமிழா ஆதி. தொடர்ந்து பல பாடல்களை எழுதி இசையமைத்து பாடி மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் படங்களுக்கு இசையமைக்கும் முன்பே தமிழக மக்கள் மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா மக்களிடையே சுயாதீன இசையமைப்பாளராக கவனத்தை ஈர்த்து இருந்தார். அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் பாடல்களை பாடத் தொடங்கினார். அதன்படி மற்ற இசையமைப்பாளர்களின் இசையில் பாடி வந்த ஹிப்ஹாப் தமிழா ஆதி தமிழ் சினிமாவில் கடந்த 2015-ம் ஆண்டு இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான ஆம்பள என்ற படத்தில் இசையமைத்தது மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார். இவர் இசையமைப்பாளராக அறிமுகம் ஆன முதல் படமே மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து படங்களுக்கு இசையமைத்து வந்த ஹிப்ஹாப் தமிழா ஆதி தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து நடிகர் தயாரிப்பாளர் போன்ற அவதாரங்களையும் எடுத்தார். இவரது இசையில் வெளியான படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றது போல நடிப்பில் வெளியான படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அதன்படி தற்போது ஹிப்ஹாப் தமிழா மீசைய முறுக்கு 2 படத்தில் நடித்து வருகிறார்.

மீசைய முறுக்கு 2 படத்திலிருந்து வெளியானது பப்பாளி பழமே பாடல்:

இந்த மீசைய முறுக்கு படத்தை ஹிப்ஹாப் தமிழா ஆதியே எழுதி இயக்கி நடித்து வருகிறார். இந்தப் படத்தில் இவருடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றது. அதன்படி படத்தில் இருந்து இன்று பப்பாளி பழமே என்ற பாடல் வீடியோ வெளியாகி உள்ளது. இது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… வெளியானது அல்லு அர்ஜூனின் 22-வது படத்தின் டைட்டில் போஸ்டர்

மீசைய முறுக்கு 2 படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… கருப்பு படத்தின் அடுத்த சிங்கிள் ரிலீஸ் எப்போது? அப்டேட் கொடுத்த ஆர்.ஜே.பாலாஜி

Follow Us
தங்கம் வாங்குவதற்கு இது சிறந்த நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
ஆர்தமெஸ் 2 எடுத்த முதல் படத்தை பகிர்ந்த நாசா
புதிய கப்பல் வழித்தடம் - முடிவுக்கு வரும் எரிபொருள் பற்றாக்குறை
கேஸ் சிலிண்டருக்காக 40 நாட்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை - என்ன நடக்கிறது?