Pa. Ranjith: சார்பட்டா பரம்பரை பார்ட் 2 கதைக்களம் இப்படிதான் இருக்கும் – பா. ரஞ்சித் கொடுத்த அப்டேட்!
Sarpatta 2 Movie Update: தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்களில் ஒருவராக இருந்து வருபவர் பா ரஞ்சித். இவரின் முன்னணி இயக்கத்தில் கடந்த 2021ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் சார்பட்டா பரம்பரை. இந்த படத்தின் பாகம் 2 உருவாகவுள்ள நிலையில், இப்படத்தின் கதைக்களம் பற்றி பா.ரஞ்சித் பேசியுள்ளார்.

பா. ரஞ்சித்தின் சார்பட்டா 2 படம்
கோலிவுட் சினிமாவில் கடந்த 2021ம் ஆண்டு ஓடிடியில் வெளியாகி மக்களிடையே மிகவும் பிரம்மாண்ட வரவேற்பை பெற்ற திரைப்படம் சார்பட்டா பரம்பரை (Sarpatta Parambarai). இந்த படத்தில் முன்னணி வேடத்தில் நடிகர் ஆர்யா (Arya) நடித்திருந்தார். இந்த படமானது பாக்சிங் தொடர்பான கதைக்களத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தை இயக்குநரும், தயாரிப்பாளருமான பா.ரஞ்சித் (Pa.Ranjith) இயக்கியிருந்தார். இதில் ஆர்யாவின் ஜோடியாக நடிகை துஷாரா விஜயன் (Dushara Vijayan) நடித்து அசத்தியிருந்தார். இந்த படமானது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று ஹிட்டான நிலையில், இப்படத்தின் பாகம் 2 எப்போது உருவாகும் என ரசிகர்கள் கேட்டுவந்தனர்.
அதை தொடர்ந்து சார்பட்டா 2 (Sarpatta 2) படமானது விரைவில் உருவாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய பா. ரஞ்சித். சார்பட்டா பரம்பரை பார்ட் 2 படத்தின் கதைக்களம் பற்றி பேசியுள்ளார். அவர் பேசியது பற்றி விவரமாக பார்க்கலாம்.
இதையும் படிங்க : கட்டிப்புடி கட்டிப்புடி டா பாடல் இப்படிதான் உருவாச்சு – எஸ்.ஜே.சூர்யா சொன்ன சுவாரஸ்ய சம்பவம்
சார்பட்டா பரம்பரை 2 படத்தின் கதைக்களம் பற்றி பா. ரஞ்சித் பேச்சு :
அந்த நேர்காணலில் இயக்குநர் பா. ரஞ்சித் பல்வேறு விஷங்களை பகிர்ந்திருந்தார். அதில் தொடர்ந்து சார்பட்டா பரம்பரை 2 படம் பற்றி பேசிய பா.ரஞ்சித், ” சார்பட்டா 2 படத்தின் ஸ்கிரிப்ட் ரெடியாக இருக்கு. மேலும் தற்போது வேட்டுவம் படத்தின் ஷூட்டிங் போய்க்கொண்டிருக்கியது. மேலும் அது கடந்த 2025 ஜூன் மாதத்தில் முடிக்கவேண்டிய படம். படப்பிடிப்பு நடக்க நடக்க பெரியதாகிக்கொண்டே போகிறது. இன்னும் 50 நாட்களுக்கு ஷூட்டிங் இருக்கு. அது முடித்தவுடன் அடுத்து சார்பட்டா பரம்பரை 2தான். இந்த படத்தின் ஷூட்டிங்கும் விரைவில் தொடங்கவிருக்கிறோம்.
இதையும் படிங்க : விபத்தில் சிக்கிய பிரபல மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் – என்ன நடந்தது?
அந்த படமும் அரசியாக கதைக்களம் சார்ந்த படமாக உருவாகவுள்ளது. நிச்சயமாக ஆர்வம் கொண்ட படமாக இருக்கும். அரசியலுடன் பாக்சிங்கும் இணைந்து இருக்கும். இது சார்பட்டா படத்தின் தொடர்ச்சியா? என்ன என்று தெரியாது ஆனால் இது சார்பட்டா 2 படமாக இருக்கும்” என்று இயக்குநர் பா. ரஞ்சித் அந்த நேர்காணலில் பேசியிருந்தார். இது தொடர்பான தகவல்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பா. ரஞ்சித்தின் தயாரிப்பில் வெளியான தண்டகாரண்யம் திரைப்படம் :
மகிழ்ச்சி ❤️❤️❤️❤️
Overwhelming response from our amazing crowd 🔥 #தண்டகாரண்யம் 🚩 #Thandakaaranyam https://t.co/2rMYE2lgaM #ThandakaaranyamRunningSuccessfully @beemji @officialneelam @LearnNteachprod @AthiraiAthiyan @KalaiActor #Dinesh @Riythvika @VinsuSam… pic.twitter.com/jtKbtSG6L6— pa.ranjith (@beemji) September 19, 2025
இயக்குநர் பா. ரஞ்சித், தயாரிப்பில் சமீபத்தில் வெளியான படம் தண்டகாரண்யம். இப்படத்தில் நடிகர் தினேஷ் மற்றும் கலையரசன் முன்னணி வேடத்தில் நடித்திருந்தனர். இந்த படமானது கடந்த 2025 செப்டம்பர் 19ம் தேதியில் உலகமெங்கும் வெளியானது.
இந்த படமானது அரசியல், ராணுவம் மற்றும் கிராமத்து மக்கள் சார்ந்த கதைக்களத்துடன் வெளியாகியுள்ளது. தற்போது இடமானது திரையரங்குகளில் மக்களிடையே வரவேற்பை பெற்றுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.