Pandiraaj : விஜய் சேதுபதியுடன் சண்டை.. இயக்குநர் பாண்டிராஜ் ஓபன் டாக்!

Pandiraaj About Vijay Sethupathi feud : தமிழில் பிரபல இயக்குநர்களில் ஒருவராக திகழ்பவர் பாண்டிராஜ். இவரின் இயக்கத்தில் தலைவன் தலைவி திரைப்படம் ரிலீஸிற்கு தயாராகிவருகிறது. இந்நிலையில், சமீபத்தில் இவர் பேசிய நேர்காணல் ஒன்றில், விஜய் சேதுபதியுடன் பிடிக்காமல் போனதாதற்குக் காரணம் பற்றி அவர் பேசியுள்ளார்.

Pandiraaj : விஜய் சேதுபதியுடன் சண்டை.. இயக்குநர் பாண்டிராஜ் ஓபன் டாக்!

பாண்டிராஜ் மற்றும் விஜய் சேதுபதி

Published: 

19 Jul 2025 12:30 PM

இயக்குநர் பாண்டிராஜ் (Pandiraaj) தமிழில் பிரபல மிக்க இயக்குநர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இவரின் இயக்கத்தில் இதுவரை பல படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட்டாகியிருக்கிறது. மேலும் இவரின் இயக்கத்தில் ரிலீசிற்கு காத்திருக்கும் படம்தான் தலைவன் தலைவி (Thalaivan Thalaivii). இந்த படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்க, விஜய் சேதுபதி (Vijay Sethupathi) மற்றும் நித்யா மேனன் (Nithya Menon) முன்னணி வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படமானது குடும்ப கதை மற்றும் விவகாரத்து கதை பற்றி உருவாகியுள்ளது. இந்தப் படமானது வரும் 2025, ஜூலை 25ம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பின்போதும், அதற்கு முன் இயக்குநர் பாண்டிராஜிற்கும்மற்றும் விஜய் சேதுபதியின் மத்தியில் கடும் பிரச்சனைகள் நடந்துவருவதாகக் கூறப்பட்டுவந்தது.

நிலையில், அதற்கான காரணம் பற்றி பாண்டிராஜ் விளக்கம் கொடுத்துள்ளார். சமீபத்தில் இது தொடர்பாக நேர்காணல் ஒன்றில் பேசிய அவர் , விஜய் சேதுபதியுடனான பிரச்சனையைப் பற்றிக் கூறியுள்ளார். அதைப் பற்றி விவரமாகப் பார்க்கலாம்.

இதையும் படிங்க : ‘கதகளி படம் என்னோடதுனு பலபேருக்கு தெரியாது’ – இயக்குநர் பாண்டிராஜ் ஓபன் டாக்!

இயக்குநர் பாண்டிராஜ் பேசிய விஷயம் :

அந்த நேர்காணலில் இயக்குநர் பாண்டிராஜ், “எனக்கு விஜய் சேதுபதிக்குப் பிரச்சனைக்குக் காரணம் என்னவென்றால், பாண்டிராஜ் என்ற ஒரு கேரக்டரை விஜய் சேதுபதியிடம் தவறாகச் சித்தரித்துள்ளனர். அதுதான் எங்களுக்குள் பிடிக்காமல் போனதற்குக் காரணமாக இருந்தது. இந்த பிரச்சனைகளின்போது நான் அவ்வப்போது விஜய் சேதுபதியை நிகழ்ச்சிகளில் சந்தித்திருக்கிறேன், நாங்களும் சண்டைபோட்டவர்கள் போல எல்லாம் பேசமாட்டோம். நன்றாகத்தான் பேசிக்கொள்வோம். அதைப்போல பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி நடுவராகக் கலந்துகொண்டார்.

இதையும் படிங்க : 96 பட இயக்குநரின் படத்தில் ஆக்ஷன் அவதாரத்தில் விக்ரம்.. ஷூட்டிங் எப்போது தெரியுமா?

அந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில், அவர் பேசியபோது, “ஒரு நண்பருடன் 15 வருடமாக பிரச்சனை, எனக்கு அவரை பிடிக்காது, அவருக்கு என்னைப் பிடிக்காதது. ஆனால் அவரை சமீபத்தில் சந்தித்தேன் அவரை போல ஒரு நண்பரைப் பார்க்கமுடியாது” எனக் கூறியிருந்தார். அந்த நண்பர் வேறு யாருமில்லை நான்தான். ஆனால் பலரும் அவர் மிஷ்கினை பற்றி பேசினார் எனக் கூறியிருந்தனர். அந்த நிகழ்ச்சியை அடுத்ததாக விஜய் சேதுபதி எனக்குக் கால் பண்ணி உங்களைப் பற்றி நிகழ்ச்சியில் பேசியிருக்கிறேன் பார்த்தீர்களா எனக் கூறினார் என்று இயக்குநர் பாண்டிராஜ் அந்த நேர்காணலில் பேசியிருந்தார். இந்த தகவலானது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இயக்குநர் பாண்டிராஜ் விஜய் சேதுபதியைப் பற்றிப் பேசிய வீடியோ :

எதிர்பார்ப்பில் தலைவன் தலைவி திரைப்படம் :

விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனனின் கூட்டணியில் ரிலீசிற்கு காத்திருக்கும் படம் தலைவன் தலைவி. இந்த படமானது விவாகரத்து, காதல் மற்றும் குடும்ப கதைக்களத்துடன் உருவாகியுள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் வரும் 2025, ஜூலை 25ம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.